சார்லஸ் டார்வின் நினைவு தினம்ஏப்ரல்.19

0
380

ஏப்ரல்.19:
இன்று
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் என்று கூறிய
சார்லஸ் டார்வின் நினைவு தினம்!

👉பரிணாம வளர்ச்சியியலின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.

👉அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.

👉தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார்.

👉தன் கண்டுபிடிப்புகளையும், அனுபவங்களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

👉உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி On the Origin of Species என்ற புத்தகத்தை எழுதினார்.

👉உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய சார்லஸ் டார்வின் 1882 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று தனது 73வது வயதில் மறைந்தார்.