காரங்கள் மற்றும் அமிலங்கள் பற்றிய சில முக்கிய குறிப்புகள்-TNPSC

0
471

காரங்கள் மற்றும் அமிலங்கள் பற்றிய சில தகவல்கள்:

  1. காரங்கள்:
    🔴 நீரில் கரையும் காலங்களுக்கு என்ன பெயர் – எரிகாரங்கள்
    🔴 எரிகாரங்கள் அதற்கு வேறு பெயர் – அல்கலிகள்
    🔴 அல்கலி என்ற சொல் எந்த மொழி சொல் – அல்குவிலி என்ற அரேபிய சொல்
    🔴 அல்கலி என்ற சொல்லுக்கு பொருள் – தாவரச் சாம்பல்
    🔴 நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் (OH) தரும் சேர்மங்கள் – காரங்கள்
    🔴 அனைத்து அல்கலிகளும் காரங்கள் ஆனால் எல்லா காரங்களும் அல்கலிகள் அல்ல
    🔴 அல்கலிகள் சில உதாரணம் – சோடியம் ஹைட்ராக்சைடு (எரிசோடா), பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (எரிபொட்டாஷ்)
    🔴 நீரில் லேசாக கரையும் காரம் – கால்சியம் ஹைட்ராக்சைடு
    🔴 நீரில் கரையாத காரங்கள் – கால்சியம் ஆக்ஸைடு, மெக்னீஷியம் ஹைட்ராக்சைடு
    🔴 காரம் சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றும்.
    🔴 காரம் பினாப்தலினுடன் வினை புரிந்து இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கும்.
    🔴 காரம் மெத்தில் ஆரஞ்சுடன் வினை புரிந்து மஞ்சள் நிறத்தை தருகிறது.
  2. அமிலங்கள்
    🔵 அமிலம் என்பது எந்த மொழி சொல் – அசிட்ஸ் என்ற லத்தீன் மொழி சொல்
    🔵 அசிடஸ் என்ற லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட ஆசிட் என்ற ஆங்கில மொழியில் பொருள் – புளிப்பு சுவை
    🔵 நீரில் கரையும் போது ஹைட்ரஜன் அயனிகளைத் (H+) தரும் பொருட்கள் – அமிலங்கள்
    🔵 எல்லா அமிலங்களிலும் ஹைட்ரஜன் இருக்கும் ஆனால் ஹைட்ரஜன் உள்ள எல்லா சேர்மங்களும் அமிலங்கள் அல்ல
    🔵 அமிலங்கள் வகைகள் – 2
  3. கனிம அமிலங்கள்
  4. கரிம அமிலங்கள்
    🔵 தாதுப் பொருட்களில் இருந்து கிடைப்பவை – கனிம அமிலங்கள்
    🔵 கனிம அமிலங்கள் சில – ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம், சல்ஃப்யூரிக் அமிலம்
    🔵 தாவரங்கள், விலங்குகள் இருந்து பெறப்படுவது – கரிம அமிலம்
    🔵 கரிம அமிலங்கள் சில – சிட்ரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம், மாலிக் அமிலம் (தாவரங்கள் இருந்து கிடைப்பவை), பியூட்ரிக் அமிலம், லாக்டிக் அமிலம், பார்மிக் அமிலம் (விலங்குகள் இருந்து கிடைப்பவை)
    🔵 அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்
    🔵 அமிலம் பினாப்தலினுடன் வினை புரிந்து – நிறங்கள் ஏதும் கொடுப்பதில்லை
    🔵 அமிலம் மெத்தில் ஆரஞ்சுடன் வினை புரிந்து இளஞ்சிவப்பு நிறத்தை தருகிறது.