Home TN TET 6TH-12TH SCIENCE BOX NOTES-TET/TNPSC/TNUSRB

6TH-12TH SCIENCE BOX NOTES-TET/TNPSC/TNUSRB

0

போட்டித் தேர்வுக்கு அறிவியல் பாடத்தினை படிப்பது எப்படி?

6-வது முதல் 10-வது வரை: இந்தப் பாடப்புத்தகங்களை வரி விடாமல் படிப்பது அவசியம்.

படிக்கும் முறை (Smart Study)

சிறு குறிப்புகள் (Short Notes): ஒவ்வொரு பாடத்தைப் படிக்கும்போதும் முக்கியமான சூத்திரங்கள் (Formulas) மற்றும் அறிவியல் பெயர்களை ஒரு குறிப்பேட்டில் எழுதி வையுங்கள். முக்கியமான வரிகளை அண்டர்லைன் செய்து கொள்ளுங்கள். அண்டர்லைன் செய்த பின்னர் அதற்கு கீழே 1,2,3 என எண்களை இட்டுக் கொள்ளுங்கள்.. எப்படியும் ஒரு பாடத்திற்கு 75-150 வரை அண்டர்லைன் செய்து எண்கள் இட்டு இருப்பீர்கள். அடுத்த முறை படிக்கும் பொழுது அண்டர் லைன் செய்தவற்றை மட்டும் படித்தால் போதுமானது.

படம் வரைந்து கற்றல்: குறிப்பாக உயிரியலில் பாகங்களைக் குறிக்க படம் வரைந்து படித்தால் எளிதில் மறக்காது.

கணக்கீடுகள் (Problems): இயற்பியலில் உள்ள சிறிய கணக்கீடுகளைப் பயிற்சி செய்து பாருங்கள்.

திருப்புதல் மற்றும் மாதிரித் தேர்வுகள்
வாரத்திற்கு ஒருமுறை படித்தவற்றைத் திரும்புப் பாருங்கள்.

அடிக்கடி Online Test அல்லது மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது உங்கள் வேகத்தையும் துல்லியத்தையும் அதிகரிக்கும்.

அறிவியலைப் பொறுத்தவரை வரி வரியாக படித்து மையக்கருத்தினை உட்கொண்டால் மட்டுமே தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான பதிலை வழங்க முடியும்

உங்களால் வரி வரியாக படிக்க முடியவில்லையா?
அப்படி என்றால் கீழே வழங்கப்பட்டுள்ள ஒன் லைனர்-ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.. அதனை படித்த பின்னர் பள்ளி மாணவர்கள் வைத்துள்ள (EC,DON, DOLPHIN) கையேடுகளை வாங்கி அதில் உள்ள கூடுதல் வினாக்களை ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.

6TH-12TH BOX NOTES-TET/TNPSC/TNUSRB

DOWNLOAD HERE

error: Content is protected !!
Exit mobile version