TNUSRB இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு – புதிய அறிவிப்பு!!

0
637

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

தேர்வு தேதி மாற்றம்:

தமிழகத்தில் காலியாக உள்ள காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். 11,741 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியிடப்பட்டன. இம்முறை சட்டமன்ற பொதுத்தேர்தல் காரணமாக உடற்தகுதித் தேர்வுகள் தாமதமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்பட்டு இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் 11,741 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதித்தேர்வு (PET) வரும் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அதில் மாற்றம் செய்யப்பட்டு உடற்தகுதித்தேர்வு ஏப்ரல் 21 இல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.பின்னர் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது உடற்தகுதித்தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது.

TNUSRB PHYSICAL TEST PDF

(கீழே உள்ள click here பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)

Click here