முக்கிய நடப்பு நிகழ்வுகள்-ஏப்ரல்-20

0
83

🔥முக்கிய நடப்பு நிகழ்வுகள் 🔥

  1. மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் ஏப்ரல் 19 அன்று SATHI (விதை கண்டுபிடிப்பு, அங்கீகாரம் மற்றும் ஹோலிஸ்டிக் சரக்கு) போர்டல் மற்றும் மொபைல் செயலியை தொடங்கி வைத்தார்.
  2. மார்ச் 2023க்கான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் போக்குவரத்து அறிக்கையின்படி ஜனவரி – மார்ச் 2023 காலகட்டத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 375.04 லட்சமாக இருக்கிறது.
  3. ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் உலகின் பணக்கார நகரங்கள் 2023 என்ற பெயரில் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட உலகின் பணக்கார நகரமாக அமெரிக்காவின் நியூயார்க் முதலிடம் பிடித்துள்ளது. அதில் வட அமெரிக்காவில் உள்ள 97 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
  4. உலக மக்கள் தொகை 804.5 கோடியாக உள்ளது. இதில் இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உள்ளனர்.

ஐக்கிய நாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனாவை காட்டிலும் இந்தியாவின் மக்கள் தொகை இந்த ஆண்டிற்குள் அதிகரித்து விடும் என்று கூறியுள்ளது.

  1. பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனமான ‘வேர்ல்டுலைன் இந்தியா’ கடந்த 2022ம் ஆண்டில், நாட்டின் முதன்மையான டிஜிட்டல் பண பரிவர்த்தனை நகரங்களில் ஒன்றாக சென்னை மாறியுள்ளது என தெரிவித்துள்ளது.
  2. “நிங்கலூ ஹைபிரிட்” சூரிய கிரகணம் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக்கூடியது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி ஏப்ரல் 20ம் தேதி அதிகாலை 3.34 மணி முதல் 6.32 வரை ஏற்படுகிறது.
  3. தமிழகத்தில் ஆண்டுதோறும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் `சிறந்த நெசவாளர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
  4. தமிழகத்தில் உள்ள சிவகாசியில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.