மார்ச்.22:இன்றுஉலக தண்ணீர் தினம்!👉சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு 1992ஆம் ஆண்டு ரியோ ஜெனிரோவில் நடைபெற்றது. 👉தண்ணீருக்கான பிரச்னைகளைத் தீர்க்கவும், சரி செய்யவும் மார்ச் 22ஆம் நாளை ‘உலக தண்ணீர் தினம்’ என்று கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 👉அதனால் ஐக்கிய நாடுகளி்ன் பொது சபை 1993ஆம் ஆண்டு மார்ச் 22 முதல் உலக தண்ணீர் தினத்தை கொண்டாட வடிவமைத்துக் கொடுத்தது.👉நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.👉பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். 👉ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது.👉உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.👉ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.👉நீர் இன்றி அமையாது உலகு!