கூடி வாழ்ந்தால் கோடி நன்மை…

0
756

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்…
🙏🙏🙏

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை…

Importants of team work…

ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் கூட்டுமுயற்சி அடித்தளமாக அமைகிறது. ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது. இந்த சக்தியை கூட்டு முயற்சியால் பெருக்கலாம்.

பல்வேறுபட்ட சிந்தனைகள், ஆசைகள், விருப்பு வெறுப்புகள் உள்ள பலதரப்பட்ட மனிதர்களை ஒன்றாக இணைத்து வாழ்க்கையின் வளர்ச்சியை நோக்கி அவர்களை இயக்குவதே கூட்டு முயற்சி ஆகும்.

TEAM என்கிற வார்த்தையின் விரிவாக்கம் ” Together each achieve more “ என்பதாகும்.

இணைந்து செயல்பட தேவையான பண்புகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்…

பரஸ்பர நம்பிக்கை
குழுவில் உள்ள அனைவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கை வைத்திருப்பது அவசியம். அதற்கு குழுவிற்கென சில முக்கிய விதிமுறைகளை உருவாக்கி அதனை அனைவரும் பின்பற்றுவது ஒருவர் மீது ஒருவருக்கு பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும்.

ஒருவருக்கொருவர் ஆதரவு

ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக செயல்படுவதே குழுவினுடைய முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.
ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்வது , பிரச்சனைகளை பொதுவாக்கி தீர்வு காண்பது, தொழில் நுணுக்கங்களை பகிர்ந்துகொண்டு குழுவின் மொத்த திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேறுவது, இப்படி எல்லாவற்றிலும் ஒருவருக்கு மற்றவர் உதவியாக செயல்படுவதே ஆதரவை குறிக்கிறது.

கருத்து பரிமாற்றம்
குழு அங்கத்தினர்களுக்கிடையே கருத்து பரிமாற்றம் சிறப்பாக நடைபெறுமேயானால் எந்த பிரச்சினையும் எழ வாய்ப்பே இல்லை என கூறலாம். ஒவ்வொருவரும் தான் நினைப்பதை நினைத்தவாறே பிறருக்குத் தெரிவிக்கும்போது மற்றவர்களின் மாற்றுக் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டு குழுவின் முடிவு எடுக்கப்படுமேயானால் கருத்து மோதல்களினால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்து விடலாம்.

அதே போல செய்யும் வேலையில் முக்கியமான தகவல்களையும் ஒருவருக்கொருவர் சரியாக பரிமாறிக்கொள்ளும் முறையை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அது சுமுகமான உறவுக்கு வழிவகை செய்யும். தகவல் தொடர்பு சரியாக இருக்கும்போது அனுமானத்தால் நேரும் தவறுகளுக்கு அவற்றைத் தொடர்ந்து எழும் பிரச்சினைகளுக்கு இடமே இல்லை. ஆகவே குழு அங்கத்தினர்கள் அனைவரும் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது அவசியம்.

இலக்கை நோக்கி செயல்படுதல்…
ஒவ்வொரு குழுவிற்க்கும் ஒரு குறிக்கோள் மற்றும் அதை அடைவதற்க்கான இலட்சியம் இருப்பது அவசியம். ஆகவே குழுவினுடைய இலட்சியம் என்ன என்பது ஒவ்வொரு அங்கத்தினரின் மனதிலும் தெளிவாக பதிந்திருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் இலக்கை நோக்கி செயல்படும் போது குழுவினுடைய முயற்சி வெற்றியாக மாறுகிறது.

சிக்கல்களை தீர்க்கும் திறமை…
ஒருவருடன் ஒருவர் இணைந்து வேலை செய்யும்போது கருத்துமோதல்கள், பிரச்சினைகள், சிக்கல்கள் வரலாம். அவ்வாறு பிரச்சினைகள் வரும்போது அனைவரும் கூட்டாக அப்பிரச்சினைகளைத் தீர்த்து முன்னேற வேண்டும்.

குழு அங்கத்தினரிடையே உள்ள உறவு
குழு உறுப்பினர்கள் அனைவரும் அவர்களிடையே உள்ள வேற்றுமைகளை பெரிதுபடுத்தாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும், புரிந்து கொள்ளும் மனப்பான்மையையும் வளர்த்து கொண்டு அன்பாகவும் இணக்கமாகவும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும். அனைவரும் ஒரே இலட்சியத்திற்க்காக ஒன்றினைந்து செயல்படுகிறோம் என்ற உணர்வும், அனைவரும் ஒரே குழு என்ற உணர்வு மேலோங்கி இருக்கும்போது குழு அங்கத்தினரிடையே உள்ள உறவு வலுப்பெறும்.

கட்டுப்பாடு
எந்த ஒரு குழுவிற்க்கும் , நிறுவனத்திற்கும் கட்டுப்பாடு என்பது அவசியம். குழுவினர் அனைவரும் அவரவர் கடமைகளையும் , பொறுப்புகளையும் உணர்ந்து கொள்ளும் போது கட்டுப்பாட்டை சிறப்பாக கொண்டு செலுத்த முடியும்.

ஆரோக்கியமான சூழல்
ஆரோக்கியமான வேலைச்சூழல் , குழுவினரின் மனதில் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும். அவ்வாறில்லாமல் பணிசூழல் மோசமாக இருந்தால் அது மனசோர்வையும், வெறுப்பையும் உண்டாக்கும்.

ஆகவே சுற்றுப்புறச் சூழ்நிலை பொருத்தமாகவும், சரியாகவும் அமைந்திருக்க வேண்டும். ஒரு தனிமனிதனோ ஒரு குழுவோ திறம்பட செயல்பட வேண்டுமென்றால் நல்ல வேலைசூழல் மிகவும் அவசியம்.

நன்றி..

வாழ்க வளமுடன்🙏