வேலு நாச்சியார்

0
342

வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முதல் பெண்மணி
இராமநாதபுரத்தை ஆண்டு மன்னர் செல்லமுத்து சேதுபதி – சக்கந்தி  முத்தம்மாள் இணையருக்கு பிறந்தவர்.
வேலு நாச்சியார் பெற்றோரால் ஆண் வாரிசைப் போன்று வளர்க்கப்பட்டார்.
ஆயுதப்பயிற்சி முதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.
1772-ல் ஆங்கிலேயர் சிவகங்கை சீமையின் மீது படையெடுத்தனர். காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.
வேலு நாச்சியார், மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்துப் பேசினார். அவருக்கு உதவ விரும்பிய ஐதர் அலி ஐயாயிரம் படைவீரர்களை அவருடன் அனுப்பினார்.
மருது சகோதரர்களுடன் வீரர் படைக்குத் தலமையேற்றுச் சென்ற வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். அப்போரில்  கணவரைக் கொன்றவர்களை வென்று 1780-ஆம் ஆண்டு சிவகங்கையை மீட்டார்.