SSC MTS-2023 தேர்வு அறிவிப்பு

0
392

*SSC MTS-2023 தேர்வு அறிவிப்பு:*கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு*தேர்வு எழுதும் மொழி:* தமிழ்/ஆங்கிலம்/ஹிந்திவிண்ணப்பம் செய்வதற்கு கடைசி நாள்: 17.02.2023.கடைசி வாரம் விண்ணப்பம் செய்வது கடினம் என்பதால் 10.02.2023 க்கு முன்னர் விண்ணப்பம் செய்வது நன்று.*பதவிகளின் விவரம்:*பன்முக உதவியாளர்(MTS)–10880ஹவால்தார் (Havaldar in CBIC and CBN) – 529*கல்வித் தகுதி:* 10ம் வகுப்பு தேர்ச்சி/ SSLC Pass*வயதுத் தகுதி:* 01.01.2023 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு. வயது வரம்பு பற்றிய விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள இத்துடன் அனுப்பப்பட்டுள்ள SSC MTS அறிவிக்கையை படிக்கவும்.*தேர்வு செய்யப்படும் முறை:*கணினிவழி தேர்வு*Session 1*( தகுதி தேர்வு)1.கணிதம்-20வினாக்கள்-60Marks.2.திறனறிதல் (General Intelligence & Reasoning)-20 வினாக்கள்-60 marks.மொத்தம் 120 மதிப்பெண்கள்.*மேற்கண்ட Session 1 தேர்வுக்கு நெகடிவ் மதிப்பெண் கிடையாது. இது தகுதி தேர்வு மட்டுமே. இதில் OC-30% , OBC- 25%,SC/ST-20% மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது. அதாவது 40 வினாக்களில் SC/ST பிரிவினர் 8 வினாக்களுக்கும், OBC பிரிவினர் 10 வினாக்களுக்கும், முற்பட்ட வகுப்பினர் 12 வினாக்களுக்கும் சரியான விடை அளித்தால் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைவார்.*Session2*(வெற்றியை கணக்கிடும் தேர்வு)1. பொது அறிவு( General  Studies) -25 வினாக்கள் 75 marks.2. ஆங்கிலம் (General English-25 வினாக்கள் 75 marks.*Session 2 .இதுவே உங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய தேர்வு.*இதில் நெகடிவ் மதிப்பெண் உண்டு* *SSC MTS தேர்வில் வெற்றி பெற நீங்கள் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தை நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்தால் உறுதியாக வேலை கிடைப்பது உறுதி.ஹவால்தார் பணியிடங்களுக்கு கூடுதலாக உடற்தகுதி தேர்வு நடக்கும்.*விண்ணப்பிக்கும் இணையதளம்:*  https://ssc.nic.in/*விண்ணப்பக் கட்டணம்:* ரூ. 100, இருப்பினும் அனைத்து பிரிவை சார்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.