தமிழக காவல்துறையில் 14,317 காலியிடங்கள் நிரப்பப்படும் : பட்ஜெட் உரையில் அறிவிப்பு!!

0
532

தமிழக காவல்துறையிலுள்ள 14,317 காலி இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் வெளியீட்டில் தெரிவித்தார்.

பட்ஜெட்டில் காவல் துறை மேம்பாட்டு நடவடிக்கை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறும்போது , “ தமிழக காவல் துறையின் தரம் மீட்டெடுக்கப்படும்.

காவல்துறை பணியிடங்களில் காலியாக உள்ள 14, 317 இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக காவல்துறைக்கு 8.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறைக்கு 4 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையில் உள்ளவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் தரப்படும். ” என்று தெரிவித்தார்.