
BEO தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?-BEO EXAM STUDY TIPS
🔹 முதலில் தேர்வுக்கான சிலபஸை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். சிலபஸை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.
🔹 ஒவ்வொரு தலைப்பிலும் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். எந்த அளவுக்கு ஒரு தலைப்பு பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்து வைத்துள்ளீர்களோ அந்த அளவுக்கு அந்த பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு பதில் அளிக்கலாம்.
🔹காலிப் பணியிடங்களை கருத்தில் கொள்ளக்கூடாது. எத்தனை பணியிடங்கள் வந்தாலும் நமக்கு தேவையான பணியிடம் ஒன்று மட்டுமே.. அதனால் அதை கருத்தில் கொள்ள கூடாது.சிலபஸை எந்த அளவு முழுமையான புரிதலோடு முடித்துள்ளோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். சிலபஸில் உள்ள ஒவ்வொரு பகுதியை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். மனப்பாடம் செய்தல் கூடாது.
🔹 தேர்வுக்கு எந்தெந்த பகுதியில் எவ்வளவு வினாக்கள் கேட்கப்படுகிறது என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.
🔹 இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் என்னென்ன என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.
🔹 யூடியூபில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள் வெற்றிக்கான சாத்தியங்கள் என்னென்ன என்பதனை கூறுகிறார்கள் அது போன்ற வீடியோக்களை பார்த்துக் கொள்ளுங்கள்.
🔹 இந்த தேர்வுக்கு தேவையான ஸ்டடி மெட்டீரியலை தயார் செய்து கொள்ளுங்கள்.
🔹முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பார்த்துக் கொள்ளுங்கள். எந்த வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருக்கிறது என்பதனை வரையறுத்துக் கொள்ளுங்கள்
🔹 PART-A தமிழ் தகுதி தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தமிழ் மட்டும் படித்தால் போதுமானது. ஆதலால் பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்
🔹PART-B UNIT-01 தமிழ் இலக்கிய வரலாறு பாடத்திற்கு இளங்கலை மற்றும் முதுகலை பாடப்புத்தகங்களை தயார் செய்து கொள்ளுங்கள். சிலபஸில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் வைத்து youtube மற்றும் google மூலமாக குறிப்புகளை தேடி எடுத்துக் கொள்ளுங்கள்.
🔹 இதேபோல் UNIT-02 ENGLISH LITERATURE இளங்கலை மற்றும் முதுகலை புத்தகங்களை தயார் செய்து கொள்ளுங்கள். சிலபஸில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் வைத்து குறிப்புகளை youtube மற்றும் google மூலமாக தேடி எடுத்துக் கொள்ளுங்கள்.
🔹 கணிதத்தைப் பொறுத்தவரை TNPSC தேர்வுகளில் கேட்கப்படும் 15 தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். யூடியூப் மற்றும் கூகுளில் தேவையான அளவுக்கு குறிப்புகள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
🔹 அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பகுதிக்கு 80% பாட புத்தக பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் ஆகையால் பள்ளி பாட புத்தகங்களை தயார் செய்து வைத்துக் கொண்டு அதனை முழுமையாக படியுங்கள்.
🔹 உளவியல் பாடப் பகுதிக்கு நாகராஜன் புத்தகத்தை படித்தால் போதுமானது.
🔹 நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு ஏதேனும் ஒரு youtube இணை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
🔹வாரம் ஒரு முறை படித்தவற்றை ரிவிஷன் செய்வதற்காக ஒதுக்க வேண்டும்.. அதேபோல் ஒவ்வொரு நாளும் படித்தவற்றை இரவு ஒரு மணி நேரம் ரிவிசன் செய்வது நல்லது
BEO தேர்வுக்கு படிக்க வேண்டியவை:
🔹தமிழ் தகுதி தேர்வு (30வினாக்கள்-50மதிப்பெண்கள்) (10ஆம் வகுப்பு தமிழ் மட்டும்)
🔹PART-I
▪️தமிழ் – Degree level
▪️ஆங்கிலம் – Degree level
▪️கணிதம் -Tnpsc maths
▪️அறிவியல் -6th-12th +Degree level
▪️சமூக அறிவியல் -6th-12th +Degree level
(110 மதிப்பெண்கள்)
🔹PART-II
▪️நடப்பு நிகழ்வுகள்+பொது அறிவு (10மதிப்பெண்கள்)
🔹PART-III
▪️உளவியல் (30 மதிப்பெண்கள்)
BEO PREVIOUS QUESTION-2023 ANALYSIS:
TAMIL LITERATURE -18
ENGLISH LITERATURE-18
MATHS-20
PHYSICS -3
CHEMISTRY -7
BOTANY -4
ZOOLOGY-8
HISTORY-12
POLITY-7
ECONOMICS-4
GEOGRAPHY -9
CURRENT AFFAIRS -10
EDUCATIONAL PSYCHOLOGY-30
TOTAL:150
BEO (Block Education Officer) தேர்வுக்கான கல்வித் தகுதியும் வயது தகுதியும் கீழே வழங்கப்பட்டுள்ளது:
🔹கல்வித் தகுதி (Degree with B.Ed)
▪️தேர்வில் பங்கேற்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு (UG/பி.ஏ./பி.எஸ்.சி. அல்லது சமமானது) முடித்திருக்க வேண்டும்
▪️கூடுதலாக, B.Ed. (பிஎட்) அல்லது LT டிப்ளமோ (Teacher Training Diploma) சான்றிதழும் அவசியம்
▪️மற்ற துறை பட்டங்கள் மட்டும் உள்ளவர்கள், தொடர் ஆசிரியர் பட்டப்படிப்போடு (B.Ed./LT Diploma) கூட சேர்த்து வைத்திருக்க வேண்டும்
🔹வயது தகுதி (General -40, others-45)
▪️பொதுப்பிரிவுக்கான வயது வரம்பு: குறைந்தது 21 வருடம் மற்றும் அதிகபட்சம் 40 வருடம் மற்றும் பழைய அரசு விதிகளின்படி SC, ST, BC, MBC ஆகியோருக்கு அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
▪️அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் முதலியோருக்கும் கூடுதல் வயது தளர்ச்சி கிடைக்கும்.