TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-14(9TH HISTORY FULL)

0
3173

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-14(9TH HISTORY FULL)

TET PAPER-02 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் நமது தமிழ் மடல் இணையதளம் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.48 தேர்வுகள் கொண்ட இத்தேர்வு தொகுப்பானது அக்டோபர் 18 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும். முழு மாதிரி தேர்வில் 150 வினாக்களும் மற்ற தேர்வுகளில் 50 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் .  தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும் . காலை 7 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தேர்விற்கான லிங்க் வழங்கப்படும்.தேர்விற்கான  லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்.

இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று பயன் பெறுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

TEST BATCH SCHEDULECLICK HERE

JOIN OUR WHATSAPP GROUPCLICK HERE

JOIN OUR TELEGRAM-CLICK HERE

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-14(9TH HISTORY FULL)

Welcome to your 9TH HISTORY NEW

1. மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராய்வது பற்றிகுறிப்பிடப்படும் இயல் எது?

2. கூற்று 1: தொல்பழங்கால மக்கள் மானுடப் படைப்பாற்றலின் முன்னோடிகள். கூற்று 2: புவியின் நீண்ட நெடிய வரலாற்றை நிலவியல் ஆய்வாளர்கள் நெடுங்காலம், காலம், ஊழி என்று பிரிக்கிறார்கள்.

3. கூற்று 1: ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் என்ற குரங்கினத்திலிருந்து நவீன மனித இனம் தோன்றியது. கூற்று 2: இன்று அழிந்துபோய்விட்ட இந்த ஆஸ்ட்ரோலாபித்திஸைன் இனம் மனிதனுக்கு மிக நெருங்கிய உறவுடைய இனமாகும்.

4. கூற்று 1: தங்களது சூழ்நிலைக்கு சிறந்த முறையில் தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் பிழைத்து, அதிகமாக இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகும் செயல்முறை இயற்கைத் தேர்வு எனப்படும். கூற்று 2: தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் தனது சந்ததியை அதிக எண்ணிக்கையில் விட்டுச் செல்லும் ஓர் இனம் பிழைத்து நீண்டு வாழ்வதை குறிக்கிறது.

5. கூற்று 1: எழுத்து முறையின் தோற்றம் மனித வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாகும். கூற்று 2: எழுத்துமுறை அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் தொல்பழங்காலம் என்று குறிப்பிடப்படுகிறது.

6. சரியான கூற்றைத் தேர்வு செய்க. அ) எகிப்திய அரசர் பாரோ என்ற சொல்லால் அழைக்கப்பட்டனர். ஆ)எகிப்தியர் மரணத்திற்கு பிறகு வாழ்வு இல்லை என்றனர். இ) அடிமை முறை இல்லை, சிறை பிடிக்கப்பட்டோர் அடிமைகளாக ஈ) பதப்படுத்தப்பட்ட இறந்த உடலை மம்மி என்று அழைத்தனர்.

7. பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?

8. கூற்று 1: இடைக்கற்காலத்திற்கு முன்பு தொடக்ககாலக் சமூக மக்கள் குழுக்களாகவே இருந்தன. கூற்று 2: இந்த குழுக்கள் என்பது நாடோடிகளாக இருந்த வேட்டையாடுவோர், உணவு சேகரிப்போர் ஆவர்.

9. ஹரப்பா நாகரிகம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

10. கூற்று 1: ஹரப்பா மக்களுக்கு ஆடு மாடு வளர்த்தல் பற்றி தெரிந்திருந்தது. கூற்று 2: யானை உள்ளிட்ட பல விலங்குகள் பற்றி அறிந்திருந்தனர்.

11. சங்க காலத்திற்குப் பிறகும் பல்லவர் காலத்திலும் நடப்பட்ட நடுகற்கள் எந்த நிலப்பகுதியில் பெரிதும் காணப்படுகின்றன?

12. "கூடல்ஊர் ஆகோள் பெடு தியன் அந்தவன் கல் "என்னும் செய்தி கீழ்க்கண்ட இடங்களில் எங்கு காணப்பட்டது?

13. பொருத்துக : I. புளியமான் கோம்பை – a) 1878 II. இந்திய கருவூலம் மற்றும் புதையல் சட்டம் – b) 2006 III. பழங்கால பொருட்கள் மற்றும் கலை கருவூலங்கள் சட்டம் – c) 1958 IV. தொல்லியல் ஆய்வுக் களங்கள் மட்டும் எஞ்சிய பொருட்கள் சட்டம் – d) 1972

14. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும், குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?

15. (i) பொருள் பரிமாற்றத்துக்கான ஊடகமாக நாணயங்கள் சங்க காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. (ii) மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள். (iii) ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ் முசிறி உடனான வணிகத்தைக் குறிப்பிடுகிறது. (iv) தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணைக்குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது.

16. (i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள். (ii) மெகஸ்தனிஸ் எழுதிய ‘இண்டிகா’ என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது. (iii) ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மௌரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார். (iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.

17. உத்தரவு தவறு என்றால் ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும் என்பது யாருடைய கருத்து ஆகும்?

18. லாவோட்சேவின் போதனைகளில் அல்லாதவை?

19. பழைய ஈரானிய இந்தோ-ஆரிய மொழி பேசியோர் தொடக்கத்தில் ஒரே குழுவை சார்ந்தவர்களாக தான் இருந்திருக்க வேண்டும் என்பது யாருடைய கூற்றாகும்?

20. உயிருள்ள, உயிரற்ற என அனைத்து பொருள்களுக்கும் ஆன்மாவும் உணர்வும் உண்டு அவற்றால் வலியை உணர முடியும் என்று போதித்தவர் யார்?

21. i) பௌத்தமதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது. ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித தோமையர் கிறிஸ்தவக் கொள்கைகளைப் பரப்பினார். iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும். iv) டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.

22. i) ரோமப் பேரரசர் மார்க்கஸ் அரிலியஸ் ஒரு கொடுங்கோலன். ii) ரோமுலஸ் அரிலிஸ், ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர். iii) பேபியஸ் ஒரு புழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார். iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.

23. i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது. ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது. iii) விர்ஜில் எழுதிய ‘ஆனெய்ட்’ ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது. iv) ஸ்பார்ட்டகஸ், ஜுலியஸ் சீஸரைக் கொன்றவர்

24. i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார். ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர். iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது. iv) ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.

25. i) கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் தோல்வியடைந்தது. ii) ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜூலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார். iii) ரோமின் மீது படையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். iv) பௌத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.

26. சீனா _____ அரச வம்சத்தால் கிபி. 589ல் ஒன்றிணைக்கப்பட்டது.

27. வெடி மருந்து _____ ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது.

28. கூற்று : ஜெருசலேமை துருக்கியர் கைப்பற்றிக் கொண்டது சிலுவைப் போருக்குக் காரணமானது காரணம் : ஜெருசலேமிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய கிறித்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

29. i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது. ii) விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது. iii) செல்ஜுக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவர். iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.

30. i) மங்குகான் என்பவர் சீனாவின் ஆளுநர். ii) சீனாவில் இருந்த மங்கோலிய அரச சபை மார்க்கோபோலோவின் நன்மதிப்பைப் பெற்றது. iii) ‘சிகப்புத் தலைப்பாகை’ என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹங் சாவோ iv) மங்கோலியர்கள் சீனாவில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினார்

31. கூற்று 1: பன்னிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து பல நூற்றாண்டு காலம் நீடித்த முஸ்லிம்களின் ஆட்சி டெல்லியில் தொடங்கி வட இந்தியா முழுவதும் பரவியது. கூற்று 2: கி.பி. 1526 இல் பாபர் இப்ராஹிம் லோடியை தோற்கடித்ததிலிருந்து வட இந்தியாவில் மொகலாயர் தலைமையில் முஸ்லிம்களின் ஆட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தும் பணி துவங்கியது.

32. __________ நூற்றாண்டு முதலாகவே மேற்காசியாவைச் சேர்ந்த முஸ்லிம் படையெடுப்பாளர்கள் குஜராத்திலும் சிந்துவிலும் தங்கள் சுல்தானியங்களை நிறுவி ஆட்சி புரிந்து வந்தனர்.

33. கி.பி 1300களின் தொடக்கப் பத்தாண்டுகளில் அலாவுதீன் கில்ஜியின் அடிமையும், படைத் தளபதியுமான __________ன் தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

34. கூற்று: பாமினி சுல்தானியம் சுமார் முந்நூறு ஆண்டு காலம் நிலைத்திருந்தது. காரணம்: மக்களிடையே மதிப்புப் பெற்றிருந்த அரசியல் மேதையும் விசுவாசமிக்க அமைச்சருமான மகமத் கவான் என்பவரின் சிறந்த நிர்வாகமாகும்.

35. கூற்று 1: சோழப் பேரரசின் விரிவாக்கம் முதலாம் ராஜராஜன் காலத்தில் தொடங்கியது. கூற்று 2: தனது படைகளை வடகிழக்கு இந்தியாவில் கங்கை நதி வரை நடத்தி சென்ற முதலாம் ராஜேந்திரன் காலத்தில் சோழப் பேரரசு மேலும் விரிவடைந்தது.

36. “தொண்ணூற்றைந்து கொள்கைகள்”களை எழுதியவர் யார்?

37. சரியான கூற்றினைக் கண்டுபிடி.

38. சரியான கூற்றினைக் கண்டுபிடி.

39. கிழக்கு இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக _____ இருந்தது.

40. ‘கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்’ என்ற நூலை எழுதியவர் _____

41. 1775 ஆம் ஆண்டு இரண்டாவது கண்டங்களின் மாநாடு கூடிய இடம்……………………

42. சமூக ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர்…………………

43. சரியான கூற்றினைக் கண்டுபிடி. i) ஏழாண்டுப் போரில் இங்கிலாந்து பிரான்சைத் தோற்கடித்தது. ii) இங்கிலாந்தின் பூர்வீகக் குடிகள் செவ்விந்தியர்கள் என அழைக்கப்பட்டனர். iii) யார்க்டவுன் போரில் லஃபாயட் என்பவர் வாஷிங்டனுக்கு எதிராகப் போரிட்டார். iv) குடியேற்றவாதிகள் விடுதலை பெறுவதற் காகப் போரைத் தொடங்கவில்லை.

44. கூற்று (கூ) : செலவாணிச் சட்டம் குடியேற்ற நாடுகளின் வரவேற்பைப் பெற்றது. காரணம் (கா) : இச்சட்டம் குடியேற்ற நாட்டு மக்களின் கடன்களை தள்ளுபடி செய்தது.

45. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்: (i) இங்கிலாந்துச் சுரங்க முதலாளிகள் சுரங்கங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படும் பிரச்சனையை எதிர்கொண்டனர். (ii) இவ்வேலையில் மனித உழைப்பை ஈடுபடுத்துவது குறைவான செலவுடையதாக இருக்கும். (iii) சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும் நீராவி இயந்திரத்தை நியூட்டன் கண்டுபிடித்தார். (iv) சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைப் பெறவேண்டுமானால் நீரை வெளியேற்றியாக வேண்டும்.

46. கூற்று : விடுமுறை பெறுவதற்குத் தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர். காரணம் : பணியாளர்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தன.

47. கூற்று : சிலேட்டர் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். காரணம் : அவருடைய நூற்பாலையின் நகலாகப் பல நூற்பாலைகள் உருவாயின. அவருடைய தொழில் நுட்பம் பிரபலமானது.

48. 1896 இல் …… நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.

49. ……… பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர் ஜோகன்னஸ் பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேற வழி வகுத்தது.

50. கூற்று : சென்னை மகாணத்தில் 1876 – 1878 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு முன்னர் பெரும் வறட்சி நிலவியது. காரணம் : காலனியரசு உணவு தானிய வணிகத்தில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.