Home கல்வி செய்திகள் மாவட்ட ஆசிரியர் கலந்தாய்வு பணி மூப்பு பெயர் பட்டியல்|District Teachers Transfer Seniority List 2022

மாவட்ட ஆசிரியர் கலந்தாய்வு பணி மூப்பு பெயர் பட்டியல்|District Teachers Transfer Seniority List 2022

0

மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியல் என்று பரவி வரும் பட்டியல் சரியானதா?
இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் என 131 பக்க PDF File அனைத்து குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

அப்பட்டியலில்,

1.மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

  1. 2.பிற மாவட்டத்திற்கு

என்ற இரு விருப்பங்களைத் தேர்வு செய்து விண்ணப்பித்தோரின் பெயர்கள் மட்டுமே உள்ளது. ஆனால், மாறுதல் விண்ணப்பம் அளித்த போது,

  1. 1.ஒன்றியத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு
  2. 2. மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு
  3. 3. ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு
  4. 4. பிற மாவட்டத்திற்கு

என்ற 4 விருப்பத் தேர்வுகள் இருந்தன. இதில், ஒன்றிய / மாவட்ட அளவிலான கலந்தாய்வுகளில் புதிய பள்ளிகளைத் தேர்ந்தெடுக்காத ஆசிரியர்களும் பிற மாவட்டத்திற்குச் செல்ல நடைபெறவுள்ள கலந்தாய்விற்கான முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறத் தகுதியானவர்கள்.

ஆனால், தற்போது பகிரப்பட்டு வரும் பட்டியலில் அத்தகையோரின் பெயர்கள் இல்லை. எனவே இது முழுமையான பட்டியல் அல்ல என்பதோடே முன்னுரிமையும் மாறக்கூடும் என்பதால், இது தவறான பட்டியலாக இருக்கலா என்ற கருத்து நிலவுகிறது.

அவ்வாறெனில் வேறொரு முழுமையான பட்டியல் வெளியிடப்படலாம் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.

மாவட்ட பணியிட மாறுதல் கலந்தாய்வு பெயர் பட்டியல்

error: Content is protected !!
Exit mobile version