முக்கிய நடப்பு நிகழ்வுகள்-மே-02

0
244

🔥முக்கிய நடப்பு நிகழ்வுகள்🔥1. இந்தியாவின் G20 தலைமையின் கீழ் உலகலாவிய சுகாதாரம் பற்றிய “அறிவியல் 20″ கூட்டம் மே 1 மற்றும் 2 அன்று இலட்சத்தீவில் உள்ள பங்காரம் தீவில் நடைப்பெறுகிறது.2. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான “இந்தியாவின் முதல் மாதிரி மீள்குடியேற்ற காலனியானது” ஒடிசாவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் இந்த திட்டத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்அவர்களால் பகபதியாவில் காலனியின் முதல் மேம்பாட்டு கட்டத்திற்கு ரூ.22.5 கோடியை ஒப்புதல் அளித்தார்.3. பேங்க் ஆஃப் இந்தியாவில் செயல் இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன் ரஜ்னீஷ் கர்நாடக் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை பொது மேலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 4. மூன்று ஆண்டுகளுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் தேபாதத்தா சந்த் (52) நியமிக்கப்பட்டுள்ளார்.5. காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர்–மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிஇசிஆர்ஐ)தலைமை இயக்குநராக கே.ரமேஷ் சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.6. ஜகத்குரு சங்கராச்சாரியார் மஹராஜ் அவர்களால் உத்தர்காண்டின் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தால் எழுதப்பட்ட “மேரா ஜீவன் லக்ஷ்ய உத்தரகாண்டியத்” புத்தகத்தை வெளியிட்டார்.7. ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை தோற்கடித்து டிங் லிரன், முதல் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற முதல் சீனர் என்ற பெருமையை அடைகிறார்.8. சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் மலேசியாவின் எட்டாவது நிலை வீரர்களான ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யி ஜோடியை வீழ்த்தி ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றில் சாதனை படைத்துள்ளனர். 9. ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் தடகள மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் “அப்துல்லா அபுபக்கர்” தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.