CURRENT AFFAIRS-21-03-2023

0
49

🔥 முக்கிய நடப்பு நிகழ்வுகள் 🔥

1. இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான 4வது பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டம் (டிசிடி) மாலத்தீவின் மாலேயில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே மற்றும் மாலத்தீவு பாதுகாப்பு செயலாளர் அப்துல்லா ஷமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2. சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கியான யுபிஎஸ், நிதி நெருக்கடியைத் தவிர்க்கவும், சந்தைத்தன்மையை மேம்படுத்தவும் சிறிய வங்கியான கிரெடிட் சூயிஸை எடுத்துக் கொள்ளும் என்று சுவிஸ் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

3. உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6வது முறையாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.இப்பட்டியலில் இந்தியா 136வது இடத்தில் உள்ளது.

4. தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்

5. மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசு இணைந்து நடத்தும் ‘சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்’ விழா நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்நிகழ்ச்சியின் போது ‘லோகோ’ மற்றும் nitt.edu என்ற இணையதள பக்கத்தை அறிமுகம் செய்தார்.

6. கேரள மாநிலத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையை பத்ம லட்சுமி பெற்றுள்ளார். பத்ம லட்சுமிக்கு கேரளாவின் தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7. திருமங்கலத்திற்கு அருகிலுள்ள குரையூரில் நாயக்கர்கள் காலத்தில் நீர்வள மேலாண்மை (குமிழித்தும்பு) பற்றி விவரிக்கும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

8. அமெரிக்காவில் நடந்து வரும் இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி முதலிடம் வகித்த வெஸ்லி கூல்ஹோப் – நியல் குப்ஸ்கி இணையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் போபண்ணா-எப்டென் 6-3, 2-6, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

9. எஃப்சி மெட்ராஸ் மகாபலிபுரத்தில் உலகத்தரத்திலான தங்கும் வசதியுடன் கூடிய கால்பந்து அகாடமியை தொடங்குகிறது. கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்களை ஒருங்கிணைக்கும் ஒரு கல்வித் திட்டத்திற்கு திறன்வாய்ந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு முழு ஊக்கத்தொகையை வழங்கும் நோக்கத்தோடும், விளையாட்டுகளில் உட்கட்டமைப்பு வசதிகளை தரும் நோக்கத்தோடும் உருவாக்கப்பட்டுள்ளது.

10. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம்மாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், அழிந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ள பறவை இனத்தைக் காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதாகும். பீகாரில் சிட்டுக்குருவியை மாநில பறவையாக குறிப்பிடத்தக்கது.