மார்ச்.23:
இன்று
உலக வானிலை தினம்!
ஓர் இடத்தின் வானிலை மற்றோரிடத்தின் வானிலையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
அதனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய காலநிலை இடைவேளையைச் சரியாகப் பகிர்தல் அவசியமாகக் கருதப்பட்டது.
இவ்வாறான பகிர்தலின் நோக்கோடு தொடங்கப்பட்டதே World Meteorological Organization (WMO) எனப்படும் உலக வானிலை அமைப்பு.
1950-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி ஜெனிவாவில் இந்தியா உள்பட 193 நாடுகள் இணைந்து உலக வானிலையியல் அமைப்பு (WORLD METEOROLOGICAL ORGANIZATION) தொடங்கப்பட்டது.
உலக வானிலை அமைப்பு தொடங்கப்பட்ட இந்த தினம், ஒவ்வோர் ஆண்டும் உலக வானிலையியல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, உலக வானிலை தினம், ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளைக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “வானிலை, காலநிலை மற்றும் நீரின் எதிர்காலம் – தலைமுறைகள் முழுவதும்…” (“The Future of Weather, Climate, and Water Across Generations”).