🔥முக்கிய நடப்பு நிகழ்வுகள் 🔥1. நாட்டில் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கை-2022யை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்தம் 3,167 புலிகள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ல் 2967 புலிகள் இருந்ததாக அந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.2. பான் மசாலா, புகையிலைப் பொருள்களுக்கு சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான ஜிஎஸ்டி செஸ் வரியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.3. ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் அரசியலமைப்பின் 280வது பிரிவின்படி நிதிக்குழு அமைக்கப்படுகிறது.2023ஆம் நிதியாண்டின் இறுதியில் நிதிக்குழுவின் 15வது தலைவரான என்.கே.சிங் தலைமையில் நிதிக்குழு அமைக்கப்படவுள்ளது.4. இந்திய விமானப்படை (IAF) மற்றும் அமெரிக்க விமானப்படை (USAF) இடையேயான இருதரப்பு விமானப் பயிற்சியான கோப் இந்தியா 2023 பயிற்சியானது அர்ஜன் சிங் (பனகர்), கலைகுண்டா மற்றும் ஆக்ரா ஆகிய விமானப்படை நிலையங்களில் நடைபெற்று வருகிறது.5. மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர், ஸ்ரீ ஆர்.கே.சிங் இன்று மாநில ஆற்றல் திறன் குறியீட்டு (SEEI) 2021-22 அறிக்கையை வெளியிட்டுள்ளார்.6. இந்திய-அமெரிக்க கணிதவியலாளரும் புள்ளியியல் வல்லுனருமான சிஆர் ராவ் தனது 102வது வயதில் சர்வதேச புள்ளியியல் பரிசை வென்றுள்ளார்.7. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என். ரவி ஏப்ரல் 10,2023 அன்று ஒப்புதல் அளித்துள்ளார்8. டென்மார்க்கின் மேக்னஸ் ஜோகனசனை வீழ்த்தி இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் தனது முதல் உலக சுற்றுப்பயண சூப்பர் 300 பட்டத்தை வென்றார்.9. தமிழகத்தைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ இந்தியாவின் 25வது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார்அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்வீடனைச் சேர்ந்த எரிக் ஹெட்மனை சவீதா தோற்கடித்து கிராண்ட்மாஸ்டர் பட்டதைப் பெற்றார் சவீதா