முக்கிய நடப்பு நிகழ்வுகள்- ஏப்ரல்-25

0
339

🔥முக்கிய நடப்பு நிகழ்வுகள் 🔥1. சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SECI) 35BU (பில்லியன் யூனிட்கள்) க்கு மேல் வர்த்தகம் செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 2022 – 2023நிதியாண்டில் அதன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வர்த்தக அளவில் 59% அதிகமாகும். அதே போல, மின் வர்த்தகத்தின் வருவாய், அதன் தொடக்கத்திலிருந்து முதல் முறையாக ரூ.10,000 கோடியைத் தாண்டியுள்ளது.2. இலங்கை நுவரெலியாவில் புராதனமான சீதை கோயில் உள்ளது. இந்த கோயிலின் நினைவு சிறப்பு தபால் தலையை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே வெளியிட்டுள்ளார்.3. நொய்டா ஆணையம் குடியிருப்பு, குழு வீடுகள் மற்றும் நிறுவன மனைகளின் ஒதுக்கீடு விகிதங்களை 6% முதல் 10% வரை அதிகரித்துள்ளது.4. துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் கண்டுபிடிப்பு வளாகத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவால் சென்னையில் இன்று திறந்து வைத்தார்.5 .மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் குமார் சிங், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலாளராக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமித்துள்ளார்.6. இகா ஸ்வியாடெக், அரினா சபலெங்காவை வீழ்த்தி ஸ்டட்கார்ட் பட்டத்தை வென்றார்.7. ஏடிபி பார்சிலோனா ஓபனில் கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்திய ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கோப்பை வென்றார்.