பிப். 14: யூடியூப் தொடங்கப்பட்ட நாள்!
👉காணொளி பதிவேற்ற இணையதளங்களில் மிகப் பிரபலமான முன்னோடியான யூடியூப் 2005 பிப்ரவரி 14-ல் தொடங்கப்பட்டது.
👉யூடியூப் தளத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது.
👉சாட் ஹர்லி பென்சில்வேனியாவில் உள்ள இன்டியானா பல்கலைக்கழகத்தில் வடிவமைப்பு பட்டப்படிப்பு படித்தவர்.
👉ஸ்டீவ் சென் மற்றும் ஜாவேத் கரீம் இருவரும் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்தவர்கள்.
👉முதன்முதலில் கலிபோர்னியா நகரில் ஒரு சிறிய ஜப்பானிய உணவகத்தின் மேல் மாடியில்தான் யூடியூப் நிறுவனத்தை மூவரும் இணைந்து தொடங்கினர்.
👉2006-ல் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு அதன் துணை நிறுவனங்களில் ஒன்றாக இயங்கிவருகிறது யூடியூப்.
👉காணொளிகளைப் பதிவேற்றுதல், பகிர்தல், பார்த்தல், கருத்துகளைத் தெரிவித்தல், விருப்பம் / விருப்பமின்மைக் குறியிடுதல், மதிப்பிடுதல் ஆகிய வசதிகளை யூடியூப் தருகிறது.
👉இன்று உலகின் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தங்கள் காணொளி வடிவச் செய்திகளை யூடியூபில் வெளியிடுகின்றன.
👉ஒவ்வொரு நாளும் சராசரியாக 13 கோடிப் பேர் யூடியூப் தளத்தைப் பார்க்கின்றனர்.