பெண்களுக்கான சிறந்த 7 மொபைல் அப்கள்

0
244

பெண்களுக்கான சிறந்த 7 மொபைல் ஆப்-கள்


நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களது பாதுகாப்பை உறுதிபடுத்த மத்திய ,மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்போது, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பல ஆண்ட்ராய்டு ஆப்-கள் நடைமுறையில் உள்ளன. அதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் டாப் 7 ஆப் இதோ…


சேப்டிபின் ஆப் :

இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. சேப்டிபின் ஆப்-பில் ஜீபிஎஸ் டிராக்கிங், அவசரகால தொடர்பு எண்கள் மற்றும் பாதுகாப்பான திசையை காட்டுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக , பெண்கள், தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும்போது பாதுகாப்பில்லாத பகுதியை பின் செய்வதன் மூலம், அருகில் இருப்பவர்கள் உதவிக்கு வர இயலும். இந்த ஆப் ஹிந்தி, ஆங்கில ஆகிய மொழிகளில் கிடைக்கிறது


ரக்‌ஷா ஆப்:

பெண்கள், எதாவது பிரச்சனயை சந்திக்கும் நேரத்தில், ரக்‌ஷா ஆப்பை பயன்படுத்தி தங்களின் நெருங்கிய நபர்களின் இடத்தை தெரிந்து கொள்ளலாம். ஒரு வேளை இந்த ஆப் ஹேங் ஆகும் பட்சத்தில், போனில் உள்ள வால்யூம் பட்டனை 3 நொடிக்கு தொடர்ந்து அழூத்தினால் போதும் மெசேஜ் சென்றுவிடும். இந்த ஆப்பிற்கு இண்டர்நெட் சேவை கட்டாயமில்லை.


ஹிமாத் ஆப்:

ஹிமாத் ஆப் தில்லி காவல்துறையால் உறுவாக்கப்பட்டு ,வெளியிடப்பட்டது. இந்த ஆப்பை உபயோகிக்கும் நபர் முதலில் தில்லி போலீஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பெண்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது , இந்த ஆப்பை பயன்படுத்தி எஸ் ஓ எஸ் ( ரெக்குவஸ்ட் டயலிங் ) செய்தால் போதும் , பெண்கள் இருக்கும் இடம் மற்றும் ஆடியோ ,வீடியோ தகவல்கள் நேரடியாக டெல்லி காவல்துறைக் கட்டுப்பாட்டறைக்குச் சென்றுவிடும்.


விமன் சேஃப்டி :

பெண்களுக்கு ஆபத்து ஏற்படும்போது, விமன் சேஃப்டி ஆப்பை பயன்படுத்தி ஒரு சிங்கிள் பட்டனை அழுத்தினால் போதும், முன் கூட்டியே கான்ஃபிகர் செய்த எண்ணுக்கு தகவல் சென்றுவிடும். மேலும், போனில் உள்ள முன் மற்றும் ரியர் கேமாராக்களின் மூலம் புகைப்படங்களை எடுத்து தானாகவே சர்வருக்கு அனுப்பிவிடும். பெண்கள் தங்களின் ஆபத்து நிலைகளை குறிக்கும் விதத்தில், 3 நிரங்களில் உள்ள எதாவது ஒரு பட்டனை அழுத்தலாம்.


ஸ்மார்ட் 24*7:

பெண்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சமையங்களில் ,ஸ்மார்ட் 24*7 ஆப் பயன்படுத்தி சிங்கிள் பட்டனை அழுத்தினால், அவர்கள் இருக்குமிடம், வாய்ஸ் ரெக்கார்ட் , புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் நேரடியாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டறைக்குச் சென்றுவிடும். இதன் சிறப்பமசம், 24 மணி நேரமும் இயங்கும் அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ள முடியும்.


ஷேக் டு ஈசி :

இந்த ஆப்பை உபயோகிப்பது மிகவும் எளிது. ஷேக் டு ஈசி ஆப்பை, ஷேக் செய்யலாம் அல்லது பவர் பட்டனை 4 முறை அழுத்தினால் போதும் , முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ள நம்பருக்கு தகவல் சென்றுவிடும். இந்த ஆப்பிற்கு இண்டர்நெட் சேவை கட்டாயமில்லை. மேலும், விபத்து, கொள்ளை அல்லது இயற்கை பேரிடர் உள்ளிட்ட சமயங்களிலும் இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும்.


பீசேஃப் ஆப்:

பீசேஃப் ஆப், பெண்களின் பாதுகாப்பிற்கு 100% உத்திரவாதம். காண்டேக்ட் லிஸ்டில் உள்ளவர்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் ஆபத்தில் சிக்கியுள்ள பெண்கள் இருக்கும் இடத்தை பின் தொடரலாம். ஒரு சமயம், வழி மாறும் பட்சத்தில் ஒரு அலாரம் ஒலிக்கப்படும். அதனை அறிந்து சரியான பாதையில் பின்தொடரலாம். இதன் சிறப்பம்சம், தானாக ஃபேக் கால் உருவாகி அதில் அவசர எண், இடம், வீடியோ, ஒலி எழுப்பி அலர்ட் செய்யும். மேலும், இதில் உள்ள கார்டியன் அலர்ட் பட்டனை அழுத்தினால் நண்பர்களோ, உறவினர்களோ பின் தொடரலாம்.