TNPSC NOTES-HAR GOVIND GURANA

0
302

ஜன. 09: இன்று விஞ்ஞானி ஹர் கோவிந்த் குரானா பிறந்த நாள்! 👉மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர், உயிரியல் விஞ்ஞானி ஹர் கோவிந்த் குரானா. 👉1922 ஜனவரி 9-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் ராய்ப்பூர் கிராமத்தில் இவர் பிறந்தார். 👉1945-ம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.👉அரசு உதவித்தொகை பெற்று இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். 👉1953-ல்காமன்வெல்த் ஆய்வுக் கழகத்தில் கரிம வேதியியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.  👉மூலக்கூறு உயிரியல் துறையில் ஆய்வு செய்த இவர் ஆர்.என்.ஏ. பற்றிய ஆய்வுகளுக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு 1968-ல் வழங்கப்பட்டது. 👉மேலும் இவர் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்ததற்கு அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம் பெற்றார்.👉இவரது பங்களிப்பை போற்றும் வகையில், விஸ்கான்சின் மேடிசன் உயர் தொழில்நுட்பத் துறையும் இந்திய- அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து குரானா புரோகிராம் என்ற அமைப்பை 2007-ல்தொடங்கின. 👉செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்த அறிவியல் மேதை குரானா 89-வது வயதில் காலமானார்.