வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி?

0
917

இந்த பதிவில் நம் வாக்காளர் அடையாள அட்டையை நம்முடைய ஆதார் அட்டையை இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

இரண்டு ,முறைகளில் நாம் இதை செய்யமுடியும் உங்கள் Mobile-ல் Voters Helpline என்ற அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து மொபைல் நம்பர் துணையுடன் ஆதாரை இணைக்கும் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

அல்லது நேரடியாக நமது Chrome Browser-ல் சென்று கீழ் கண்டவாறு பதிவு செய்யலாம்.

நமது ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைப்பது எப்படி என்ற வழிமுறைகளை படிநிலைகளாக பார்க்கலாம்.

உங்கள் ஆதார் எண்ணை உங்கள் வாக்காளர் அட்டையுடன் இணைக்க நீங்கள் 6B என்ற ஆன்லைன் Form-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.

அதற்கு முன்பு NVSP Portal சென்று உங்கள் மொபைல் நம்பரை கொண்டு புதிய கணக்கை தொடங்க வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் (NVSP- NATIONAL VOTERS SERVICE PORTAL)  மேற்கண்ட இணைய பக்கத்தில் சென்று உங்கள் மொபைல் நம்பரை கொண்டு உங்களுக்கான கணக்கை முதலில் பதிவு(register) செய்ய வேண்டும்.(Registration)

 முதலில் உங்களுக்கான கணக்கை பதிவு(register) செய்த பின்பு இந்த கணக்கும் வழியாக Login செய்யவும்.

ஏற்கனவே உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு கடவு சொல்லை நீங்கள் மறந்திருந்தால் Forget Password கொடுத்து otp உதவியுடன் Reset செய்துகொள்ளலாம்.

 Login செய்த பின்பு வலது மூலையில் Dashboard என்பதை கிளிக் செய்து அதில் Profile என்பதை கிளிக் செய்து உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC NO.) அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

EPIC NO. அப்டேட் செய்யப்படவில்லை எனில் Edit Profile என்பதை கிளிக் செய்து உங்கள் EPIC நம்பரை (வாக்காளர் அட்டை எண்)உள்ளீடு செய்து அதை OTP மூலம் உறுதி செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.

உங்கள் EPIC NUMBER பதிவு செய்யப்பட்ட பின்பு முகப்பு பக்கத்தில் Information of AADHAAR number by Existing Electors என்ற தெரிவை கிளிக் செய்யவும்.

அதன் பின்பு திறக்கும் பக்கத்தில் FORM TYPE என்ற தலைப்பின் கீழ் இருக்கும் FORM 6B என்பதில் கிளிக் செய்தால் ஆன்லைன் படிவம் ஒன்று திறக்கும்.

திறக்கும் படிவத்தில் I HAVE AADHAAR NUMBER என்பதை தெரிவு செய்து உங்கள் ஆதார் நம்பரை உள்ளீடு செய்து PREVIEW என்பதை கிளிக் செய்து உங்கள் தகவல் சரி என்பதை உறுதி செய்துவிட்டு படிவத்தை சமர்ப்பிக்கவும்.

நீங்கள் பதிவு செய்த பின்பு கீழ் கண்டவாறு உங்கள் படிவம் வெற்றிகரமாக பெறப்பட்டதாக Reference Number காண்பிக்கப்படும். அந்த எண்ணை கொண்டு உங்கள் விண்ணப்பத்தின் நிலையை(Application Tracking Status) அறிந்து கொள்ளலாம்.