TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-10(8TH GEOGRAPHY FULL)

0
2405

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-10(8TH GEOGRAPHY FULL)

TET PAPER-02 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் நமது தமிழ் மடல் இணையதளம் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.. முழு மாதிரி தேர்வில் 150 வினாக்களும் மற்ற தேர்வுகளில் 50 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் .  தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும் . காலை 7 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தேர்விற்கான லிங்க் வழங்கப்படும்.தேர்விற்கான  லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்.

இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று பயன் பெறுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

TEST BATCH SCHEDULECLICK HERE

JOIN OUR WHATSAPP GROUPCLICK HERE

JOIN OUR TELEGRAM-CLICK HERE

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-10(8TH GEOGRAPHY FULL)

Welcome to your 8TH GEOGRAPHY

பெயர்
மாவட்டம்
மின்னஞ்சல்
1. கூற்று 1 – படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை. கூற்று 2 – படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.

2. உலகின் மிகப்பழமையான படிவுப்பாறைகள் ______________ ல் கண்டுபிடிக்கப்பட்டன.

3. கூற்று 1: மண்ணின் கூட்டுப் பொருள்களான கனிமங்கள், கரிமப் பொருள்கள், நீர் மற்றும் காற்று ஆகும். கூற்று 2: மண்ணின் கலவையானது இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறுபடுகிறது.

4. வேளாண்மையை மேற்கொள்ள இயலாத மண் __________

5. தீப்பாறைகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?

6. கூற்று 1: பாறைக்குழம்பு புவிப்பரப்பிற்கு கீழே பாறை விரிசல்களிலும், பாறைகளிலும் உடுருவிச் சென்று உறைந்து உருவாகும் பாறைகள் ஊடுருவிய தீப்பாறைகள் எனப்படும். கூற்று 2: இவை மெதுவாக குளிர்வதால் பேரிழைகளாக உருவாகும்.

7. உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர் __________

8. பொருத்துக 1. நைட்ரஜன் – a) 0.04% 2. ஆக்சிஜன் – b) 78% 3. ஆர்கான் – c) 21% 4. மற்றவாயுக்கள் – d) 0.97%

9. காலநிலை என்பது வளிமண்டலத்தின் வானிலை கூறுகளின் சராசரி தன்மையினை சுமார்………………… கணக்கிட்டு கூறுவதாகும்.

10. கூற்று 1 – வானிலையின் கூறுகளும் காலநிலையின் கூறுகளும் ஒன்றே ஆகும். கூற்று 2 – வானிலையும், காலநிலையும் ஒன்றே ஆகும்

11. வெப்பநிலை இடத்திற்கு இடம் மாற காரணிகளாய் உள்ளவற்றில் எது சரியானது ? I. புவியை வந்தடையும் கதிர்வீச்சின் காலத்தைப் பொருத்து மாறும் II. புவி வெப்ப கதிர்வீச்சின் அளவை பொருத்து மாறும்.

12. கீழுள்ள கூற்றுகளில் எது சரியானது? I. புவியின் வளிமண்டலம் சூரிய கதிர்வீசலை விட புவி கதிர்வீசலால் தான் அதிக வெப்பமடைகிறது. II. புவியின் வளிமண்டலம் புவியின் கதிர்வீசலை விட சூரியக்கதிர் வீசலால் தான் அதிக வெப்பமடைகிறது. III. புவி கதிர்வீசல் ஒளி பிரதிபலிப்பு மூலம் சூரிய வெப்பத்தை வளிமண்டலத்திற்கு செலுத்தி, வளிமண்டலத்தில் வெப்பத்தை ஏற்படுத்துகிறது.

13. நீராவியாதல் என்பது i) நீராவி நீராக மாறும் செயலாக்கம். ii) நீர் நீராவியாக மாறும் செயலாக்கம். iii) நீர் 100°C வெப்பநிலையில் கொதிக்கிறது. ஆனால் 0°C வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது. iv) ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.

14. ____________ ஆவியாதலின் எதிர்வினைச் செயலாகும்.

15. மழைப்பொழிவும், அதன் பல வகை வடிவ விபரங்களும். i) பொழிவு வானிலை அல்லது காலநிலையைச் சார்ந்திருக்கும் ii) பனிக்கட்டிகளும், நீர்த்துளிகளும் சேர்ந்து ஆலங்கட்டி மழை உருவாகிறது iii) மழைத்தூறல் கார்திரள் மேகங்களிலிருந்து உருவாகிறது iv) ஆலங்கட்டி மழை பெரிய உருண்டையான பனிக்கட்டிகளை கொண்டிருக்கும்.

16. பொருத்துக : 1. கடல்கள் – a). 0.001% 2. பனியாறுகள் – b) 96.54% 3. நிலத்தடி நீர்- c) 1.74% 4. மண்ணின் ஈரப்பதம் – d) 1.69%

17. புவியின் மேற்பரப்பில் உள்ள நீரின் தன்மை பரவல் இயக்கம் மற்றும் பண்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை கையாளும் அறிவியல்………….. எனப்படும்.

18. நீர் சுழற்சியில் சரியான நிகழ்வரிசை எது?

19. …………………. ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை ஊரக மக்கள் தொகையைவிட அதிகமானது.

20. கூற்று : இடம் பெயர்வு என்பது இருபுவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒருவகையான மக்கள் தொகை நகர்வாகும். காரணம் : ஊரகத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்தல் விளைவு நகரமயமாக்கல் ஆகும்.

21. உலக மக்கள் தொகையில் அதிக சதவீதம் மற்றும் சர்வதேச புலம் பெயர்ந்தோர் அதிக சதவீதம் கொண்ட மண்டலம்………………………….

22. சூழியல் இடப்பெயர்வு குறித்த சரியான கூற்று எது? I. இது இயற்கையான ஒன்றாகும். II. எரிமலைவெடிப்பு, நில அதிர்வு போன்றவை இவ்வகை இடப்பெயர்வுக்கான முக்கிய காரணிகளாகும். III. நீர்வளம், மாசற்ற நிலைகள் போன்றவை இடம்பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகளாக உள்ளது.

23. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? I. மக்களை தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற செய்யும் காரணிகள் உந்து காரணிகள் என்று அழைக்கப்படும். II. ஒரு இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் சாதக காரணிகள் என்று அழைக்கப்படும். III. வேலைவாய்ப்புக்கு ஏற்ற சூழல்கள் அமைந்திருக்கும் இடத்தை நோக்கி இடப்பெயர்வு ஆதல், இழு காரணியால் விளையக் கூடியவை. IV. வேலையின்மை காரணமாக இடப்பெயர்வு ஆதல் உந்து காரணியால் விளையக் கூடியவை.

24. அதிக ஊதியம் காரணமாக இடம்பெயர்தல் கீழ்க்கண்டவற்றுள் எந்த வகையைச் சார்ந்தது?

25. செர்னோபில் அணுக்கதிர் வீச்சு ஹீரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ___________ மடங்கு அதிகம்.

26. ஹசார்டு (Hazard) என்ற சொல் ஹாசர்ட் (Hasart) என்ற ____________ சொல்லிலிருந்து தோன்றியது.

27. இயற்கை சக்திகள் மற்றும் மனிதனின் தவறான செயல்பாடுகள் மூலம் விலையும் இடர்களில் தவறானது எது?

28. இந்தியாவில் எந்த நில அதிர்வு மண்டலத்தின் கீழ் இந்தியப் பகுதிகள் எதுவும் வகை படுத்தப்படவில்லை?

29. சூறாவளிப் புயல் குறித்த செய்திகளுள் தவறானது எது? 1. வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த பகுதிகளில் சூழலும் வலிமையான காற்று சூறாவளி புயல் காற்று எனப்படும். 2. சூறாவளிப் புயல்களின் போது காற்று வேகம் மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். நாள் ஒன்றுக்கு மழைப்பொழிவு சுமார் 50 சென்டி மீட்டர் வீதம் பலநாட்கள் பெய்யக்கூடும்.

30. செர்னோபில் அணு உலை விபத்து எந்த ஆண்டு நிகழ்ந்தது?

31. பின்வருவனவற்றுள் எது முதல் நிலைப் பொருளாதார நடவடிக்கை அல்ல?

32. உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் …………. வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

33. பொருத்துக: 1. முதன்மை பொருளாதார நடவடிக்கை – a) நீதித்துறை 2. இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை – b) வங்கித்துறை 3. சார்புநிலை பொருளாதார நடவடிக்கை – c) நூற்பாலைகள் 4. நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கை – d) கச்சா பருத்தி உற்பத்தி

34. மூலப்பொருட்களை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மூலம் பயன்படும் பொருளாக மாற்றம் செய்வது………… பொருளாதார நடவடிக்கையாகும்.

35. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? I. ஒரு பகுதியில் நிலவும் காலநிலை தொழிலகங்களின் அமைவிடத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். II. தொழிற்சாலை வளர்ச்சிக்கு தீவிர காலநிலை பொருத்தமானது அல்ல. III. பருத்தி நெசவாளி தொழிலுக்கு குளிர் ஈரப்பத காலநிலை சிறந்ததாகும்.

36. உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படும் டெட்ராய்ட் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

37. எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் ……………..

38. மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க. (i) சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர். (ii) கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும். (iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும். (iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன.

39. ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் ………………

40. கூற்று : அரோரா என்பது வானத்தில் தோன்றும் வண்ண ஒளிகள் ஆகும். காரணம் : அவை வளிமண்டலத்தின் மேலடுக்குக் காந்த புயலால் ஏற்படுகின்றன.

41. கூற்று : ஆப்பிரிக்காவின் நிலவியல் தோற்றங்களில் ஒரு முக்கிய அம்சம் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும். காரணம் : புவியின் உள்விசை காரணமாக புவியின் மேற்பரப்பில் உண்டான பிளவு.

42. கடகரேகை, புவி நடுக்கோடு மற்றும் மகரரேகை போன்ற மூன்று முக்கிய அட்ச ரேகைகளும் கடந்து செல்லும் கண்டம்.

43. உலகின் ஆழமான மற்றும் அதிக நீளம் கொண்ட நன்னீர் ஏரி………………….

44. உலகப்புகழ் பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி உருவாகியுள்ள ஆறு

45. ஆஸ்திரேலியா கண்டத்தைக் கண்டுபிடித்தவர்…………….

46. கூற்று : சிறிய அளவைப் புவிப்படங்களில் பிரதான தோற்றங்களை மட்டுமே காண்பிக்கப்படுகின்றன. காரணம் : குறைந்த அளவு இடமே உள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றை மட்டுமே காண்பிக்க இயலும்.

47. கூற்று : மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின் திறவுகோல் ஆகும். காரணம் : இவை குறைந்த அளவிலான படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன.

48. புவிப்படங்கள் புவியை …………………… சித்தரிக்கின்றன.

49. கூற்று : காணிப் புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமை பற்றிய விவரங்களை தெரிவிப்பதில்லை. காரணம் : இவை சிறிய அளவைகளைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.

50. வரைகலை அளவை ஒரு சிறிய ……………….. போன்று குறிக்கப்பட்டிருக்கும்.