1. கீழ்க்கண்டவற்றுள் எது உயிரற்ற கோளம் ஆகும்? I. வளிக்கோளம் II. பாறைக்கோளம் III. நீர்க்கோளம்
2. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 – புவி மேலோடு திடமாகவும், இறுக்கமாகவும் உள்ளது. கூற்று 2 – கடலடி தளத்தை விட கண்டப் பகுதிகளில் உள்ள புவிமேலோடானது அதிக தடிமனுடன் காணப்படுகிறது.
3. புவி மேலோட்டில் கீழ்காணும் எவை அதிகமாக காணப்படுகிறது? I. சிலிகா (Silica) II. அலுமினியம் (Aluminium) III. கார்பன் (Carbon)
4. புவியின் கவச அடுக்கில் கீழ்கண்டவற்றுள் எது அதிகமாக காணப்படுகிறது? I. சிலிகா II. மெக்னீசியம் III. அலுமினியம்
5. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 – புவியின் கருப பகுதி நைஃப் (NIFE) என அழைக்கப்படுகிறது. கூற்று 2 – கருவ பகுதியின் உட்பகுதி திரவநிலையிலும், வெளிப்பகுதி திடநிலையிலும் உள்ளது.
6. 2012ம் ஆண்டு முதல் உலகின் மிக ஆழமான பகுதி என்ற அந்தஸ்தைப் பெற்ற இடம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
7. கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? I. புற செயல்முறைகள் சூரிய சக்தி மற்றும் புவி ஈர்ப்பு விசையால் இயக்கப்படுகின்றன. II. அக செயல்முறைகள் புவியின் உட்புற வெப்பத்தால் இயக்கப்படுகின்றன.
8.கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? I. வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைவதையும், அழிவதையும் வானிலை சிதைவு எனலாம். II. வானிலை சிதைவுக்கு உட்பட்ட பாறை துகள்கள் மிக அதிக அளவில் புவி ஈர்ப்பு விசையினால் கீழ்நோக்கி சரிகின்ற செயல் பருப்பொருள் அசைவு ஆகும்.
9. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? I. வானிலை சிதைவின் தன்மை மற்றும் சிதைவின் அளவானது இடத்திற்கு இடம், பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபடும். II. இயற்பியல் சிதைவு, ரசாயன சிதைவு, உயிரின சிதைவு போன்றவை வானிலைச் சிதைவுக்கான எடுத்துக்காட்டாகும்.
10. பாறை நொறுங்குதல் என்பதை கீழ்க்காணும் எதன் வகையாகும்?
11. ரசாயன சிதைவுறுதல் கீழ்க்காணும் எந்த பகுதிகளில் அதிகமாக நடைபெறுகிறது? I. நிலநடுக்கோட்டு பகுதிகள் II. வெப்பமண்டல பகுதிகள் III. மிதவெப்ப மண்டலப் பகுதிகள்
12. கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? I. சிதைவடைந்த நுண்ணிய பாறை துகள்கள் மற்றும் சிதைந்த உயிரினங்களின் கலவையே மண்ணாகும். II. ஆக்ஸிகரணம், கார்பன் ஆக்கம், கரைதல், நீர்க்கொள்ளல் ஆகிய காரணிகளால் ரசாயன சிதைவு நடைபெறுகிறது.
13. கூற்று (A): புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்று படலம் வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது. காரணம் (R): புவியை வளிமண்டம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசையே காரணமாகும்.
14. வளிமண்டல கூட்டமைப்பு தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு ⅰ) வாயுக்கள், நீராவி மற்றும் தூசுகள் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுகின்றன. ⅱ) நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்சிஜன் (21%) வளிமண்டலத்தின் நிரந்தர வாயுக்களாகும். ⅲ) நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் (99%) அதனுடைய விகிதத்தில் எவ்வித மாறுதலுக்கும் உட்படாமல் நிரந்தரமாக காணப்படுகின்றன.
15. பொருத்துக: A) ஆர்கான் – 1) 0.93% B) கார்பன்- டை ஆக்சைடு – 2) 0.03%), C) நியான் – 3) 0.0018 D) ஹீலியம் – 4) 0.0005% E) ஓசோன் – 5) 0.00006%
16. கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு ⅰ) சூரியக்கதிர்வீசல் மற்றும் சூரிய வெப்ப அலைகளிலிருந்து வரும் வெப்பத்தினை கார்பன்-டை ஆக்ஸைடு ஈர்த்து வளிமண்டலத்தை வெப்பமாக வைத்துக் கொள்கின்றது. ⅱ) நைட்ரஜன் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் ஒரு செறியூட்டும் வாயுவாக உள்ளது. ⅲ) சூரியனிலிருந்து வரும் கேடு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து ஓசோன் படலம் காக்கின்றது. ⅳ) வளிமண்டலத்திலுள்ள திடத்துகள்கள் நீர்க்குவி புள்ளிகளாக செயல்பட்டு நீராவி சுருங்குதல் நிகழ்கிறது.
17. வெப்ப அடுக்கு தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் தவறானவற்றை த் தேர்ந்தெடு ⅰ) இடையடுக்கிற்கு மேல் காணப்படும் அடுக்கு, வெப்ப அடுக்கு ஆகும். ⅱ) வெப்ப அடுக்கின் மேல் பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது ‘ஹோமோஸ்பியர்’ (Homosphere) என அழைக்கப்படுகின்றது. ⅲ) வெப்ப அடுக்கின் கீழ்பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி ‘ஹெட்ரோஸ்பியர்’(heterosphere) என அழைக்கப்படுகின்றது.
18. மேகமூட்டம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு ⅰ) மேகங்கள் வளிமண்டலத்தில் சூரியக்கதிர் வீச்சினை அதிக அளவு பிரதிபலிக்கிறது. ⅱ) இது புவியின் மீது விழும் வெப்பத்தினைத் தடுக்கிறது. ⅲ) மேகம் இல்லாத பாலைவனப் பகுதிகளில் வெப்பத்தின் அளவு குறைவாகவும் மேகங்கள் காணப்படும் இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாகவும் காணப்படும்.
19. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? I. நீரானது நீர்கொள் பாறைகள் வழியாக ஊடுருவி சென்று நிலத்தின் அடியில் சேமிக்கப்படுவது, நிலத்தடி நீர் என்று அழைக்கப்படுகிறது. II. நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல் மட்டநிலையே நிலத்தடி நீர்மட்டம் எனப்படுகிறது.
20. தென் அமெரிக்க கண்டத்திற்கும், தெற்கு ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இடையில் உள்ள கடல் எது?
21. பெருங்கடல்களையும் அதன் சராசரி ஆழத்தையும் பொருத்துக. I. பசிபிக் பெருங்கடல் – a) 1205 மீ II. அட்லாண்டிக் பெருங்கடல் – b) 3926 மீ III. இந்திய பெருங்கடல் – c) 4026 மீ IV. ஆர்டிக் பெருங்கடல் – d) 3963 மீ
A. I-c, II-b, III-d, IV-a
B. I-c, II-b, III-a, IV-d
C. I-d, II-a, III-c, IV-b
D. I-b, II-a, III-c, IV-d
None
22. ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் என்பவருக்கு அமெரிக்க அதிபரின் சுதந்திரத்தின் பதக்கம் எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
23. கண்டத்திட்டு பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? I. நிலத்திலிருந்து கடலை நோக்கி மென் சரிவுடன் கடலில் மூழ்கியுள்ள ஆழமற்ற பகுதி கண்டத்திட்டு ஆகும். II. கண்டத்திட்டு பகுதிகள் பெரும்பாலும் மென்சரிவை கொண்ட சீரான கடற்படுகை ஆகும்.
24. உலகில் செழிப்பான மீன்பிடி தலங்களுள் ஒன்றாக உள்ள கடலடி நிலத்தோற்றம் எது?
25. 1) உயிர்க்கோளம் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு ⅰ) புவியின் 3 வது கோளம் உயிர்க்கோளமாகும். ⅱ) இது தாவர இனங்களும் விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது. ⅲ) கடல் மட்டத்திலிருந்து வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு (Troposphere) வரை சுமார் 20கி.மீ. உயரம் வரை உயிர்க்கோளம் பரவியுள்ளது.
26. தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு ⅰ) சூழ்நிலை மண்டலம் என்பது பல்வேறு உயிரினங்களின் தொகுதி ஆகும். ⅱ) இச்சூழ்நிலை மண்டல அமைப்பில் வாழ்கின்ற உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, பிற உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளான நிலம், மண், காற்று, நீர் போன்றவற்றோடு தொடர்பு கொள்கின்றன. ⅲ) சூழ்நிலை மண்டலம் மிகச் சிறிய அலகிலிருந்து உலகளாவிய சூழ்நிலை மண்டலம் அல்லது சூழல் கோளம் வரை வேறுபட்டுக் காணப்படுகிறது.
27. சூழ்நிலை மண்டலம் எத்தனை அடிப்படைக் கூறுகளைக் கொண்டுள்ளது?
28. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு ⅰ) முதல்நிலை நுகர்வோர் – ஆந்தை, முதலை ⅱ) இரண்டாம் நிலை நுகர்வோர் – வரிக்குதிரை, ஆடு ⅲ) மூன்றாம் நிலை நுகர்வோர் – ஆந்தை, முதலை
29. சிதைப்போர்கள் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) இவ்வுயிரினங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாதவை ஆகும். (ii) உயிருள்ள மற்றும் உயிரற்ற தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை ஆகும்.
30. ஆற்றல் கூறுகள் தொடர்பான கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு ⅰ) உயிர்க்கோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும், ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. ⅱ) சூழ்நிலை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூறுகளின் வழியாக, சூரிய ஆற்றல் பிற ஆற்றல் வடிவங்களாக மாற்றப்படுகிறது. ⅲ) சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஓட்டத்தில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் மற்றும் சிதைப்போர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
31. சுற்றுச்சூழலின் வகைப்பாடுகளுள் அல்லாதது எது?
32. மக்கள் தொகையியல் (demography) குறித்த சரியான கூற்று எது? 1. கிரேக்க மொழியில் Demos என்றால் மக்கள் என்று பொருளாகும். 2. கிரேக்க மொழியில் Graphis என்றால் கணக்கிடுதல் என்று பொருளாகும்.
33. எந்த நூற்றாண்டில் ஏற்பட்ட ப்ளேக் நோயினால் 30 முதல் 60 சதவீதம் மக்கள் இறந்தனர் என கணக்கிடப்பட்டுள்ளது.
34. தமிழ்நாட்டில் வாழும் ஒரு நபரின் சராசரி ஆயுட்காலம் என்பது 2010-2014 ஆண்டின்படி?
35. நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய முதல் நாடு எது?
36. இந்தியாவில் எந்த ஆண்டில் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது?
37. 20ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை…….
38. மிகப்பறந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம்……………….
39. கூற்று (A): ஒரு நிலவரைப்படத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளைப் புரிந்து கொள்ளப் பயன்படாது. காரணம் (R): இது பொதுவாக நிலவரைப்படத்தின் அடிப்பகுதியில் இடது அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.
40. கூற்று (A): செங்குத்துக் கோடுகளும் இடைமட்டக் கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் உருவாக்கும் வலை அமைப்பிற்கு இணைப்பாயங்களின் அமைப்பு. காரணம் (R): கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் செல்லும் கோடுகள் முறையே வடக்கைக்கோடுகள், கிழக்கைக்கோடுகள் என்று அழைக்கின்றன.
41. உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக் கோள்கள்……
42. நிலவரைப்படத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்…
43. டிசம்பர் 26, 2004 அன்று சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் மதிப்பு…………..
44. கூற்று 1: நெருக்கடி நிலை மேலாண்மை என்பது பேரிடர் மேலாளரின் கடமையின் ஒரு பகுதியாகும். கூற்று 2: பேரிடர் மேலாண்மையின் மரபு சார்ந்த அணுகுமுறை என்பது செயல்பாடுகளின் வரிசைகளின் பல படிநிலைகளைக் கொண்டுள்ளது. இது பேரிடர் மேலாண்மை சுழற்சி எனப்படும்.
45. கூற்று 1: புவித்தட்டுகளின் நகர்வால் புவியின் ஒரு பகுதியில் திடீரென ஏற்படும் நில அதிர்வை நிலநடுக்கம் என்கிறோம். கூற்று 2: நிலநடுக்கம் புவித்தட்டுகளின் மையத்தில் ஏற்படுகிறது.
46. கூற்று: இந்தோனேசியா அதிக நிலநடுக்கப் பகுதிகளைக் கொண்டுள்ளது. காரணம்: ஜப்பானை விட அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதால் இந்தோனேசியாவில் தான் உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
47. ஆழிப்பேரலையானது 10 – 30 மீட்டர் உயரத்தில் மணிக்கு _________ கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
48. __________ ஆண்டு பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் சகிப்புத் தன்மையில்லா நாடுகளில் சிரியா, நைஜீரியா மற்றும் ஈராக்கிற்கு அடுத்ததாக இந்தியா உள்ளது என முடிவு வெளியிடப்பட்டது.
49. கூற்று 1: வெப்பமான மற்றும் வறண்ட காலத்தில் அடர்ந்த மரங்கள் காணப்படும் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுகிறது. கூற்று 2: காட்டுத்தீயினால் மக்கள் வசிக்கக் கூடிய இடங்கள் புகைமூட்டத்தால் பாதிக்கப்படுகின்றன. தீப்புகை காற்றில் பரவும்போது சுவாசம் தொடர்பான இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகிறது.
50. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?