மான்டேசொரி கல்வி முறை என்றால் என்ன?

0
408

மான்டேசொரி கல்வி முறை என்றால் என்ன?மாண்டிசோரி கல்வி முறை:இதன் கல்வி முறை முழுமையாக செய்முறை தொடர்பானது.குழந்தைகள் தாமாகவே செயல்முறை மூலம் கல்வி கற்பர்.குழந்தைகள் தனித்தனியாகவோ / குழுவாகவோ இணைந்து தாமாக கல்வி கற்பர்.நன்மைகள்:மாணவர் படைப்பாக்கத் திறன் கூடும்.தாமாகவே புதிது புதிதாக குழந்தைகள் கற்பர்.பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்:மொழிகணிதம்நடைமுறை வாழ்க்கை பயிற்சிசமூகத்துடனான அணுகுமுறைகலைஇசை & பலப்பலகண்டுபிடிப்பாளர்மரியா மாண்டிசோரிஇவர் இத்தாலியைச் சேர்ந்தவர்.மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதன்முதலில் இதை புதிய யுக்தியாக முயற்சித்து அதில் வெற்றி கண்டார்.இதை சாதாரண மாணவர்கள் இன்னும் நன்றாக கற்க முடியும் என்பதை உணர்ந்து நாளடைவில் அவர்களுக்கும் இதை விரிவுபடுத்தினார்.வயது முறை:0–18 வயது வரை0–3 வீட்டிலேயே இம்முறையில் கற்பிக்கலாம்.வகுப்பறைகள்:பொதுவாக சாதாரண பள்ளிகளில் 16 வயது என்றால் 10வது18 வயது என்றால் 12வது என்ற அடிப்படையில் கற்பிக்கப்படும்.மாண்டிசோரி பள்ளிக்கல்வி முறையில் ஒரே வகுப்பறையில் 3–6 வயதுடையவர்கள்மற்றொரு வகுப்பில் 6–9 வயதுடையோர்மற்றொரு வகுப்பில் 9–12 என்பதுபோல் வயதுக்கேற்ப பிரித்து கல்வி கற்பிப்பர்.பாடங்கள் தேர்வு:இக்குழந்தை இப்பாடங்களைத்தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.தமக்கு பிடித்த பாடம் எதுவென்றாலும் அது கணிதமோ, அறிவியலோ, மொழியோ இன்ன பிற அவர்களுக்குப் பிடித்த வகுப்பில் அமர்ந்து அவர்கள் கல்வி கற்கலாம்.ஆசிரியர்கள்:ஆசிரியர்கள் குழந்தைகளை கண்காணிப்பர்.மாணவர் தாமாக கற்க அவர்களை வழிபடுத்துவர்.அதுவும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதுபோல் அன்றி, எதுவாயினும் அதை குழந்தைகள் சுதந்திரமாக செய்ய அவர்களை அனுமதிப்பர்.அதாவது கற்பிக்க மாட்டார்கள், ஆனால் அவர்களை செயல்படுத்தவிட்டு அதை இப்படித்தான் செய்ய வேண்டுமென நல்வழிப்படுத்துவர்.பிற பயிற்சிகள்நம் வீட்டில் நாம் ஒரு பொருளை எடுத்தால் அதை மீண்டும் அதே இடத்தில் தான் வைக்க வேண்டும் என்பதை அறிவோம்.இம்முறையை அவர்களுக்கு பயிற்சியாக வழங்குவர்.அதாவது, ஒரு பொருள் என்றால் அதை இங்குதான் வைக்க வேண்டும், சோப்பு என்றால் குளியலறை, புத்தகம் என்றால் கற்கும் அறை என எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்குதான் வைக்க / அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை வழங்குவர்.முன்பெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் மாநிலத்திலேயே ஒருசில பள்ளிகள் தாம் இருந்துள்ளன.தற்போது மாவட்டத்துக்கு 4–5 பள்ளிகள் என்ற அளவில் அதிகரித்துள்ளன.