Home TN TET TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-21(10TH SOCIAL SCIENCE FULL)

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-21(10TH SOCIAL SCIENCE FULL)

0

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-21(10TH SOCIAL SCIENCE FULL)

TET PAPER-02 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் நமது தமிழ் மடல் இணையதளம் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.48 தேர்வுகள் கொண்ட இத்தேர்வு தொகுப்பானது அக்டோபர் 18 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும். முழு மாதிரி தேர்வில் 150 வினாக்களும் மற்ற தேர்வுகளில் 50 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் .  தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும் . காலை 7 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தேர்விற்கான லிங்க் வழங்கப்படும்.தேர்விற்கான  லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்.

இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று பயன் பெறுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

TEST BATCH SCHEDULECLICK HERE

JOIN OUR WHATSAPP GROUPCLICK HERE

JOIN OUR TELEGRAM-CLICK HERE

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-21(10TH SOCIAL SCIENCE FULL)

Welcome to your 10TH SOCIAL FULL TEST NEW

பெயர்
மாவட்டம்
மின்னஞ்சல்
1. கூற்று 1: ராஜா ராம்மோகன் ராய் பொருளற்ற சமய சடங்குகளையும், கேடுகளை விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார். கூற்று 2: கடந்த காலத்துடனான தொடர்பை ராஜா ராம்மோகன் ராய் பாதுகாக்க விரும்பவில்லை.

2. கூற்று 1: ராஜா ராம்மோகன் ராய் உபநிடதங்களுக்குத் தான் கொடுத்த விளக்கங்களின் அடிப்படையில் இந்துக்களின், மறைநூல்கள் அனைத்தும் ஒரு கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாகக் கூறினார். கூற்று 2: ராஜா ராம்மோகன் ராய் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலக் கல்வியும் மேலைநாட்டு அறிவியலும் அறிமுகம் செய்யப்படுவதை எதிர்த்தார்.

3. கூற்று: பாகிஸ்தான், மியான்மர், வங்காள தேசம், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது. காரணம்: இயற்கை நில அமைப்பு, காலநிலை, இயற்கைத் தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.

4. கூற்று: இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30' கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. காராணம்: இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.

5. கூற்று 1: இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது. கூற்று 2: கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது.

6. கூற்று: தீபகற்ப இந்தியாவில் குளிர்க்காலம் குளிரற்று காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது. காரணம்: இப்பகுதி முழுவதும் நிலவும் காலநிலை கடல்சார் ஆதிக்கத்தை கொண்டுள்ளது.

7. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.

8. ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எந்த திட்டத்தின் மூலம் 78 சதவீத நீர் பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா ப்பாசன வசதியை பெற்றுள்ளன?

9. கீழ்க்கண்டவற்றுள் இரும்புத்தாதுக்கள் எந்த நிறங்களில் காணப்படுகிறது? ⅰ) அடர் சாம்பல் ⅱ) வெளிர் மஞ்சள் ⅲ) அடர் ஊதா ⅳ) சிவப்பு

10. நாட்டின் மொத்த சுண்ணாம்பு படிவுகளில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?

11. ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஒரு நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்தை உணர்த்துவது எது?

12. ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCHP) உடன்படிக்கையின் கீழ் உலக வங்கி நிதியுதவியின் மூலம் அமைக்கப்பட்ட சாலைகள்?

13. பின்வரும் கூற்றுகளில் அரசு நெறியுறுத்தும் கோட்பாடுகள் பற்றி தவறானவை எவை? (1) நாட்டின் நிர்வாகத்திற்கு அவசியமானது. ஒரு அரசு சட்டத்தை இயற்றும் போது இந்தக் கொள்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். சமுதாய நலன் தருவதே இதன் நோக்கம். (2) இந்திய அரசியலமைப்புச்சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு- 36ல் இருந்து 51 வரை தரப்பட்டுள்ளது. (3) பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

14. பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை? 1. இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணை மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப்பகிர்வினைப் பற்றிக் கூறுகிறது. 2. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் குறித்து சட்டமியற்றும் பொழுது முரண்பாடு ஏற்பட்டால், மத்திய அரசு இயற்றும் சட்டமே இறுதியானது.

15. கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் சமூகப்பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத்தலைவர் எந்த அவையில் நியமிக்கிறார்?

16. நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும் மன்னிக்கவும் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ள இந்திய அரசியலமைப்புச்சட்டம்……………………..

17. ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, குடியரசுத்தலைவர் ஓர் ஆணையின் மூலம், ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கும் இந்திய அரசியலமைப்புச்சட்டம்…………..

18. கீழ்க்காணும் கூற்றுகளில் ஆளுநரின் சிறப்புரிமைகளில் தவறானவை எவை? 1. ஆளுநர் தனது பணிகள் மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. 2. ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை அவருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது. இவருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளைத் தொடர முடியாது. 3. ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

19. கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 – ஒரு பண்டத்தையோ அல்லது பணியையோ அங்காடியில் விற்கவில்லை எனில் அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்க முடியாது. கூற்று 2- எந்த ஒரு பண்ட, பணிகள் அங்காடியின் மதிப்பில் சேர்க்கப்படுகிறதோ, அது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகும்.

20. கீழ்க்கண்டவற்றுள் எது சரியான கூற்று ஆகும்? கூற்று 1 – தேநீர் என்பது இடைநிலை பண்டமாகும். கூற்று 2 – தேநீரில் இருக்கும் சர்க்கரையானது ஒரு இடைநிலை பண்டமாகும். கூற்று 3 – தேனீர் விற்பது என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும்.

21. சுமர் மற்றும் சிந்து சமவெளி நாகரீகத்தின் இடையே வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல் என்ற ஒரு வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளில் உருவாக்கியது என்று வாதிட்டவர் யார்?

22. கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 – உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் ஆரம்ப வடிவத்தை தொன்மையான உலகமயமாக்கல் என்று கிரேக்க காலத்தின்போது அழைக்கப்பட்டது. கூற்று 2 – வணிக ரீதியாக நகர்புற மையங்கள் கிரேக்க கலாச்சாரத்தில் மையத்தில் ஆர்வமாக சுற்றி வந்தன.

23. வேலுநாச்சியாரின் தோழி குயிலி எந்த ஆண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கையும் ராணுவ தளவாடங்களையும் அழித்தார்?

24. கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 – ராமநாதபுரத்தில் நிகழ்ந்த சந்திப்பின்போது, ஆங்கிலேயரின் கைது செய்யும் முயற்சியில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மனும், அவரது அமைச்சரான ஊமைத்துரையும் தப்பித்தனர். கூற்று 2 – வீரபாண்டிய கட்டபொம்மன் ஊமைத்துரையின் உதவியோடு இராமநாதபுரம் கோட்டையில் இருந்து தப்பித்தார். கூற்று 3 – வீரபாண்டிய கட்டபொம்மனின் அமைச்சரான சிவசுப்பிரமணியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

25. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 – கிழக்கிந்திய கம்பெனியால் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான சந்தையாக இந்தியாவை உருவாக்கியது. கூற்று 2 – ரசி போருக்குப் பின்னர் எல்லையை விரிவாக்கும் கொள்கையை ஆங்கிலேயர் பின்பற்றினர்.

26. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 – காலனி ஆதிக்க சுரண்டல் மற்றும் காலனிய அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய நிலைப்பாடு இரண்டு கூறுகளைக் கொண்டிருந்தது. கூற்று 2 – பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவின் நிலைப்பாடு இந்திய தேசியவாதத்தின் வடிவத்தில் தோன்றியது.

27. கூற்று 1: காந்தியடிகள், டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயில் பயணம் மேற்கொண்ட போது பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். கூற்று 2: காந்தியடிகள் டிரான்ஸ்வாலில் உள்ள இந்தியர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்கள் தங்களுடைய குறைகளை உறுதியுடன் வெளிப்படுத்தி களைவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

28. கூற்று 1: அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஏப்ரல் 10ஆம் நாள் ரௌலட் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூற்று 2: சீக்கியர்களின் அறுவடைத் திருநாளான பைசாகி திருநாளில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

29. கூற்று 1: சென்னை மகாஜன சபையின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்று கூடி தனிப்பட்ட விதத்திலும் அறைக்கூட்டங்கள் நடத்தியும் பொதுப் பிரச்சனைகள் குறித்து விவாதித்து தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரியப்படுத்தினர். கூற்று 2: மாகாணத்தின் பலபகுதிகளில் வாழும் மக்களிடையே பல்வேறு பொதுப் பிரச்சனைகள் குறித்த ஒருமித்த கருத்தை உருவாக்கி அதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவதே சென்னை மகாஜன சபையின் நோக்கமாக இருந்தது.

30. கூற்று 1: G. சுப்ரமணியம் தனது எழுத்துக்களின் மூலமாக தேசியத்தை முன்னெடுத்தவர் ஆவார். கூற்று 2: இந்தியா பொருளாதாரரீதியாக ஆங்கிலேயர்களால் சுரண்டப்படுவதைப் புரிந்துகொள்ள G. சுப்ரமணியம் செய்த பங்களிப்புகளில் அவர் நெளரோஜி மற்றும் கோகலே ஆகியோருக்கு இணையானவராவார்.

31. தமிழ்மொழி ஒரு செம்மொழி, எனவே சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை ஒரு வட்டார மொழியென அழைக்கக்கூடாதென முதன்முதலாக வாதாடியவர் யார்?

32. டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்க ஒருங்கிணைந்த நாள்……………….

33. "எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது." என்று உணவுப்பாதுகாப்பினை வரையறை செய்யும் அமைப்பு எது?

34. “சரிவிகித உணவு, பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல் சுகாதாரம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான உடல், பொருளாதார மற்றும் சமூக அணுகல்” என்பது ஊட்டச்சத்து பாதுகாப்பு என்று வரையறை செய்தவர்?

35. நேர்முக வரி என்பது " யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க வேண்டும்” என்று கூறியவர் யார்?

36. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது? ⅰ) தனி நபர்கள் அல்லாமல் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும். ⅱ) வரி ஏய்ப்பு பெரும்பாலும் வரி செலுத்துவோர் தங்கள் வரி பொறுப்பைக் குறைக்க வரி அதிகாரிகளிடம் தங்களின் உண்மையான விவகாரங்களை வேண்டுமென்றே தவறாக சித்தரிப்பதை உட்படுத்துகிறது. ⅲ), குறைந்த வருமானம், இலாபங்கள் அல்லது ஆதாயங்களை உண்மையில் சம்பாதித்த தொகையை விட அறிவித்தல் அல்லது விலக்குகளை மிகைப்படுத்துதல் போன்ற நேர்மையற்ற வரி அறிக்கையையும் உள்ளடக்கியது.

37. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது? ⅰ) பொதுவாக மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது. ⅱ) நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருட்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும்.

38. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது? ⅰ) ஒரு பொருளாதாரத்தில் பிற உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உள்ளீடுகளை உருவாக்குவது அவசியம். ⅱ) வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிக்க உரங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற தொழில்களுக்கு உள்ளீடுகள் தேவைப்படுகிறது.ⅲ) உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பண்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சந்தை நிலவுகிறது.

39. சிறிய நிறுவனங்கள் இரண்டு காரணங்களால் முக்கியமானதாகக் கருதப்படுவதற்கான காரணம்/காரணங்கள்? ⅰ) அதிக அளவு உற்பத்தி ⅱ) இது பெரிய அளவிலான துறையை விட அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது ⅲ) குறைந்த எண்ணிக்கையிலான சலுகைப் பெற்றப் பின்னணியில் இருந்து ஏராளமான தொழில் முனைவோரை வெளிப்படுத்த அனுமதிக்கிறது

40. இந்தியாவின் சீனா உடனான நட்புறவு கிழக்கு நோக்கு கொள்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?

41. சார்க் கூட்டமைப்பை பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 – சார்க் கூட்டமைப்பு தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. கூற்று 2 – இது 6 நாடுகளை உறுப்பினராக கொண்டது. கூற்று 3 – இஸ்ரோ அமைப்பு சார்க் பிராந்தியத்திற்கான 'செய்தி தொடர்பு மற்றும் வானிலை ஆய்விற்காக ' சார்க் செயற்கைக்கோளை செலுத்த உள்ளது.

42. கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது? கூற்று 1 – ஐநா சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியா ஒரு நிரந்தர உறுப்பு நாடாக இருக்கிறது. கூற்று 2 – ஜி-20 நாடுகள், கிழக்காசிய உச்சி மாநாடு, BRICS கூட்டமைப்பு போன்றவற்றில் இந்தியா உறுப்பினர் நாடாக உள்ளது. கூற்று 3 – இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ளது.

43. சர்வதேச உறவுகள் பற்றி 'நாம் ஒருவரை முற்றிலும் சார்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது ஆனால் இவ்வுலகில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம் ' என்னும் கூற்று யாருடையது?

44.இந்தியா எந்த நாட்டுடன் போர்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தத்தை ( Strategic Partnership Agreement ) மேற்கொண்டுள்ளது?

45. 1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் யார்?

46. தகவல் தொடர்பு, இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ( Communication Compatibility and Security Agreement – COMCASA) இந்தியா எந்த நாட்டுடன் கையெழுத்திட்டுள்ளது?

47. கூற்று 1: சுதந்திரத்திற்குப் பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தெலுங்கு மொழி பேசும் பகுதிகள் மதராஸ் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. கூற்று 2: இப்பிரிவினைக்கு பிறகு மதராஸ் மாகாணத்தில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.

48. மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள்………………..

49. தவறான இணையைத் தேர்ந்தெடு. (தமிழ்நாட்டின் எல்லைபுற பகுதிகள்)

50. கூற்று 1: தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது. கூற்று 2: இப்பகுதி கிரெட்டேசியஸ் காலத்தில் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியிலிருந்து உருவான ஒரு பகுதியாகும்.

error: Content is protected !!
Exit mobile version