TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-09(8TH HISTORY FULL)

0
3858

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-09(8TH HISTORY FULL)

TET PAPER-02 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் நமது தமிழ் மடல் இணையதளம் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.. முழு மாதிரி தேர்வில் 150 வினாக்களும் மற்ற தேர்வுகளில் 50 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் .  தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும் . காலை 7 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தேர்விற்கான லிங்க் வழங்கப்படும்.தேர்விற்கான  லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்.

இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று பயன் பெறுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

JOIN OUR WHATSAPP GROUPCLICK HERE

JOIN OUR TELEGRAM-CLICK HERE

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-09(8TH HISTORY FULL)

Welcome to your 8TH HISTORY

1. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க: 1. பிரான்சிஸ்கோ அல்மெய்டா என்பவர் இந்திய போர்ச்சுகீசிய பகுதிகளின் முதல் கவர்னர் 2. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் போர்ச்சுகீசிய இளவரசியை மணந்து மெட்ராசை சீதனமாக பெற்றார். 3. ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையே புனித ஜார்ஜ் கோட்டை ஆகும். 4. செராம்பூர் டச்சுக்காரர்களின் இந்தியத் தலைமையிடமாக இருந்தது.

2. இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?

3. _____________ இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.

4. கீழ்க்கண்டவற்றுள் எழுதப்பட்ட ஆதாரங்களாக கருதப்படுபவை எவை? 1. இலக்கியங்கள் 2. பயணக் குறிப்புகள் 3. நாட்குறிப்புகள் 4. சுயசரிதை 5. துண்டு பிரசுரங்கள் 6. அரசாங்க ஆவணங்கள் 7. கையெழுத்துப் பிரதிகள்

5. கூற்று 1: வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது. கூற்று 2: இந்திய தேசிய ஆவணக்காப்பகம் ஆசியாவில் உள்ள ஆவணக் காப்பகங்களிலேயே மிகவும் பெரியதாகும்.

6. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் ________ ஆம் ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள் உள்ளன.

7. கீழ்கண்டவைகளுள் தவறாக பொருத்துயுள்ளது எது?

8. அடையாறு போரில் கர்நாடக படைத்தளபதி…………………………

9. கூற்று 1: 1498 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மாலுமி வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்தார். கூற்று 2: வங்காளத்தின் வெற்றிக்குப் பின் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது.

10. சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு. 1. இருட்டறை துயரச் சம்பவம் 1756 ஆம் நடைபெற்றது. 2. சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறை ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர். 3. மறுநாள் காலை அறையை திறந்தபோது அவர்களுள் 23 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர்.

11. பிளாசிப் போரானது சிராஜ்-உத்-தௌலா, பிரஞ்சுக் கூட்டணிக்கும் மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே __________நாள் நடைபெற்றது.

12. தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது கலகத்தில் ஈடுபட்ட மீர்காசிம் ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டு __________க்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்தார்.

13. கீழ்க்காணும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க : கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும். அ) இந்த முறை 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆ) ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர். இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது. ஈ) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

14. ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச் சென்றது எது?

15. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சம்பரான் சத்தியாகிரகம் பற்றிய தவறான கூற்றாகும். அ) பீகார் மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பான அவுரி சாகுபடி செய்தனர். ஆ) மொத்த நிலத்தில் 20ல் 10 பங்கில் அவுரியை சாகுபடி செய்தனர். இ) ஐரோப்பிய தோட்டக்காரர்கள் சம்பரான் தீன்கதியா என்ற நடைமுறையின் கீழ் பிணைக்கப்பட்டிருந்தனர். ஈ) அரசு மகாத்மா காந்தியை விசாரணைக் குழு உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.

16. கூற்று 1: காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக இருந்தது. கூற்று 2: நிலையான நிலவருவாய் திட்டம், மகல்வாரி திட்டம், இரயத்துவாரி திட்டம் என்னும் மூன்று பெரிய நிலவருவாய் மற்றும் நில உரிமை திட்டத்தை ஆங்கில அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

17. நிலையான நிலவரித்திட்டத்தில், விவசாயிகளிடமிருந்து வசூலித்த ___________ பங்கு வரியினை ஜமீன்தார்கள் ஆங்கில அரசுக்கு செலுத்தினர்.

18. நிலையான நிலவரி திட்டம் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

19. கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்……………………

20. 1792ல் ஏற்பட்ட உடன்படிக்கை …………………………..

21. கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை (✓) செய்யவும் I. ஆங்கிலேயர்களின் ஆட்சியை பெரும்பாலானோர் ஏற்கவில்லை. II. பொருளாதார சுரண்டல் மற்றும் நிர்வாக புதுமைகள் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தின. III. அயோத்தியை முறையாக இணைத்துக் கொண்டனர். IV. இந்திய சிப்பாய்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டது.

22. கூற்று(A): ஒவ்வொரு பாளையக்காரரும் ஒரு பிரதேசத்தின் அல்லது பாளையத்தின் உரிமையாளராக கருதப்பட்டார். காரணம்(R): இந்த பாளையக்காரர்கள், நாயக்கர்களுக்கு தேவை ஏற்படும் போது இராணுவம் மற்றும் இதர உதவிகளை முழு மனதுடன் செய்தனர். கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடு.

23. பொருந்தா இணையை தேர்ந்தெடு

24. பாளையக்காரர்களுக்கு எதிரான போரின்போது ஆங்கிலேய படைகளுக்கு மேலும் வலுவூட்ட எந்தெந்த இடங்களிலிருந்து படைகள் வரவழைக்கப்பட்டன?

25. கல்வி உரிமைச் சட்டம் ___________ அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வியை வழங்க வழி செய்கிறது.

26. பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு. i) கம்பெனியின் 1813 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது. ii) கீழ்த்திசை வாதிகள் ஆங்கிலசார்பு கோட்பாட்டு வாதிகளால் எதிர்க்கப்பட்டனர். iii) மெக்காலேவின் குறிப்பினால் ஒவ்வொரு மாகாணமும் அதற்கேற்ற கல்விக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிக்கப்படவில்லை . iv) 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை பலவீனப்படுத்தியது.

27. தவறான இணையை கண்டுபிடி.

28. கூற்று 1: ஜாதகக் கதைகள், யுவான் சுவாங் மற்றும் இட்சிங் (சீன அறிஞர்கள்) ஆகியோரின் குறிப்புகள் மற்றும் பிற ஆதாரங்களும் அரசர்களும், சமுதாயமும் கல்வியை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தியதாக கூறுகின்றன. கூற்று 2: மடாலயங்கள் மற்றும் விகாரங்கள் மூலமாக பௌத்த சமய அறிஞர்கள் தங்கள் கல்விப் பணியை மேற்கொண்டனர்.

29. கூற்று 1: முஸ்லிம் ஆட்சியாளர்கள் நூலகங்கள் மற்றும் இலக்கிய சங்கங்களை ஏற்படுத்தி நகர்ப்புற கல்வியை ஊக்குவித்தனர். கூற்று 2: முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிறுவிய மக்தப்புகள் மூலம் மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை இஸ்லாமிய வாழிபாட்டு முறைகளை கற்றனர்.

30. கூற்று 1: சமணப்பள்ளிகளும், பெளத்த விகாரங்களும் நூலகத்தினை பெற்றிருக்கவில்லை. கூற்று 2: இடைக்காலத்தின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள், இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தினர்.

31. சரியான கூற்றை கண்டுபிடி. பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்துக் குறியிடவும் : i) எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து’. ii) இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது. iii) சௌராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது. iv) சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவானது.

32. முதல் முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்ட இடம் …………….

33. சரியான கூற்றை கண்டுபிடி. பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்து குறியிடவும் : i) இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஒரு சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. ii) கைவினைப் பொருட்கள் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்தன. iii) இந்தியக் கிராமங்களில் கைவினைத் தொழில் முதல் பெரிய வேலைவாய்ப்பாக இருந்தது. iv) மஸ்லின் ஆடைகளுக்கு டாக்கா புகழ்பெற்றது.

34. "பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது" என்றும் கூறியவர்

35. கூற்று 1: முகலாய பேரரசர் ஷாஜஹான் ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்த பெர்னியர் என்பவர் இந்தியாவில் நம்பமுடியாத எண்ணிக்கையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார். கூற்று 2: பிரெஞ்சு நாட்டு பயணி டவேர்னியர் இந்தியாவில் உள்ள மயிலாசனம், பட்டு மற்றும் தங்கத்தினாலான தரை விரிப்புகள், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்தார்.

36. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர்…………………

37. பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை? i) பழங்காலத்தில் சென்னை கிராமங்களின் தொகுப்பாக இருந்தது ii) பழங்காலத்தில் மன்னர்களின் அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரங்கள் தோன்றின. iii) இரயில்வே நகரங்கள் 1835இல் அறிமுகப்படுத்தப்பட்டன.

38. கூற்று : 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரமயமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது. காரணம் : சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது மற்றும் நீராவிப் போக்குவரத்து அறிமுகம் செய்யப்பட்டது.

39. கூற்று 1: இடைக்காலத்தில் பெரும்பாலான நகரங்கள் மாநிலம் மற்றும் நாட்டின் தலைநகரங்களாக வளர்ந்தன. கூற்று 2: டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, ஆக்ரா மற்றும் நாக்பூர் ஆகியவை இடைக்கால நகரங்களில் முக்கியமானவை ஆகும்.

40. கூற்று: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பழைய உற்பத்தி நகரங்களான டாக்கா, முர்ஷிதாபாத், சூரத் மற்றும் லக்னோ போன்றவை முந்தைய முக்கியத்துவத்தை இழந்தன. காரணம்: பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகத்தின் விளைவாக இந்திய உற்பத்தித் தொழில்கள் அழிக்கப்பட்டன.

41. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

42. _________ நூற்றாண்டின் முடிவில் நாடாளுமன்றத்தின் ஒரு சட்டம் தலைமை ஆளுநருக்கு மாகாண நகரங்களில் அமைதியை ஏற்படுத்த நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அளித்தது.

43. பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும். i) பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமிபாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ii) தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார். மேலே கொடுக்கப்பட்ட எந்த வாக்கியம்(ங்கள்) சரியானவை?

44. 1854ஆம் ஆண்டின் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

45. பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும். i) வங்காள ஒழங்கு முறைச் சட்டம் XXI, 1804 பெண் சிசுக் கொலை சட்ட விரோதமானது என்று அறிவித்தது. ii) விதி முறை XVII, 1829 சதி எனும் பழக்கம் சட்ட விரோதமானது என அறிவித்தது. மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்த வாக்கியம்(ங்கள்) சரியானவை?

46. கூற்று 1: பண்டைய இந்தியாவின் சிந்துவெளி நாகரிகத்தில் தாய் கடவுளை வணங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கூற்று 2: பிரிட்டிஷ் ஆட்சியின் போது ராஜா ராம்மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், டாக்டர். முத்துலட்சுமி அம்மையார், ஜோதிராவ் பூலே, பெரியார், டாக்டர் தர்மாம்பாள் போன்ற சமூக சமய சீர்திருத்தவாதிகள் பெண்களின் மேம்பாட்டிற்காக போராடினர்.

47. கூற்று 1: பின்வேத காலத்தில் பெண்களின் சமய வேள்வி செயல்பாடுகளைத் தவிர்த்து, அவர்களின் சமூக மற்றும் அரசியல் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. கூற்று 2: பின்வேத காலத்தில் பெண்கள் வேதாகமங்களைப் படிக்க மறுக்கப்பட்டனர்.

48. J.E.D பெதுன் என்பவர் ________ ஆண்டு பெதுன் பள்ளியை நிறுவினார்.

49. __________ ஆண்டில் இந்தியக் கல்விக் (ஹண்டர்) குழு சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியையும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரைத்தது.

50. கூற்று 1: பெண்சிசுக்கொலையானது பொருளாதார சுமையைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டன. கூற்று 2: குடும்பப் பெருமை, சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைக்கு பொருத்தமான வரனை கண்டுபிடிக்க முடியாது என்ற பயம் போன்ற காரணிகளே பெண்சிசுக்கொலை நடைமுறைக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.