தமிழகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனையின் பெயரும் மருத்துவ சேவைகளும் மிகவும் பிரபலம். உயர்தரமான கண் சிகிச்சைகளை ஏழை-பணக்காரர் வித்தியாசமின்றி அனைவருக்கும் அளித்து வரும் அரவிந்த் கண் மருத்துவமனையில் இணைந்து பணியாற்ற விருப்பமா?

+2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது.

+2 முடித்த மாணவிகளுக்கு பாதுகாப்பான விடுதி, ஆரோக்கியமான உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் கூடிய வேலை, தனித் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஆகிய வசதிகளுடன் கண் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் துணை நிற்கும் மாபெரும் வாய்ப்பு.

+2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.

முழு விபரங்களுக்கு-CLICK HERE

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்

APPLY HERE

பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை நடைபெறும்.

நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:
• +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)
• ஆதார் அட்டை ((Original + Xerox copy)
• Transfer Certificate – TC (Original + Xerox copy)

Previous article12th accountancy first mid-term exam original question paper | English Medium
Next article12th accountancy first mid-term exam original question paper | Tamil Medium

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here