பிப். 27: இன்று ‘விஜய் சிங் பதிக்’ பிறந்த நாள்

0
334

பிப். 27: இன்று ‘விஜய் சிங் பதிக்’ பிறந்த நாள்!👉சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் விஜய் சிங் 👉பதிக் உத்தரப்பிரதேசம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் 1882 பிப்ரவரி 27-ம் தேதி பிறந்தார். 👉இவரது தாத்தாவும், அப்பாவும் 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தில் பங்கேற்றவர்கள். 👉எனவே, இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டப் புரட்சி இயக்கத்தில் இணைந்தார்.👉அவரிடம் ஜமீன்தார்களின் உதவியுடன் ஆங்கிலேயர்கள் வரி வசூலித்து வந்தனர். 👉இதை எதிர்த்து ஒவ்வொரு கிராமத்திலும் கிஸான் பஞ்சாயத்தின் கிளைகளை தொடங்கினார். 👉காந்தியடிகள் சத்தியாக்கிரகத்தைத் தொடங்குவதற்கு முன்னரே விவசாயிகளின் நலனுக்காக ‘பிஜவுலியா கிஸான் அந்தோலன்’ என்ற பெயரில் சத்தியாகிரக இயக்கத்தை நடத்தினார்.👉இவரது பணிகளால், காந்தியடிகள், லோகமான்ய திலகர் ஆகியோர் கவரப்பட்டனர். 👉‘பதிக் ஒரு நல்ல சிப்பாயைப் போல பணியாற்றுபவர்’ என்று காந்தியடிகள் இவரைப் பாராட்டியுள்ளார்.👉1920-ல் ராஜஸ்தான் சேவா சங்கம் என்ற அமைப்பை தொடங்கினார்.👉வளமான சமுதாயம் உருவாக வேண்டும் என்றால், ஆணும் பெண்ணும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார் விஜய் சிங்.