1. சட்டமன்ற பேரவைக்கான நடைமுறைகள் i) சட்டமன்ற கூட்டத்திற்கு அவைத்தலைவர் தலைமை ஏற்கிறார். ii) இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் iii) சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். iv) இது மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரமுடையது.
2. சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்...................
3. சரியான கூற்றைத் தேர்ந்தெடு: மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர் i) குடியரசுத் தலைவர் ii) துணை குடியரசுத் தலைவர் iii) ராஜ்ய சபை உறுப்பினர்கள் iv) சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்.
4. பொருத்துக : 1. மாநில ஆளுநர் - a) சட்ட விதி 156, 2. ஆளுநரின் ஆட்சி அதிகாரம் - b) சட்டவிதி 153, 3. ஆளுநரை அமர்த்துதல் - c) சட்டவிதி 155, 4. ஆளுநரின் பதவிக் காலம் - d) சட்டவிதி 154
5. ஆளுநரின் அறிக்கையின்படி குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு............... பயன்படுத்தி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.
6. சட்டமன்றத்தில் பண மசோதா தாக்கல் குறித்த சரியான கூற்று எது? 1. ஆளுநரின் ஒப்புதலுக்கு பின்னரே பணம் மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வர முடியும். 2. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் பட மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வரமுடியும். 3. பண மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்த பின்னர், ஆளுநரின் ஒப்புதல் தேவை.
7. இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
8. 1987 ஜூலை 1 க்கு பின்னர் பிறந்தவர் இந்திய குடியுரிமை பெற கீழ்காணும் எந்த விதியை பூர்த்தி செய்ய வேண்டும்? 1. குழந்தையின் தாய் இந்திய குடிமகனாக இருந்தால் போதும். 2. குழந்தையின் தந்தை இந்திய குடிமகனாக இருந்தால் போதும். 3. இருவரும் கட்டாயம் குடிமை இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
9. இந்திய குடியுரிமை பெற்ற ஒருவரின் குழந்தை வெளிநாட்டில்.................முதல்................... வரையான பாலத்தின் பிறக்குமேயானால் அக்குழந்தை, வம்சாவளியால் குடியுரிமை பெறும் தகுதி உடையது ஆகிறது.
10. கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருத்தமான விடைகளை தேர்வு செய்க : இந்திய குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை கூறுகிறது. i) நற்பண்புகளுடன் இந்திய மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் போதிய அறிவினைப் பெற்று குடியுரிமை பெறுதல் ii) 1985-ல் ஜப்பான் தம்பதிகளுக்கு இந்தியாவில் ஒர் குழந்தை பிறந்து, அது பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுதல் iii) பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல் iv) சொத்துரிமை பெற்று குடியுரிமை பெறுதல்.
11. ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது. i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது ii) பதிவு செய்வதன் மூலம் iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
12. கூற்று : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர். காரணம் : 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.
13. தவறான கூற்றை கண்டறியவும் i) சமயச் சார்பற்ற இந்திய நாடானது அனைத்து சமய விழாக்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கிறது. ii) நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் தேசிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பது அல்ல. iii) சமயச் சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. iv) குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கு சமயச் சார்பற்ற கல்வி தேவை.
14. கூற்று : நவீன தேசிய நாடுகள் அனைத்தும் பல சமயங்களைக் கொண்டிருக்கின்றன. காரணம் : அனைத்து சமயங்களையும் சகித்துக் கொள்ளும் தன்மை அவசியமானதாகும்.
15. செக்யூலரிஸம் (Secularism) என்ற பதத்தை உருவாக்கியவர் யார்?
16. "சமயம் நமக்கு பகைமையை போதிக்கவில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு" என்பது எந்த கவிஞரின் கூற்றாகும்?
17. சமய சார்பற்ற என்ற சொல்லானது இந்திய அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு எது?
18. இந்தியாவில் சமய சுதந்திரம் நாட்டு குடிமக்கள் மட்டுமின்றி இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கு வழங்கப்படுகிறது. இது எந்த வழக்கின் மூலம் உச்ச நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டது?
19. தவறான கூற்றைக் கண்டறியவும் அ) பிரிவு 39 (F) ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகை செய்கிறது. ஆ) பிரிவு 45 – 18 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க முயல்கிறது. இ) சட்டப்பிரிவு 21A கல்வி உரிமைச் சட்டம். ஈ) போக்சோ சட்டம் – பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்.
20.‘குழந்தைகள் உரிமை’ குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.
21. மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றின் கீழுள்ள துறைகள் இந்திய அரசியலமைப்பின் ___________ அட்டவணையில் உள்ளது.
22. பொருத்துக : (1) ஆங்கில உரிமைகள் மசோதா – 1789 (2) அமெரிக்க அரசியலமைப்புச்சட்டம் - 1689 (3) ஹேபியஸ் கார்பஸ் சட்டம் - 1791 (4) பிரான்சிஸ் அறிவிப்பு - 1679
23. பின்வரும் கூற்றை ஆராய்க. (1) மனித உரிமைகளானது தனி நபர்கள் மற்றும் சமூகம் தொடர்பானவை. (2) மனித உரிமைகள் மக்கள் சுதந்திரமாக மற்றும் விருப்பப்படி வாழ்வதை உறுதி செய்வதுடன் இயல்பாக பெறும் அனைத்து உரிமைகளையும் குறிப்பிடுகிறது.
24. பொருத்துக (1) தொழிற்சாலைச்சட்டம் – 1952 (2) மகப்பேறு நலச்சட்டம் - 1951 (3) தோட்டத்தொழிலாளர்கள் சட்டம் - 1948 (4) சுரங்கச்சட்டம் - 1961
25. தேசிய நெடுஞ்சலைகளில் ஒவ்வொரு ………………… கி.மீ தொலைவிலும் ஓர் அவசர சிகிச்சை ஊர்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது.
26. பின்வரும் கூற்று / கூற்றுகளில் சரியில்லாதது எது / எவை? i) இந்தியா, பிரேசிலியா பிரகடனத்தில் 2015 ஆம் அண்டு கையெழுத்திட்டது. ii) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இரு சித்திரபுத்தகங்களை வெளியிட்டுள்ளது. iii) சாலை பாதுகாப்பு வாரம் இந்தியாவில் பொதுப்பணித்துறை அமைச்சகத்தால் துவங்கப்பட்டது. iv) பிரேசிலியா பிரகடனம் - முதலாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடு
27. கூற்று : மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துகள் ஏற்படுகிறது. காரணம் : மது அருந்துவது கவனத்தைக் குறைத்து பார்வையை தடைபடுத்துகின்றது.
28. கூற்று 1: ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் ஒருவர் போக்குவரத்து குறியீடுகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டியதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. கூற்று 2: போக்குவரத்து விளக்குகள் சாலைகள் சந்திக்கும் இடங்களிலும் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
29. இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
30. கூற்று 1: தொடர்ச்சியான ஒரு மஞ்சள் கோடு வாகனங்களை முந்திச் செல்லலாம் மற்றும் இடதுபுறம் மட்டுமே வாகனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. கூற்று 2: இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் தடம் மாறுவதை தடை செய்கிறது
31. தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு
32. பின்வரும் கூற்று(களில்) சரியல்லாதது எது? i) முன்புற வாகனத்திலிருந்து சரியான இடைவெளியில் தொடரவும். ii) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடிக்க வேண்டும். ஒருபோதும் வேகத்திற்கான எல்லையினைத் தாண்டக்கூடாது. iii) வாகனம் ஓட்டும்பொழுது இருக்கை வார்பட்டை அணியத் தேவையில்லை. iv) வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினைக் குறைக்க வேண்டாம்.
33. சீன-இந்தியப் போர் நடைபெற்ற ஆண்டு
34. அஸ்ஸாம் ரைபிள்ஸ் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க. I. அஸ்ஸாம் ரைபிள்ஸ் 1835 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. II. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
35. கூற்று : தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிகச்சிறந்த வெற்றியாகும். காரணம் : இந்தியா அனைத்து வகையான இனப்பாகுபாட்டிற்கும் எதிராகப் போராடியது.
36. ஊர்க்காவல் படை பற்றிய பின்வரும் எந்த கூற்று / கூற்றுகள் சரியானது அல்ல? I. இந்திய ஊர்க்காவல் படை இந்திய இராணுவத்திற்குத் துணையான ஒரு தன்னார்வப் படை ஆகும். II. 20 முதல் 35 வயதுடைய இந்தியக் குடிமக்கள் ஊர்க்காவல் படையில் சேரலாம். III. ஊர்க்காவல் படையில் சேரும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
37. இந்திய ஆயுதப் படைகளை கௌரவிப்பதற்காக இந்திய அரசால் தேசிய போர் நினைவுச்சின்னம் எங்கு கட்டப்பட்டுள்ளது?
38. பின்வரும் கூற்றை ஆராய்க i) இந்திய தண்டனைச் சட்டம் 1860இல் உருவாக்கப்பட்டது. ii) கல்கத்தா உயர்நீதிமன்றம் 1862இல் நிறுவப்பட்டது. iii) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது. மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை?
39. இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட இடம்
40.விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு....................
41. உயர் நீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல? i) உயர் நீதிமன்றம் மாநிலங்களின் மிக உயர்ந்த நீதிமன்றமாகும். ii) இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர் நீதிமன்றம் உள்ளது. iii) இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் தங்களுக்கென ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டிருக்கலாம். iv) தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டுள்ளன.
42. வங்கியில் பல வகையான கணக்குகளின் மூலம் பணத்தை சேமிக்கலாம் i) நெகிழ்வான விதிமுறைகளுடன் பூஜ்ஜிய இருப்புத் தொகையை கொண்டது மாணவர் சேமிப்பு கணக்கு. ii) நடப்பு கணக்கு வைப்பை கால வைப்பு என்பர். iii) குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக வங்கியில் பணம் இருப்பதே நிரந்தர வைப்பு என்பர். iv) தேவைக்கேற்ப வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள நடப்பு கணக்கு உதவுகின்றது.
43. நம் வருமானத்தில் நுகர்வுக்கு பயன்படுத்தப்படாத ஒரு பகுதியான சேமிப்பு பல நன்மைகளை கொண்டுள்ளது.
44. ஆங்கில நாணயங்களின் பெயர்கள்................
45. ‘எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்’ என வரையறுத்து கூறியவர்
46. பின்வருவனவற்றுள் எது சரியான விடை? i) அரசுக்கு மட்டுமே சொந்தமானதொழில்கள் அட்டவணை- A என குறிப்பிடப்படுகின்றன. ii) தனியார் துறையானது மாநில துறையின் முயற்சிகளுக்குத் துணை புரியக் கூடிய தொழில்கள் புதிய அலகுகளைத் தொடங்குவதற்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்வது அட்டவணை – B என குறிப்பிடப்படுகின்றன. iii) தனியார் துறையில் இருந்த மீதமுள்ள தொழில்கள் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை .
47. பொதுத்துறை அல்லாத நிறுவனம் எது?
48. பின்வருவனவற்றுள் எது சரியான விடை? i) பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமானவை. ii) 65 ஆண்டுகள் பழமையான திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது. iii) இந்திய ரிசர்வ் வங்கியானது பொதுக்கழக அமைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
49. அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம்......................
50. கலப்புப் பொருளாதாரம் என்ற பொருளாதார நடவடிக்கை தோன்றக் காரணமானவர்...................