ஏப்ரல்.19:இன்று புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் பிறந்த நாள்

0
233

ஏப்ரல்.19:இன்று புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் பிறந்த நாள்!👉ஆங்கிலேயரான ஜிம் கார்பெட், இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலம் நைனிடாலில், 25-07-1875இல் பிறந்தார். 👉அவருடைய பெற்றோர் கோடைக் காலத்தில் நைனிடாலிலும், குளிர்காலத்தில் தற்போதைய உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள காலதுங்கி என்கிற காடுகளால் சூழ்ந்த கிராமத்திலும் வசித்து வந்தார்கள்.👉சிறு வயதிலிருந்தே ஜிம் கார்பெட்டிற்கு காடுகளில் சுற்றித் திரியும் வாய்ப்பு கிடைத்ததால் காடுகளையும் காட்டுயிர்களையும் அவர் நேசித்தார். 👉சாகசத்திற்காக வேட்டையிலும் ஈடுபட்டார். அவருடைய காலத்தில் வேட்டை என்பது கௌரவமாகக் கருதப்பட்டது.👉அவரின் கூரியக் கண்பார்வை, கேட்கும் சக்தி, நினைவாற்றல், துணிச்சல், விலங்குகள், பறவைகள் போல ஒலியெழுப்பும் திறன், இரவில் நிலவு வெளிச்சத்திலும், நட்சத்திர ஒளியிலும்கூட சுடும் ஆற்றல், புலி, சிறுத்தை ஆகியவற்றின் காலடித் தடத்தை வைத்து அவற்றின் வயது, பாலினம், ஆரோக்கியம் ஆகிய அம்சங்களைக் கணித்தல் போன்ற திறமைகள் காடுகளின் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ என அவரைப் போற்ற வைத்தது.👉ஜிம் கார்பெட் காலமாகி 68 ஆண்டுகள் ஆனபோதிலும், இன்றுவரை அவருடைய வேட்டை இலக்கிய நூல்கள் விற்பனையாகி வருகின்றன.👉அவருடைய வாழ்நாளில் 1,500 மனித உயிர்களைப் பலிகொண்ட 12 ஆட்கொல்லிகளை வேட்டையாடி குமாயுன் மலைப்பிரதேச மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். 👉காலப்போக்கில் வேட்டையாடுவதைத் தவிர்த்துவிட்டு‌, புலிகளைப் படமெடுக்கத் தொடங்கினார். 👉அவர் எடுத்த படங்கள் லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இப்போதும் காணக்கிடைக்கின்றன.👉அவர் வாழ்ந்த காலதுங்கியின் அருகிலிருந்த ஹால்த்வானி என்ற 221 ஏக்கர் பரப்பளவுள்ள கைவிடப்பட்ட கிராமத்தை ரூ1,500/-க்கு வாங்கி புதர்கள், செடிகளை நீக்கி, நிலப் பகுதிகளாகப் பிரித்து, அத்துடன் வீடுகளையும் கட்டி, தண்ணீர் வசதிக்காக சிமென்ட் கால்வாய்களையும், விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்க, ஆறு அடி உயரச் சுற்றுச்சுவரையும் கிராமத்தைச் சுற்றி அமைத்து, அந்த வீடுகளில் மலைவாழ் மக்களைக் குடியமர்த்தினார். 👉அங்கிருந்த வீடுகளுக்கும் நிலங்களுக்கும், அவரே வரி செலுத்திவந்தார்.👉காலதுங்கியில் இருந்த அவரின் வீடு‌, ஒரு சிறிய மருத்துவமனையாகவே செயல்பட்டது. 👉அவருடைய தமக்கை மேகி என்பவர் மருத்துவச் செவிலியர் பயிற்சி பெற்றிருந்ததால், ஒவ்வொரு நாளும் அங்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்யப்பட்டது. 👉இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றபோது அவரும், அவருடைய தமக்கையும் கென்யா சென்று அங்கேயே தங்குவது என்று முடிவெடுத்தனர். ஆதலால் ஹால்த்வானி கிராமத்தை அந்த மக்களுக்கே இலவசமாக வழங்கி விட்டார்.👉ஜிம் கார்பெட் கென்யாவில் உள்ள நையேரியில் 19-04-1955 அன்று மாரடைப்பால் காலமானார். .