6th std SOCIAL FULL TEST

    0
    350

    Welcome to your 6th std SOCIAL FULL TEST

    1. கீழ்க்கண்டவற்றுள் புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை? 1. மெஹர்கர் 2. மாகரா 3. அத்திரம்பாக்கம் 4. அதிச்சநல்லூர் 5. டவோஜலி ஹேடிங்

    2. கீழ்க்கண்டவற்றுள் யாருடைய வரலாற்று ஆய்வுகள் மூலம் அசோகரின் சிறப்புகள் வெளி உலகுக்கு தெரிய வந்தன? 1. வில்லியம் ஜோன்ஸ் 2. ஜேம்ஸ் பிரின்செப் 3. அலெக்சாண்டர் கன்னிங்காம் 4. சார்லஸ் ஆலன்

    3. மானுடவியலாளர்களால் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதக் காலடித்தடங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை?

    4. கூற்று: மனிதர்கள் காலத்துக்கு ஏற்றவாறு பல மில்லியன் ஆண்டுகளாக தங்களைத் தகவமைத்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளனர். காரணம்: இயற்கையில் ஏதேனும் ஒரு திடீர் மாற்றம் நிகழும்போது, உயிரினங்கள் அந்த மாற்றத்திற்கு ஏற்பத் தங்களை தகவமைத்துக் கொண்டு உயிர் பிழைக்கின்றன.

    5. கூற்று 1: தொடக்க காலத்தில் மனிதர்கள் செம்மண்ணில் பானை செய்யக் கற்றுக்கொண்டார்கள். கூற்று 2: வண்ணச்சாயங்கள் தயாரிக்க தாவரங்களின் வேர்கள், இலைகள், மரப்பட்டைகள் ஆகியவற்றின் சாற்றினைப் பயன்படுத்தினர்.

    6. கீழ்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் என்பதற்கான காரணங்கள் யாவை? 1. விவசாயம் மற்றும் கைவினை தொழில்களுக்கான திடமான அடித்தளம் 2. தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை 3. சிறப்பான கட்டிடக் கலை வேலைப்பாடு

    7. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு. 1. பூம்புகாரில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்தது. 2. பொ. ஆ 100 வரை சிறப்புற்று திகழ்ந்த புகார் நகரம் கடல் கோள் அல்லது கடல் சீற்றங்களால் அழிந்திருக்கலாம்.

    8. நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கூறியவர் யார்?

    9. கூற்று 1: பேரண்டம் என்பது மிகப்பரந்த விண்வெளி ஆகும். கூற்று 2: சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்டம் உருவானதாக பல வானியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

    10. கூற்று 1: சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000 °C. கூற்று 2: சூரியனின் வெப்பநிலை புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் 8.3 நிமிடங்கள் ஆகின்றது.

    11. ‘வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

    12. வெள்ளி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

    13. கூற்று 1: ஆறுகள், பனியாறுகள், காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கியச் செயல்கள் அரித்தல் மற்றும் படிய வைத்தல் ஆகும். கூற்று 2: இச்செயல்களால் மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.

    14. பசிபிக் பெருங்கடலின் முக்கோண வடிவத்தின் மேற்பகுதி பசிபிக் பெருங்கடலையும் ஆர்டிக் பெருங்கடலையும் இணைக்கும் ________ நீர்ச்சந்தியில் காணப்படுகிறது.

    15. கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு. 1. இந்தியா ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகத்தின் தாயகமாக விளங்குகிறது. 2. நிலம் வழியாகவும் கடல் வழியாகவும் பல்வேறு இனமக்கள் இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்தனர்.

    16. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு. அனைத்து மதங்களும் சமமானது என்று நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அறிவிக்கிறது. இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், சமணமதம், ஜொராஸ்டிரிய மதம் போன்ற எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் தழைத்தோங்கி உள்ளன

    17. இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

    18. பின்வருவனவற்றுள் பாரபட்சம் உருவாவதற்கான காரணங்கள் யாவை? 1) சமூகமயமாக்கல் 2) பொருளாதார பயன்கள் 3) சர்வாதிகார ஆளுமை

    19. நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை முதன்முதலில் பெற்ற வீரர் யார்?

    20. நிலத்தின் மீதுள்ள மரங்கள் மற்றும் செடி கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்படும் வேளாண் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    21. ரிக் வேத காலத்தில் பெண்களின் நிலை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு. 1. இவர்கள் குழந்தை திருமணத்தையும், உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை. 2. இவர்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது.

    22. தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சம காலத்தில் நிலவிய பண்பாடுகள் குறித்த சரியான கூற்றை தேர்ந்தெடு. 1. வட இந்தியாவின் பின் வேதகால பண்பாடும், தென் இந்தியாவின் இரும்பு காலமும் சம காலத்தை சேர்ந்தவை. 2. பண்டைய தமிழகத்தின் பெருங்கற்காலம், சங்க காலத்திற்கு முந்தைய காலத்தோடு ஒத்து போகிறது. 3. இந்தியாவின் செம்பு காலப் பண்பாடு முதிர்ந்த நிலை ஹரப்பா பண்பாட்டின் சமகால பண்பாடாகும்.

    23. தமிழ்நாட்டில் பெருங்கற்கால நினைவுச் சின்னம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு. 1. புதிய கற்காலத்தின் கடைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பெருங்கற்கால புதைப்பு முறைகளை பின்பற்றத் தொடங்கினர். 2. இறந்தவர்களைப் புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய மண் பானைகள் முதுமக்கள் தாழிகள் என்று அழைக்கப்பட்டன.

    24. சமணர் மலை என்ற குன்று எந்த கிராமத்தில் அமைந்துள்ளது?

    25. கீழ்க்கண்டவற்றுள் சமண மற்றும் பௌத்த மதம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு. 1. கடவுள் இருப்பதாக சமணம் நம்பவில்லை. ஆனால் ஒவ்வொரு உயிரிலும் ஜீவன் இருப்பதை நம்பியது. 2. அனாத்மா ( எல்லையற்ற ஆன்மா ) அனித்யா ( நிலையாமை ) ஆகிய கருத்துக்களுக்கு அழுத்தம் வழங்கியது

    26. மகதத்தின் அரச வம்சங்களின் சரியான வரிசையைக் கண்டறி: சிசுநாக வம்சம் - நந்த வம்சம் - மௌரிய வம்சம் - ஹரியங்க வம்சம் B நந்த வம்சம் - மௌரிய வம்சம் - ஹரியங்க வம்சம் - சிசுநாக வம்சம் ஹரியங்க வம்சம் - சிசுநாக வம்சம் - நந்த வம்சம் - மௌரிய வம்சம் D ஹரியங்க வம்சம் - நந்த வம்சம் - சிசுநாக வம்சம் - மௌரிய வம்சம்

    27. கூற்று 1: நாளந்தா என்னும் சொல் நா+அலம்+தா என்ற மூன்று பிராகிருதச் சொற்களின் இணைப்பில் உருவானது. கூற்று 2: இதன் பொருள் ‘வற்றாத அறிவை அளிப்பவர்’ என்பதாகும்.

    28. பொருத்துக: A) கௌடில்யர் - 1. முத்ராராட்சஷம் B) விசாகதத்தர் - 2. அர்த்த சாஸ்திரம் C) மாமூலர் - 3. இண்டிகா D) மெகஸ்தனிஸ் - 4. அகநானூறு பாடல்

    29. ____________இல் உள்ள அசோகருடைய தூணின் சிகரப் பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும், வட்ட வடிவ அடிப்பகுதியில் இடம் பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசியக் கொடியின் மையச் சக்கரமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    30. மணல் என்ற இயற்கை வளத்திலிருந்து __________ என்ற தனிமத்தை பிரித்து அதிலிருந்து PV செல்களை பயன்படுத்தி ஒளி மின்னழுத்தக் கலம் தயாரிக்கப்படுகிறது.

    31. கூற்று 1: பழங்கால மனிதன் மாற்று வளங்களை தேடி புவியைத் தோண்டும்போது முதலில் தாமிரத்தையும் பின்பு இரும்பையும் கண்டுபிடித்தான். கூற்று 2: உலகில் காணப்படும் உயிருள்ள பொருள்கள் மனிதனால் அடையாளம் காணப்பட்ட பிறகுதான் உயிரியல் வளங்களாக அறியப்பட்டன.

    32. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

    33. "உலகின் பெரும் மருந்தகம்” என்று அழைக்கப்படும் காடுகள் எவை?

    34. கூற்று 1: ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் ஒரு வகை திடப்பொருளே திமிங்கலப்புனுகு ஆகும். கூற்று 2: ஒரு பவுண்டு (0.454 கி.கி) திமிங்கலப் புனுகின் விலை 63,000 அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும்.

    35. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

    36. கூற்று 1: நீர்வாழ் பாலூட்டியான ஓங்கிலின் (டால்பின்) நீண்ட வாயும் கரியால் முதலையின் வாயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். கூற்று 2: வெளவால்களை போலவே ஓங்கில் களும் மீயொலி அலைகளைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கின்றன.

    37. கூற்று 1: ஹோஃபிபாகஸ் ஹானா உலகின் நீண்ட விஷம் நிறைந்த பாம்பு. கூற்று 2: இவை இந்தியாவின் மழைக்காடுகள் மற்றும் சமவெளிகளில் வாழ்கின்றன.

    38. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

    39. சரியான கூற்றைத் தேர்ந்தெடு. 1. தேசிய இலச்சினை மேல்பகுதி, அடிப்பகுதி என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. 2. மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியிருக்குமாறு வட்டவடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 3. அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன. 4. அடிப்பகுதியில் விலங்கு உருவங்களுக்கிடையே தர்ம சக்கரம் அமைந்துள்ளது.

    40. “வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் முதல் பத்தி விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்களித்தது. இதன் காரணமாக, தேசிய கீதத்துக்கு இணையான தேசிய பாடல் என்ற சிறப்பு இப்பாடலுக்கு அளிக்கப்படுகிறது." என்று அறிவித்தவர் யார்?

    41. கூற்று 1: இந்திய அரசமைப்புச் சட்டமானது மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் சட்டமன்ற ஆட்சி முறையைப் பின்பற்றி ஆட்சி செய்ய வழிவகை செய்துள்ளது. கூற்று 2: சட்டமன்ற ஆட்சி முறை அமைப்பின்படி, நிறைவேற்று அதிகாரம் சட்டமன்றத்தின் கூட்டுப்பொறுப்பாக இருக்கும்.

    42. கூற்று 1: முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் மூலம் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலைத் தொழில்கள் எனப்படும். கூற்று 2: இரண்டாம் நிலைத் தொழில்கள் தொழில் துறை என்றும் அழைக்கப்படுகின்றன.

    43. தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த பதினொன்று வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்தவர் யார்?

    44. சமுத்திரகுப்தர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

    45. பல்லவர் கால கட்டடக்கலையின் வகைகளில் சரியான இணை எது? 1. பாறைக் குடைவரைக் கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி 2. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி 3. கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன்பாணி, நந்திவர்மன் பாணி

    46. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

    47. கூற்று 1: ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் அதிகமான மழைப்பொழிவு அல்லது பனிக்கட்டி உருகுதல் அல்லது இரண்டும் சேர்ந்த சூழல் ஆற்று வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. கூற்று 2: கடற்கரை வெள்ளப்பெருக்கு என்பது சூறாவளி, உயர் ஓதம் மற்றும் சுனாமி ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு கடற்கரை சமவெளிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.

    48. இந்தியக் குடிமக்களில் எத்தனை சதவீத பேர் தங்களது நாட்டின் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன?

    49. கூற்று 1: நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம். கூற்று 2: இந்தியாவிலேயே முதல் முறையாக பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

    50. கூற்று 1: உலகில் முதன்முதலாக புவி மாதிரியை கி.பி 150ஆம் ஆண்டில் கிரேக்கர்கள் உருவாக்கியுள்ளனர். கூற்று 2: இந்திய வானியல் அறிஞர் முதலாம் ஆரியபட்டர் அவர்கள் எழுதிய "ஆர்யபட்ட சித்தாந்தம்" என்ற நூலில் "விண்மீன்கள் வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.