இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு பயணிகள்

0
2312
STUDY MATERIAL

*இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு பயணிகள்*

1. கிமு 302- 298 – மெகஸ்தனிஸ் – கிரேக்க நாட்டு பயணி  – முதலாம் சந்திரகுப்த மௌரியர் காலத்தில் வருகை. (மெகஸ்தனிஸ் – இன்டிகா என்ற நூலை எழுதியுள்ளார் அதில் பாடலிபுத்திரம் மக்களின் நகரவாழ்க்கை குறிப்பு உள்ளது)
2. கிமு 300 – 273 – டெமாஸ்கஸ் – கிரேக்க நாட்டு பயணி – பிந்துசாரர் காலத்தில் வருகை. (அரசவையை பார்வையிட)
3. கிபி 405 – 411 – பாஹியான் – சீன நாட்டு பயணி – இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் வருகை. ( புத்த நூல்களை திரட்டவும் புத்த ஸ்தலங்களை பார்வையிடவும் வந்தார்)
4. கிபி 630 – 645 – யுவாங் சுவாங் – சீன நாட்டுப் பயணி – வட இந்தியாவில் ஹர்சர் காலத்திலும் – தென்னிந்தியாவில் முதலாம் நரசிம்ம வர்மன் காலத்திலும் வந்தார். (பயண நூல் – கியூக்கி என்ற நூலில் புத்த ஸ்தலம், பழமையான நாகரிகங்கள் பற்றி எழுதியுள்ளார்)
5. கிபி 671 – 695 – ஹித்சிங் – சீன நாட்டுப் பயணி – ஹர்சர் காலத்தில் வருகை. (Biography Eminent Marks என்ற நூலை எழுதியுள்ளார்)
6. கிபி 957 – அல் மசூதி – அரேபிய நாட்டுப் பயணி – முகமது பின் காசிம் காலத்தில் வருகை.‌ (முர்ஜூத் சாஹித் என்ற நூல் எழுதியுள்ளார்)
7. கிபி 1024 – 1030 – அல் பருணி – பெர்சியா (ஈரான்) நாட்டுப் பயணி – முகமது கஜினி காலத்தில் வருகை. (தாருக் ஈ ஹிந்த் என்ற நூலை எழுதியுள்ளார்)
8. கிபி 1292 – 1294 – மார்கோ போலோ – வெனிஸ் (இத்தாலி) நாட்டுப் பயணி – பாண்டியர் காலத்தில் வருகை. (பாண்டியர் வியாபார ஸ்தலங்களை பார்வையிட, ஏற்றுமதி இறக்குமதி பற்றி அறிந்து கொள்ள வருகை)
9. கிபி 1333 – 1347 – இபின் பட்டுடா – மொரோக்கோ நாட்டுப் பயணி – முகமது பின் துக்ளக் காலத்தில் வருகை. விஜயநகரப் பேரரசில் முதலாம் ஹரிஹரர் காலத்திலும் வருகை.(ரெஹிலா என்ற நூலை எழுதியுள்ளார்)
10. கிபி 1420 – 1421 – நிக்கோலா காண்டி – வெனிஸ் நாட்டுப் பயணி – முதலாம் தேவராயர் காலத்தில் வருகை. (அரசவையை பார்வையிட)
11. 1443 – 1444 – அப்துல் ரசாக் – பெர்சியா நாட்டுப் பயணி – இரண்டாம் தேவராயர் காலத்தில் வருகை. (அரசவையை பார்வையிட)
12. கிபி 1470 – 1474 – இக்னேசியஸ் நிகிட்டின் – இரஷ்ய நாட்டுப் பயணி – பாமினி அரசின் பெரோஷா காலத்தில் வருகை. (அரசவையை பார்வையிட, கலை கட்டிடக்கலை பற்றி ஆராயவும் வருகை)
13. கிபி 1498 – வாஸ்கோடகாமா – போர்ச்சுக்கல் நாட்டுப் பயணி – கள்ளிக்கோட்டையை ஆண்ட சாமரின் காலத்தில் வருகை. (வியாபார ஸ்தலங்களை பார்வையிட, இந்தியா என்ற நாட்டினை அறியவும்)
14. கிபி 1516 – எட்வர்டா பார்போஸா – போர்ச்சுக்கல் நாட்டுப் பயணி – கிருஷ்ண தேவராயர் காலத்தில் வருகை (அரசவையை பார்வையிட்டு அதன் பெருமையை தனது பயணக்குறிப்பில் எழுதியுள்ளார்)
15. கிபி 1520 – 1522 – டொமிங்கோ பயஸ் – போர்ச்சுக்கல் நாட்டுப் பயணி – கிருஷ்ண தேவராயர் காலத்தில் வருகை (கிருஷ்ண தேவராயர் ஒரு முழு நிறைவான அரசர் என தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்)
16. கிபி 1524 – பெர்னான்டோ, நுனிஸ் – போர்ச்சுக்கல் நாட்டுப் பயணி – அச்சுத தேவராயர் காலத்தில் வருகை. (விஜயநகரப் பேரரசைப் பார்வையிட)
17. கிபி 1608 – 1610 – சர் வில்லியம் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து நாட்டுப் பயணி – ஜஹாங்கிர் காலத்தில் வருகை. (இந்தியாவில் வியாபாரம் செய்யும் உரிமை கோர வேண்டி வருகை)
18. கிபி 1615 – 1619 – சர் தாமஸ் ரோ – இங்கிலாந்து நாட்டுப் பயணி – ஜஹாங்கிர் காலத்தில் வருகை. (இந்தியாவில் வியாபாரம் செய்யும் உரிமையை பெற்றவர்)
19. கிபி 1620 – 1627 – பிரான்சிஸ்சோ பால் சரட் – டச்சு நாட்டுப் பயணி – ஜஹாங்கிர் அரசவைக்கு வருகை. (இந்தியாவில் வியாபார உரிமை கோருவதற்காக)
20. கிபி 1630 – 1634 – பீட்டர் முன்டி – இத்தாலி நாட்டுப் பயணி – ஷாஜகான் காலத்தில் வருகை. (மொகலாயர்களின் கலை, கட்டடக்கலை பற்றி ஆராய்வதற்காக)