டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி தேர்வுக்கு வயது உச்சவரம்பு மேலும்‌ 2 ஆண்டுகள்‌ உயர்வு

0
435

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி தேர்வுக்கு வயது உச்சவரம்பு ப மேலும்‌ 2 ஆண்டுகள்‌ உயர்வு

சென்னை, செப்‌. 17: டி.என்‌பிஎஸ்சி, டி.ஆர்பி மற்றும்‌ அரசு பணிகளில்‌ நேரடி நியமனம்‌ மூலம்‌ பணி நியமனம்‌ செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பு, மேலும்‌ 2 ஆண்டுகள் உயர்த்தி அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை செயலாளர்‌ இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில்‌ கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில்‌ கடந்த 13ம்‌ தேதி நடைபெற்ற மனித வள மேலாண்மை துறையின்‌ மானிய கோரிக்கையின்போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர்‌ தெரிவு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ அரசு பணிகளுக்‌கான போட்டி தேர்வுகள்‌ தாமதமானால்‌, நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள்‌ உயர்த்தப்படும்‌ என்று நிதி அமைச்சர்‌ அறிவிப்பு வெளியிட்டார்‌.

அந்த அறிவிப்பிற்கு  இணங்க, அரசு பணிகளில்‌ நேரடி  நியமனம்‌ மூலம்‌ பணி நியமனம்‌ செய்‌யப்படுவதற்கான வயது உச்சவரம்பு தற்போதுள்ள 30 ஆண்டுகளில்‌ இருந்து 32 ஆண்டுகளாக உயர்த்‌தப்படுகிறது.

குறைவான வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்‌பட்டுள்ள பதவிகளுக்கும்‌,  தற்போது உயர்த்தப்பட்‌டுள்ள வயது உச்சவரம்பு அளவு பொருந்தும். அதிகமாக வயது உச்ச வரம்பினை  கொண்டுள்ள பதவிகளை பொறுத்தவரையில்‌, தொடர்புடைய பணி விதிகளில்‌ நிர்ணயிக்‌கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு மேலும்‌ 2 ஆண்டுகள்‌ உயர்த்தப்படுகிறது.

பட்டியலினத்தவர்‌, பட்டியலின அருந்ததியர்‌, பழங்குடியினர்‌, பிற்படுத்‌தப்பட்ட வகுப்பினர்‌ (மூஸ்லிம்‌), பிற்படுத்தப்‌பட்ட வகுப்பினர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்‌பட்ட வகுப்பினர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌, அனைத்து வகுப்பினர்களிலும்‌ உள்ள ஆதரவற்ற விதவைகள்‌ மற்றும்‌ மாற்‌றுத்‌திறனாளிகள்‌

ஆகியோருக்கு,  2016ம்‌ ஆண்டு. தமிழ்நாடு அரசு பணியாளர்‌ சட்டத்தில்‌ அனுமதிக்‌கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு அல்லது தளர்வுகள்‌ தொடரும்‌.

கருணை அடிப்படையிலான நியமனங்களை பொறுத்தவரையில்‌ தற்‌போது நடைமுறையில்‌ உள்ள வயது உச்சவரம்பானது மாற்றம்‌ ஏதுமின்றி

தொடரும்‌. தற்போது உயர்த்தப்படும்‌ வயது உச்சவரம்‌பானது, தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து தெரிவு முகமைகள்‌ மற்றும்‌ நியமன அலுவலர்களால்‌ இந்த அரசாணை வெளியிடப்படும்‌  நாள்‌ முதலாக அறிவிக்கை செய்யப்படும்‌ பணியாளர்‌ தெரிவுகள்‌ (டி என்பிஎஸ்‌9, டிஆர்பி உள்ளிட்ட அரசு தேர்வாணையங்கள்‌, நியமன பதவிகள்‌)  அனைத்திற்‌கும்‌ பொருந்தும்‌.

இந்த ஆணையின்‌ அடிப்படையில்‌, தொடர்‌புடைய பணி விதிகளில்‌ உரிய திருத்தங்களை உடனடியாக மேற்‌கொள்ள தலைமை செயலக அனைத்துதுறைகளும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.