1.ரூதர்போர்டு தங்கத்தகடு சோதனையை நிகழ்த்திய ஆண்டு
2. ரூதர்போர்டின் அணுக்கொள்கையால் அனுவின் எந்த தன்மை பற்றி விளக்க முடியவில்லை?
3. சரியா தவறா? "ஒரே வட்டப்பாதையில் எலக்ட்ரான் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை"
4. நியூட்ரான் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
5. தங்கத்தின் அணுவில் எத்தனை புரோட்டான்கள் உள்ளன?
6. அணுவின் நிறை எண் என்பது?
7.ஒரு தனிமத்தின் அணுவின் நிறை எண் 39, நியூட்ரான்களின் எண்ணிக்கை 20 எனில் அதன் அணு எண் என்ன?
8. ஒரு வட்டப்பாதையில் இடம் கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _______ வாய்ப்பாட்டில் கணக்கிடப்படுகிறது.
9. ஒரு அணுவின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான் ________ எனப்படும்.
10. ஒத்த நிறை எண்களையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் _______ எனப்படும்
11. கேலூசாக்கின் விதி எதை பற்றியது?
12. டாபர்னீரின் விதியின்படி நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறையின் சராசரிக்கு ___________ இருக்கும்.
13. நியூலாந்தின் 'எண்ம விதி' என்ன?
14. பெரிலியத்தின் அணு நிறை என்ன?
15. தற்கால தனிம வரிசை அட்டவணையின் குறுகிய வடிவமாக கருதப்படுவது?
16. நவீன தனிம வரிசை அட்டவணையில் எத்தனை தொடர்கள் மற்றும் எத்தனை தொகுதிகள் உள்ளன?
17. தனிம வரிசை அட்டவணையில் உலோகப்போலிகள் எந்த தொகுதியில் காணப்படுகின்றன?
18. தனிம வரிசை அட்டவணையில் முதல் தனிமம் எது?
19. மந்த வாயுக்கள் ஏன் அப்பெயர் பெற்றுள்ளது?
20.சரியா தவறா ? "உலோகக்கலவைகள் தூய உலோகத்தை விட கடினமாகவும் வலிமையானதாகவும் இருக்கும்."
21. இணைதிறன் எலக்ட்ரான் கொள்கையை அறிமுகப்படுத்தியது யார்?
22. சோடியம் அதன் இணைதிறன் கூட்டில் இருந்து ஒரு எலக்ட்ரானை இழந்தால் அது எந்த அணுவின் எலக்ட்ரான் அமைப்பைப் பெறும்?
23. இணைதிறன் கூட்டில் தலா 5,6,7 எலக்ட்ரான்களை கொண்ட அணுக்கள்____________ தன்மையுடையவை?
24. நைட்ரஜனின் இணைதிறன் எலக்ட்ரான் எத்தனை?
25. ஒரு நேர்மின் அயனிக்கும் எதிர்மின் அயனிக்கும் இடையே நிலைமின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் பிணைப்பு _______ எனப்படும்
26. இரு அணுக்கள் சமமாக எலக்ட்ரான்களை பங்கீடு செய்து அவற்றுக்கிடையே உருவாகும் பிணைப்பு _________.
27. மீத்தேன் மூலக்கூறு உருவாதலில் காணப்படும் பிணைப்பு?
28. வெட்டப்பட்ட காய்கறிகளும் பழங்களும் நிறம் மாற காரணம்?
29. சரியா தவறா? " நமது தசைகள் , எலும்புகள் , உள்ளுறுப்புகள், இரத்தம் மற்றும் பிற உடல் கூறுகளிலும் கார்பன் காணப்படுகிறது"
30. மனித இரத்தத்தின் pH மதிப்பு ________
31. உணவுப் பொருட்களைப் பதப்படுத்தப் பயன்படுவது ?
32. குவார்ட்ஸ் படிகத்தில் இரும்பு மற்றும் மாங்கனீசு படிவுகளை சுத்தம் செய்யவும், மரப்பொருட்களைத் தூய்மையாக்கவும், மற்றும் கருப்புக்கறைகளை நீக்கவும் பயன்படுவது ?
33. உலோக கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிநது உப்பையும், நீரையும் தந்து _______ ஐ வெளியேற்றுகிறது.
34. நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ____
35. சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினை புரியாத இரண்டு உலோகங்களைக் கூறுக.
36. விவசாயத்தில் உரமாகப் பயன்படுவது
37. சிட்ரஸ் பழங்களுக்கு காரத் தன்மையுடய மண்ணும், அரிசிக்கு அமிலத்தன்மையுடைய மண்ணும், கரும்பு விளைய நடுநிலைத் தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது. 2.சிட்ரஸ் பழங்களுக்கு காரத் தன்மையுட மண்ணும், அரிசிக்கு நடுநிலைத் தன்மையுடைய மண்ணும், கரும்பு விளைய அமிலத்தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது.
38. ஒரே மூலக்கூறு வாய்பாட்டையும் வேறுபட்ட கட்டமைப்பையும் கொண்டிருக்கும் கரிமச்சேர்மங்கள் ______________ ஆகும்.
39. கிராஃபைட்டில் காணப்படும் கார்பனின் அறுங்கோண அடுக்குகள் எந்த விசையால் பிணைக்கப்பட்டுள்ளது?
40. வைரத்தில் ஒரு கார்பன் எத்தனை சகப்பிணைப்பை கொண்டுள்ளது?
41. உலகிலேயே தடிமன் குறைவான சேர்மம் எது?
42. சரியா தவறா? "கார்பன் நீர் மற்றும் பிற கரைப்பானில் கரையும்"
43. அர்ஹனீயஸ் கொள்கையின்படி காரங்கள் நீரில் கரையும்போது ________ அயனிகளை தருகிறது.?
44. கீழ் காண்பவற்றுள் நீரில் கரையாத உப்பு எது?
45. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் _________ எனப்படும்.
46. மூன்று பங்கு ஹைடிரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்த கலவை ________ என்று அழைக்கப்படுகிறது.
47. சரியா தவறா? " ஹைடிரோகுளோரிக் அமிலத்தில் தங்கம் அல்லது வெள்ளியை கரைக்கும்பொழுது அவை ஹைடிராக்சைடு அயனிகளை தருகின்றன"
48. சமையல் சோடாவின் மூலக்கூறு வாய்பாடு?
49. பாலிஸ்டைரின் நெகிழிகள் சிதைவுறுவதற்கு அதிகபட்சம் எவ்வளவு காலம் வரை எடுத்துக்கொள்ளும்?
50. PVC நெகிழிகளை எரிக்கும் பொழுது வெளிப்படும் கேடு நிறைந்த வேதிப்பொருள்__________ ஆகும்.