முக்கிய நடப்பு நிகழ்வுகள்-19-04-23

0
275

🔥முக்கிய நடப்பு நிகழ்வுகள் 🔥

  1. விலங்குகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1960ன் கீழ் G.S.R 193(E) இன் படி விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள் 2023ஐ மத்திய அரசு அறிவித்தது. உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளில் நாய்களை இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது
  2. உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என பிரத்யேக ஷோரூம் இல்லாத நிலையில் மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம்
    திறக்கப்படுகிறது.
  3. தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 மாவட்டங்களில் 39 ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
  4. தண்ணீர் பற்றாக்குறையை கோடை காலத்தில் சமாளிப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கென தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
  5. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப்பகுதியில் 8000 ஆண்டுகள் பழமையான, பாறையில் உருவாக்கப்பட்ட புதிய கற்காலத்தின் அரவைத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் அரவை பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
  6. பிரான்ஸில் நடைபெற்ற மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன் ஆனார். இது ஆண்ட்ரே வென்ற முதல் மாஸ்டர்ஸ் பட்டமாகும். அவரது டென்னிஸ் கேரியரில் இது அவருடைய 14-ஆவது சாம்பியன் பட்டம்.
  7. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
  8. சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி பிரேஸிலில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 6 தங்கம், 7 வெள்ளி, 11 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்றுள்ளனர்.