ஏப்ரல் 14:
இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!
👉இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
👉1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ் எனும் நகரில் பிறந்தார்.
👉தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்காக “பகிஷ்கரித் ஹித்தஹாரிணி” என்ற இயக்கத்தை தொடங்கினார்.
👉இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் உலகமே வியக்கும் வகையில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காக உரையாற்றினார்.
👉1946 ஆம் ஆண்டு சித்தார்த்தா சட்டக் கல்லூரியை தொடங்கினார்.
👉சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார் அம்பேத்கர்.
👉பிறப்பு, இனம், மொழி, மத, சாதி பேதமின்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார்.
👉8 அட்டவணைகளை கொண்ட இந்தச் சட்டம், 1949ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
👉1956ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் காலமானார்.
👉டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் – ஏப்ரல் 14 அன்று அரசு விழாவாக மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களால் ஒவ்வோர் ஆண்டும் தன்னெழுச்சியாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.