மார்ச்-01- பத்திரிகை உலகின் ஜாம்பவான் ‘ஏ.என்.சிவராமன்’ பிறந்த நாள்!

0
388

மார்ச் 01:
இன்று பத்திரிகை உலகின் ஜாம்பவான் ‘ஏ.என்.சிவராமன்’ பிறந்த நாள்!

👉கேரள மாநிலம் கொச்சியில் 1904 மார்ச் 1-ம் தேதி ஏ.என்.சிவராமன் பிறந்தார்.

👉இவரை வாஞ்சையுடன் ஏஎன்எஸ் என்று எல்லோரும் அழைப்பார்கள்.

👉விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

👉காந்திஜியின் ‘ஹரிஜன்’ நாளிதழின் தமிழ் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.

👉‘மணிக்கொடி’ இதழின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.

👉‘தினமணி’ நாளிதழில் 44 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்.

👉‘கணக்கன்’, ‘ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி’, ‘குமாஸ்தா’, ‘அரைகுறை வேதியன்’, ‘அரைகுறை பாமரன்’ ஆகிய புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.

👉இவரது கட்டுரைகள், பத்திரிகை தலையங்கங்களை வைத்து பலர் முனைவர் பட்டம் பெற்றனர்.

👉தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட 17 மொழிகள் அறிந்தவர்.

👉93-வது வயதில் அரபி மொழி கற்றார்.

👉நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெறும் வாய்ப்பு தேடிவந்தபோதும் ஏற்க மறுத்துவிட்டார்.

👉விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கிய தாமிர பட்டயத்தை ஏற்றார்.