1. திணை எத்தனை வகைப்படும்?
2. பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும். பால் எத்தனை வகைப்படும்?
3. உயர்திணையில் பால் எத்தனை பிரிவுகளை உடையது?
4. அஃறிணையின் பால் வகைகள்……
5. இடம் எத்தனை வகைப்படும்?
6. ஒன்றன்பாலுக்கு எடுத்துக்காட்டு……
7. வந்தீர், சென்றீர்கள் என்பது……..
8. இலக்கணம் முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும்……… எனப்படும்.
9. இலக்கணம் முறை இன்றி பேசுவதும் எழுதுவதும்……. எனப்படும்.
10. எத்தனை தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வருவது வழு ஆகும்?
11. இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது………. ஆகும்.
12. வழுவமைதி எத்தனை வகைப்படும்?
13. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாக எடுத்துக்கொள்ளப்படுவது…
14. உவப்பின் காரணமாக பெண்பால் ஆண்பாலாக எடுத்துக் கொள்ளப்படுவது………
15. இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான் என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?
16. குயில் கத்தும் என்பது……….
17. மொழியின் வளர்ச்சி என்பது வினவு பதிலும் விடை அளிப்பதிலும் கூட இருக்கிறது என்று கூறியவர்……….
18. வினா எத்தனை வகைப்படும்?
19. விடை எத்தனை வகைப்படும்?
20. ஐயம் நீக்கி தெளிவு பெறுவதற்காக கேட்கப்படுவது?
21. தான் விடை அறிந்திருந்தும் அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது?
22. ஒரு செயலை செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது…….
23. தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது……….
24. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது………
25. பிறருக்கு ஒரு பொருளை கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது……….
26. வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதை கூறல்………..
27. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாக கூறும் விடை………….
28. வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவை கேட்பது………
29. வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததை கூறல் என்பது………
30. செய்யுளில் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு……….. எனப்படும்.
31. வினாவிற்கு விடையாக இனமான மற்றொரு விடையாக கூறல்……….
32. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
33. பாடலின் தொடக்கம் முதல் முடிவுரை வரை ஆற்று நீர் போக்கை போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால் அது………. எனப்படும்.
34. ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் வரிசையாக அமைந்து வருவது……….
35. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர் சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை அவ்வரிசை படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல்………..
36. செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராக கொண்டு பொருள் கொள்ளுதல்……….
37. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறி கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று கூட்டிப் பொருள் கொள்வது………
39. அன்பின் ஐந்திணைகள் அல்லாதது எது?
40. முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்பது எதற்கு உரியது?
41. நிலமும் பொழுதும் முதற் பொருள் எனப்படும்.
42. நிலங்கள் எத்தனை வகைப்படும்?
43. பொழுது எத்தனை வகைப்படும்?
44. ஓராண்டின் ஆறு கூறுகளை……….. என்கிறோம்.
45. பின் பணி காலம் என்பது……
46. மருதம் நிலத்திற்குரிய சிறு பொழுது என்ன?
47. குறிஞ்சி நிலத்திற்குரிய விலங்கு எது?
48. நெய்தல் நிலத்திற்குரிய யாழ் எது?
49. பாலை நிலத்திற்குரிய பண் எது?
50. முல்லை நிலத்திற்குரிய தெய்வம் எது?