பிப்.22: இன்று ‘ராபர்ட் பேடன் பவெல்’ பிறந்த நாள்

0
296

பிப்.22: இன்று ‘ராபர்ட் பேடன் பவெல்’ பிறந்த நாள்!👉சிறுவர், சிறுமியருக்கான சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ராபர்ட் பேடன் பவெல். 👉இங்கிலாந்தில் 1857 பிப்ரவரி 22-ம் தேதி ராபர்ட் பிறந்தார். 👉1876-ல் ராணுவத்தில் இணைந்தார். 👉சிறு படையைக் கொண்டு அற்புதமான போர்த்தந்திரங்களைக் கையாண்டு, எதிரிகளை நிலைகுலையச் செய்தார்.👉இவரது திறமைகளைப் பாராட்டிய ஆப்பிரிக்க சுதேசிகள் ‘ஒருபோதும் தூங்காத ஓநாய்’ என்பதைக் குறிக்கும் ‘இம்பிசா’ என்ற பெயரில் அழைத்தனர். 👉43 வயதிலேயே மேஜர் ஜெனரல் பதவியை எட்டிவிட்டார். 👉1907-ல்‘ஸ்கவுட்டிங் ஃபார் பாய்ஸ்’ என்ற நூலை ராணுவத்தினருக்கான பாடப்புத்தகமாக எழுதினார்.👉பெண்களும் இந்த இயக்கத்தில் சேர முன்வந்தனர். 👉1910-ல்சிறுமியர் சாரணர் இயக்கத்தை தொடங்கினார். 👉ராணுவத்தை விட்டு, சாரணர் இயக்கத்தை வழிநடத்தினார். 👉இந்த இயக்கத்துக்காக 30 ஆண்டுகள் கடுமையாகப் பாடுபட்டார். 👉‘ஸீ ஸ்கவுட்’, ‘கப்ஸ் ஸ்கவுட்’, ‘ரோவர் ஸ்கவுட்’, ‘ஏர் ஸ்கவுட்’ என உருவாக்கி, மக்களின் அனைத்துப் பிரிவினரையும் இணைக்கக்கூடிய இயக்கமாக இதை மாற்றினார்.