PG TRB தேர்விற்க்கான ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு ஆணை

0
611

ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌, சென்னை – 600 006

பத்திரிக்கைச்‌ செய்தி

ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ 2020-21ஆம்‌ கல்வி ஆண்டிற்கான முதுகலை
ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை – 1 மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை – 1 ஆகிய
காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு அறிவிக்கை
எண்‌.01/2021 நாள்‌ 09.09.2021 முதல்‌ வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்‌ இணைய வழி

வாயிலாக 18.09.2021 முதல்‌ பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்‌ அரசாணை நிலை எண்‌.144 பள்ளிக்‌ கல்வி (ப.க.2(0) துறை, நாள்‌.

18.10.2021ன்படி ஆசிரியர்களின்‌ நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது
வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால்‌, உச்ச வயது வரம்பினை சார்ந்து
மென்பொருளில்‌ மாற்றம்‌ செய்ய வேண்டியுள்ளதாலும்‌ மேலும்‌ பணிநாடுநர்கள்‌ இணைய
வழியில்‌ விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம்‌ அளிக்க வேண்டியுள்ளதாலும்‌
முதுகலை ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை – 1 மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை – 1
ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெறுவதற்கான கடைசி
தேதி 31.10.2021லிருந்து 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என
அறிவிக்கப்படுகிறது.

கீழே உள்ள click here பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

GOVERNMENT G. O PDF-CLICK HERE