நீட் 2022 தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் முதல் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டு வரும் நிலையில் ஆகஸ்டு 30, 2022 அன்று நீட் தேர்வுக்கான சரியான விடைகள் வெளியானது. இந்த விடைகளில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து இருப்பின் செப்டம்பர் இரண்டாம் தேதிக்குள் தங்களது ஆட்சேபனையை முறையான வழிகாட்டுதலோடு தெரியப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாங்கள் ஆட்சேபிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ரூபாய் 200 கட்டணம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் தங்களது விண்ணப்பையின் மற்றும் பிறந்த தேதியை கொண்டு login செய்து OMR Challenge இன்னும் தெரிவை மேற்கொண்டு நாங்கள் Challenge செய்ய விரும்பும் கேள்விகளை தெரிவு செய்து, அதன் பின்பு வரும் அடுத்த பக்கத்தில் அதை உறுதி செய்து அதற்கான கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
Official Link : https://neet.nta.nic.in/
மேலும் நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விடைகளை பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் டவுன்லோடு பட்டணை கிளிக் செய்யவும்.