புவியியலில் மண், வளிமண்டலம்,,கோள்கள், மேகங்கள், காடுகள், தல காற்றுகள் பற்றிய தகவல்கள்

0
408

புவியியலில்
1)மண்
2)வளிமண்டலம்
3)கோள்கள
4)மேகங்கள்
5)காடுகள்
6)தல காற்றுகள் பற்றிய தகவல்கள்:-

  1. மண் வகைகள் :
    🏜 புவியின் மேற்பரப்பில் மிகச்சிறிய பாறைத் துகள்கள் ஆன படலமே – மண்
    🏜 மண் வகைகள் – 5
  2. மணல்
  3. வண்டல் மண்
  4. செம்மண்
  5. கரிசல் மண்
  6. துருகல் மண் (மலை மண்)
  7. மணல்:
    🏜 மணல்களுக்குள் இருக்கும் இடைவெளி குறைவு
    🏜 காணப்படும் இடம் – கடற்கரை, பாலைவனம்
    🏜 முக்கிய பயிர்கள் – தென்னை, சவுக்கு, முந்திரி
  8. வண்டல் மண்:
    🏜 பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது.
    🏜 பழைய வண்டல் மண் – பாங்கர்
    🏜 புதிய வண்டல் மண் – காதர்
    🏜 காணப்படும் இடம் – சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, கங்கை ஆற்று சமவெளியில்
    🏜 முக்கிய பயிர்கள் – நெல், கரும்பு, வாழை
  9. செம்மண்:
    🏜 இவ்வகை மண்ணில் காணப்படும் சத்து – இரும்பு சத்து
    🏜 காணப்படும் இடம் -கர்நாடகா, ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு
    🏜 முக்கிய பயிர்கள் – அவரை, துவரை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள்
  10. கரிசல் மண்:
    🏜 காணப்படும் சத்துகள் – சுண்ணாம்பு சத்து, இரும்பு, பொட்டாசியம்
    🏜 குறைந்த அளவு காணப்படும் சத்து – பாஸ்பரஸ், நைட்ரஜன்
    🏜 கரிசல் மண் வேறுபெயர் – ரீகர் மண்
    🏜 காணப்படும் பகுதி – மகாராட்டிர, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம்
    🏜 விளையும் பயிர்கள் – பருத்தி, புகையிலை, மிளகாய், எண்ணெய் வித்துக்கள்
  11. மலைமண்:
    🏜 சாலை அமைக்க பயன்படுகிறது.
    🏜 காணப்படும் இடம் – மலை பிரதேசங்களில் (கேரளா, கர்நாடக, அஸ்ஸாம்)
    🏜 விளையும் பயிர்கள் – காபி, தேயிலை, ரப்பர்
  12. வளிமண்டலம் :-
    ☄ வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள்:-
    💥 நைட்ரஜன் – 78%
    💥 ஆக்ஸிஜன் – 21%
    💥 ஆர்கான் – 0.934%
    💥 கார்பன் டை ஆக்சைடு – 0.033%
    💥 பிற வாயுக்கள் – 0.033%
    ☄ வளிமண்டல அடுக்குகள் – 5
  13. ட்ரோபோஸ்பியர்
  14. ஸ்ட்ரோடோஸ்பியர்
  15. மீசோஸ்பியர்
  16. அயனோஸ்பியர்
  17. எக்சோஸ்பியர்
  18. ட்ரோபோஸ்பியர்:
    ☄ வேறுபெயர் – கீழ் அடுக்கு
    ☄ 8 கி.மீ முதல் 16 கி.மீ வரை பரவியுள்ளது.
    ☄ இடி, மின்னல், மேகம், புயல் மற்றும் மழை ஆகிய வானிலை மாற்றங்கள் நிகழும் அடுக்கு
    ☄ வானிலை அடுக்கு என்றும் கூறுவர்
    ☄ வளிமண்டலத்தில் மொத்த காற்றில் 80% இவ்வடுக்கில் தான் உள்ளது.
  19. ஸ்ட்ரோடோஸ்பியர்:
    ☄ வேறுபெயர் – படுக்கை அடுக்கு
    ☄ 16 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பரவியுள்ளது.
    ☄ விமானங்கள் பறக்கும் அடுக்கு
    ☄ இதில் 20 கி.மீ. முதல் 35 கி.மீ வரை ஓசோன் அடுக்கு காணப்படுகிறது
    ☄சூரியனில் இருந்து பூமிக்கு வரும் புற ஊதா கதிர்களை தடுப்பது – ஓசோன்
    ☄ ஓசோனை பாதிக்கும் வாயு – குளோரோ ஃப்ளுரோ கார்பன் (CFC)
    ☄ ஓசோன் குறியீடு – O3
  20. மீசோஸ்பியர்:
    ☄ வேறுபெயர் – இடை அடுக்கு
    ☄ 50 கி.மீ முதல் 80 கி.மீ வரை பரவியுள்ளது.
    ☄ எரிகற்கள் வாழும் அடுக்கு
  21. அயனோஸ்பியர்:
    ☄ வேறுபெயர் – வெப்ப அடுக்கு
    ☄ 80 கி.மீ முதல் 500 கி.மீ வரை பரவியுள்ளது.
    ☄ வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பும் நிகழ்ச்சி மின்காந்த அலைகளை அனுப்பப்படுகிறது.
    ☄ 100 கி.மீ முதல் 300 கி.மீ வரை நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் காணப்படுகிறது
    ☄ இவ்வடுக்கு வானொலி அடுக்கு என்றும் அழைக்கப்படும்
  22. எக்சோஸ்பியர்:-
    ☄ வேறுபெயர் – வெளி அடுக்கு
    ☄ 500 கி.மீ க்கு மேல் காணப்படுகிறது
    ☄ இவ்வடுக்கில் காணப்படும் வாயுக்கள் – ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
    ☄ இவ்வடுக்கில் பிறகு விண்வெளி வெற்றிடமாகவே இருக்கும்.
  23. கோள்கள் :-
    கோள்கள் மொத்தம் – 8
  24. புதன்
  25. வெள்ளி
  26. பூமி
  27. செவ்வாய்
  28. வியாழன்
  29. சனி
  30. யுரேனஸ்
  31. நெப்டியூன்
  32. புதன்:
    🌙 சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்
    🌙 சூரியனை வேகமாக வளம் வரும் கோள்
    🌙 துணைகோள் இல்லாத கோள்
  33. வெள்ளி:
    🌙 பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்
    🌙 புவியின் இரட்டை பிறவி என்று அழைக்கப்படும் கோள்
    🌙 மிகவும் வெப்பமான கோள்
    🌙 தன்னைதானே மெதுவாக சுழலும் கோள்
    🌙 துணைகோள் இல்லாத கோள்
  34. பூமி:
    🌙 உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்
    🌙 ஒரே ஒரு துணைகோள் உள்ளது. (நிலவு)
    🌙 மனிதர்கள் வாழும் ஒரே கோள்
    🌙 23 1/2° சாய்ந்து சூரியனை சுற்றுகிறது.
  35. செவ்வாய்:
    🌙 சிவப்பு கோள் என்று அழைக்கப்படும்.
    🌙 இரண்டு துணை கோள் கொண்டது.
    🌙 இரண்டு துணை கோள் பெயர் (ஃபோபாஸ், டெய்மாஸ்)
  36. வியாழன்:
    🌙 மிகப்பெரிய கோள்
    🌙 16 துணை கோள்களை கொண்டது
    🌙 மிகப்பெரிய துணை கோள் பெயர் – கனிமிட்
    🌙 2° அளவு சாய்ந்து சூரியனை சுற்றுகிறது
    🌙 பருவகால மாற்றங்கள் நிகழாத கோள்
  37. சனி:
    🌙 அதிக துணை கோள்களை கொண்டது
    🌙 துணை கோள்கள் எண்ணிக்கை –
    🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் – கலிலியோ கலிலி
    🌙 அழகிய வளையங்கள் உள்ள கோள்
    🌙 மஞ்சள் நிற கோள்
  38. யுரேனஸ்:
    🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் – வில்லியம் ஹேர்ச்செல் (13.03.1781)
    🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை – 15
    🌙 98° சாய்ந்து சூரியனை சுற்றி வருகிறது.
    🌙 பச்சை நிற கோள்
    🌙இக்கோளை சுற்றி வளையங்கள் உள்ளது.
  39. நெப்டியூன்:
    🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் – J.G. கேலி
    🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை – 8
    🌙 தற்போது கடைசியாக உள்ள கோள்
  40. மேகங்கள் :-
    மேகங்கள் உயரம் பொறுத்து எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது – 4
  41. கீழ்மட்ட மேகங்கள்
  42. இடைமட்ட மேகங்கள்
  43. உயர்மட்ட மேகங்கள்
  44. செங்குத்து மேகங்கள்
  45. கீழ்மட்ட மேகங்கள்:
    ☁ இதன் உயரம் – 5000 மீ
    ☁ இம்மேகத்திற்கு எவ்வாறு அழைப்படுகிறது – கீற்று மேகங்கள்
    ☁ இம்மேகம் வேறுபெயர் – சிரஸ்
    ☁ இவ்வகையான மேகங்கள் ஒருபோதும் மழை தராது
  46. இடைமட்ட மேகங்கள்:
    ☁ இது கடல் மட்டத்தில் இருந்து 2000 மீ உயரம் வரை இருக்கும்
    ☁ இம்மேகத்திற்கு வேறுபெயர் – படை மேகங்கள் (தாழ் மேகங்கள்)
    ☁ ஸ்ரேடஸ் என்றும் அழைக்கப்படும்
    ☁ இம்மேகம் அடர் சாம்பல் நிறம் கொண்டது
  47. உயர்மட்ட மேகங்கள்:
    ☁ கடல் மட்டத்தில் இருந்து 12,000 மீ வரை இருக்கும்
    ☁ வெடித்த பருத்து போன்று காணப்படுகிறது.
    ☁ அணியணியாக காணப்படும்.
    ☁ வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது – திரள் மேகங்கள்
    ☁ மின்னல், இடி மற்றும் மழை கொடுக்கும் மேகங்கள்
    ☁ கியூமிலஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
  48. செங்குத்து மேகங்கள்:
    ☁ வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது – கார்படை மேகங்கள்
    ☁ இதன் நிறம் – கருமை (அ) சாம்பல்
    ☁ ஆலங்கட்டி மழை பெய்ய காரணமான மேகம்
    ☁ நிம்பஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
  49. காடுகள் :-
    🌳 காடு என்ற சொல் ஃபாரிஸ் என்ற இலத்தீன் மொழியில் இருந்து வந்தது.
    🌳 காடுகளின் வகைகள்:-
  50. வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்
  51. வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்
  52. குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்
  53. பாலைவனத் தாவரம்
  54. மாங்ரோவ் காடுகள்
  55. மலைக்காடுகள்
  56. வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள்:
    🌳 ஆண்டிற்கு மழைபொழிவு 200 செ.மீ. அதிகமாக இருக்கும்
    🌳 60 மீ உயரம் வரை வளரக் கூடியவை
    🌳 காணப்படும் மரங்கள் – ரோஸ், எபானி, மகோகனி, ரப்பர், சின்கோனா, மூங்கில், லயானாஸ்
    🌳 காணப்படும் இடங்கள் – அந்தமான் நிக்கோபார், மேற்கு தொடர்ச்சி மலைகள், அஸ்ஸாம், ஒடிசா
  57. வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்:
    🌳ஆண்டிற்கு மழை அளவு 70 செ.மீ. முதல் 200 செ.மீ. வரை
    🌳 கோடைகாலத்தில் சுமார் 6 முதல் 8 வாரங்கள் வரை இலைகளை உதிர்த்து விடுகிறது
    🌳 இதனால் இதற்கு இலையுதிர் காடுகள் என்று வேறு பெயரும் உண்டு.
    🌳 காணப்படும் மரங்கள் – தேக்கு, சால், சந்தனம், சிகம், வேட்டில், வேப்பமரம்
    🌳 காணப்படும் பகுதிகள் – இமயமலை அடிவாரத்தில், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்கு தொடர்ச்சி மலைகள், ஒடிசா
    🌳 வறண்ட பருவகாற்று காடுகள் காணப்படும் பகுதி – பீகார், உத்திர பிரதேசம்
  58. குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்:
    🌳 ஆண்டிற்கு மழை அளவு – 75 செ.மீ. குறைவாக இருக்கும்
    🌳 காணப்படும் மரங்கள் – அக்கேசியா, பனை, கள்ளி, கயிர், பாபூல், பலாஸ், கக்ரி, கஜீரி
    🌳 காணப்படும் பகுதிகள் – குஜராத், இராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா
  59. பாலைவனத் தாவரம்:
    🌳ஆண்டிற்கு மழை அளவு – 25 செ.மீ. குறைவாக இருக்கும்
    🌳 காணப்படும் மரங்கள் – அக்கேசியா, ஈச்சமரம், பாபுல்
    🌳 இவ்வகையான மரங்கள் உயரம் – 6 லிருந்து 10 மீ உயரம் வரை மட்டுமே இருக்கும்
    🌳 பாபுல் மரங்கள் கோந்து பொருட்கள் அதன் பட்டைகள் தோல் பதனிடுவதற்கு பயன்படுகிறது.
    🌳 காணப்படும் பகுதிகள் – ராஜஸ்தான், கட்ச் பகுதி, குஜராத் தில் உள்ள சௌராஷ்டிரா, தென் மேற்கு பஞ்சாப்
  60. மாங்குரோவ் காடுகள்:
    🌳 இவ்வகையான காடுகளுக்கு வேறு பெயர்கள் – சதுப்பு நில காடுகள், ஓதக் காடுகள், ஹலோபைட் படைகள்
    🌳 காணப்படும் மரங்கள் – சுந்தரி மரங்கள்
    🌳 காணப்படும் பகுதிகள் – கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி டெல்டா பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள்
    🌳 மேற்கு வங்காளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது – சுந்தரவனம்
  61. மலைக்காடுகள்:-
    🌳 இரண்டு வகை:
  62. இமயமலைத்தொடர் மலைக்காடுகள்
  63. தீபகற்ப பீடபூமி மலைக்காடுகள்
  64. இமயமலைத்தொடர் மலைக்காடுகள்:-
    🌳 1000 மீ முதல் 2000 மீ வரை காணப்படும் மரங்கள் – ஓக், செஸ்நெட்
    🌳 1500 மீ முதல் 3000 மீ வரை காணப்படும் மரங்கள் – பைன், டியோடர், சில்வர், பீர், ஸ்பூருஸ், செடர்
    🌳 3600 மீ மேல் பகுதியில் வளரும் மரங்கள் – சில்வர்ஃபிர், ஜுனிபெர்ஸ், பைன், பிர்ச்சஸ், மோசஸ், லிச்சன்ஸ்
  65. தீபகற்ப மலை காடுகள்:
    மூன்று வகை படும்.
  66. மேற்கு தொடர்ச்சி மலைகள்
  67. விந்திய மலைப்பகுதி
  68. நீலகிரி மலைப்பகுதி
    🌳 நீலகிரியிலுள்ள வெப்பமண்டல காடுகள் வேறுபெயர் – சோலாஸ்
    🌳 சோலாஸ் வகை தாவரங்கள் சாத்பூரா மற்றும் மைக்கலா மலைதொடரில் காணப்படும்
    🌳 காணப்படும் மரங்கள் – மேக்னோலியா, லாரல், சின்கோனா, வேட்டில்
  69. தலகாற்றுக்கள் :-
    💨 மிஸ்ட்ரல் – ஃபிரான்ஸ்
    💨 போரா – யூகோஸ்லாவிய
    💨 பாம்ப்ரியோ – அர்ஜென்டினா
    💨 பிரிக்ஃபீல்டர் – ஆப்ரிக்கா
    💨 ஹர்மட்டான் – கினியா கடற்கரை
    💨 நார்வெஸ்டர் – நியூசிலாந்து
    💨 பார்ன் – ஸ்விச்சர்லாந்து
    💨 சிமூன் – ஈரான்
    💨 சாண்டாஅனா – கலிஃபோர்னியா
    💨 காம்சின் – எகிப்து
    💨 லிவிச்சி – ஸ்பெயின்
    💨 புழுதிப்புயல் – சஹாரா
    💨 வில்லி வில்லி – ஆஸ்திரேலியா
    💨 பிளசார்ட் – துருவபகுதி