பிப்.23: இன்று டெல் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் டெல் பிறந்த நாள்

0
299

பிப்.23: இன்று டெல் நிறுவனத்தின் தலைவர் ‘மைக்கேல் டெல்’ பிறந்த நாள்!

👉கம்ப்யூட்டர் விற்பனையில் முன்னிலையில் இருக்கும் டெல் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் டெல்.

👉அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 1965 பிப்ரவரி 23-ம் தேதி பிறந்தார்.

👉 இளம் வயதிலேயே தனது புது ஆப்பிள் கணினியை அக்கு வேறு, ஆணி வேறாக கழற்றி, பிறகு கச்சிதமாக பொருத்தி கணினி பற்றி கற்றுக்கொண்டார்.

👉டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தனது விடுதி அறையிலேயே பி.சி.லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினார்.

👉கணினி உதிரிபாகங்களை வாங்கி, அவற்றை பொருத்தி கணினியை உருவாக்கி விற்றார்.

👉அதிக லாபம் கிடைத்ததால் 19 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, முழு மூச்சாக தொழிலில் இறங்கினார்.

👉1987-ல் நிறுவனத்தின் பெயரை “டெல் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன்”என மாற்றினார்.

👉1992-ல் ஃபார்ச்சூன் இதழின் டாப் 500 நிறுவனங்கள் பட்டியலில் டெல் இடம்பிடித்தது.

👉பட்டியலில் இடம்பெற்ற மிகவும் இளமையான தலைமை செயல் அதிகாரி இவர்தான்.

👉1999-ல் டெல் நிறுவன உத்தி பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டார்.

👉மைக்கேல் சூஸன் அறக்கட்டளை மூலம் ஏழைகளின் கல்விக்கும், மருத்துவத்துக்கும் உதவி வருகிறார்.