வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? எப்படி வாக்களிப்பது?

0
327

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? எப்படி வாக்களிப்பது?

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் என்னென்ன ஆவணத்தை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என இதில் காணலாம்.

வாக்களிப்பதற்காக செல்பவர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். ஒருவேளை அந்த அட்டை இல்லாதவர்கள் கீழ்கண்ட ஆவணங்களைக் கொண்டு சென்று வாக்களிக்கலாம்.

1. ஆதார்

2. 100 நாள் வேலைக்கான அட்டை


3. வங்கி கணக்கு புத்தகம்

4.மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு

5.ஓட்டுநர் உரிமம்

6. பான் கார்டு

7. தலைமை பதிவாளர் வழங்கிய ஸ்மார்ட் கார்டு

8. பாஸ்போர்ட்

9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10.பொதுத்துறை நிறுவன பணி அடையாள அட்டை

11. நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற அலுவலக அடையாள அட்டை

ஆகிய 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து செல்லலாம். எனினும் வாக்குச்சாவடியில் உள்ள, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.