ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள்-TNPSC

0
318

TNPSC:
ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-

  1. எழுத்து இலக்கணம்
  2. சொல் இலக்கணம்
  3. பொருள் இலக்கணம்
  4. யாப்பு இலக்கணம்
  5. அணி இலக்கணம்
  6. எழுத்து இலக்கணம்:-
    🐓 எழுத்துக்கள் இரண்டு வகை – 2
  7. முதல் எழுத்து
  8. சார்பெழுத்து
  9. முதல் எழுத்து வகைகள் – 2 (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)
  10. உயர் எழுத்துக்கள் – 12
    🐓வகைகள் – 2
    குறில் எழுத்துக்கள் – 5 (அ,இ,உ,எ,ஒ)
    நெடில் எழுத்துக்கள் – 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)
  11. மெய்யெழுத்து – 18
    🐓 வகைகள் – 3
    🐓வல்லினம் – 6 (க,ச,ட,த,ப,ற)
    🐓மெல்லினம் – 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
    🐓இடையினம் – 6 (ய,ர,ல,வ,ழ,ள)
  12. சார்பெழுத்து வகைகள் – 10
  13. உயிர்மெய்
  14. ஆய்தம்
  15. உயிரளபெடை
  16. ஒற்றளபெடை
  17. குற்றியலுகரம்
  18. குற்றியலிகரம்
  19. ஐகாரக்குறுக்கம்
  20. ஔகாரகுறுக்கம்
  21. மகரக்குறுக்கம்
  22. ஆய்தகுறுக்கம்

2.சொல் இலக்கணம்:-
🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது – சொல்
🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் – மொழி, பதம், கிளவி
🐿 பதம் வகைகள் – 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)

  1. பகாபதம்:-
    🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் – பகாப்பதம்
    🐿 பகாபதம் வகைகள் – 4
  2. பெயர் பகாப்பதம்
  3. வினைப் பகாப்பதம்
  4. இடைப் பகாப்பதம்
  5. உரிப் பகாப்பதம்
  6. பகுபதம்:-
    🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் – பகுபதம்
    🐿 பகுபதம் வகைகள் – 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
    🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் – 6
  7. பொருள் பெயர்ப் பகுபதம்
  8. இடப் பெயர்ப் பகுபதம்
  9. காலப் பெயர்ப் பகுபதம்
  10. சினைப் பெயர்ப் பகுபதம்
  11. பண்புப் பெயர்ப் பகுபதம்
  12. தொழிற் பெயர்ப் பகுபதம்
    🐿 வினைப் பகுபதம் வகைகள் – 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)
    🐿 பகுபதம் உறுப்புகள் – 6
  13. பகுதி
  14. விகுதி
  15. இடைநிலை
  16. சந்தி
  17. சாரியை
  18. விகாரம்
    🐿 இடைநிலை வகைகள் – 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
    🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை – பெயர் இடைநிலை
    🐿 வினை இடைநிலை வகைகள் – 3
  19. இறந்த கால இடைநிலை
  20. நிகழ்கால இடைநிலை
  21. எதிர்கால இடைநிலை

3.பொருள் இலக்கணம்:-
📚 பொருள் இலக்கணம் வகைகள் – 2

  1. அகப்பொருள்
  2. புறப்பொருள்
    (1) அகப்பொருள்:-
    📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது – அகப்பொருள்
    📚 அகப்பொருள் உள்ள திணைகள் – 5
    📚 இதை ‘அன்பின் ஐந்திணை’ என்றும் கூறுவர்.
    📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
    📚 அகத்திணை கூறிய பொருட்கள் – 3
  3. முதற் பொருள்
  4. கருப்பொருள்
  5. உரிப்பொருள்
  6. முதற்பொருள்:
    📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை – நிலமும், பொழுதும்
    📚 நிலம் வகைகள் – 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
    📚 பொழுது வகைகள் – 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)
  7. கருப்பொருள்:-
    📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள் – 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)
  8. உரிப்பொருள்:-
    📚 குறிஞ்சி – காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
    📚 முல்லை – இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
    📚 முருதம் – ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
    📚 நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
    📚 பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் – 12

  1. வெட்சி – பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
  2. கரந்தை – பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
  3. வஞ்சி – பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
  4. காஞ்சி – பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.
  5. நொச்சி – பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
  6. உழிஞ்சை – பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
  7. தும்பை – இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
  8. வாகை – பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.
  9. பாடாண் – ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
  10. பொதுவியல் – வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
  11. கைக்கிளை – ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
  12. பெருந்திணை – பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு
  13. யாப்பிலகணம்:-
    📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் – 6
  14. எழுத்து
  15. அசை
  16. சீர்
  17. தளை
  18. அடி
  19. தொடை
  1. எழுத்து:-
    📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்
  2. அசை:-
    📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது – அசை
    📚 அசைகள் வகைகள் – 2 (நேரிசை, நிரையசை)
  3. சீர்:-
    📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது – சீர்
    📚 சீர்கள் எண்ணிக்கை – 30
  4. மாச்சீர் – 2
  5. விளச்சீர் – 2
  6. காய்ச்சீர் – 4
  7. கனிச்சீர் – 4
  8. பூச்சீர் – 8
  9. நிழற்சீர் – 8
  10. ஓரசைச்சீர் – 2
  11. தளை:-
    📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது – தளை
    📚 தளை வகைகள் – 4
  12. ஆசியத்தளை
  13. வெண்டளை
  14. கலித்தளை
  15. வஞ்சித்தளை
  16. அடி:-
    📚 அடி வகைகள் – 5
  17. குறளடி – இரண்டு சீர்கள்
  18. சிந்தடி – மூன்று சீர்கள்
  19. அளவடி – நான்கு சீர்கள்
  20. நெடிலடி – ஐந்து சீர்கள்
  21. கழிநெடிலடி – ஆறு சீர்கள்
  22. தொடை:-
    📚 தொடை வகைகள் – 5
  23. மோனைத் தொடை
  24. எதுகைத் தொடை
  25. முரண் தொடை
  26. இயைபு தொடை
  27. அளபெடைத் தொடை
  28. அணி இலக்கணம்:-
    📚 அணி என்பதன் பொருள் – அழகு
    📚 அணிகள் வகைகள் – 2
  29. சொல்லணி
  30. பொருளணி
    📚 சொல்லணி வருபவை – சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
    📚 பொருளணி வருபவை – உவமை, உருவகம்
    அணிகள் பின்வருமாறு:-
    📚 இல்பொருள் உவமையணி
    📚 ஏகதேச உருவக அணி
    📚 பிறிது மொழிதல் அணி
    📚 வேற்றுமை அணி
    📚 வஞ்சிப்புகழ்ச்சி அணி
    📚 இரட்டுற மொழிதலணி
    📚 சொற்பொருள் பின்வருநிலையணி
    📚 தற்குறிப்பேற்ற அணி
    📚 நிரல்நிறை அணி