ARTICLES-GENERAL ENGLISH-TNPSC/TET/10TH/11TH/12TH

0
603

ARTICLES-GENERAL ENGLISH-TNPSC/TET/10TH/11TH/12TH

ARTICLES- A, AN, THE

1. An எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும்? (ஒருமையை குறிக்கும் போது மட்டும் பயன்படுத்தவும்)

a, e, I, o, u ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் வந்தால் an பயன்படுத்த வேண்டும்

a-apple (ஆப்பிள்)

e-elephant (எலிபன்ட்)

i-ice (ஐஸ்)

o-orange (ஆரஞ்சு)

u- umbrella (அம்பர்லா)

மேற்கண்ட வார்த்தைகளில் சொல்லின் முதலில் Vowels எழுத்துக்கள் (a,e,i,o,u) வந்து, உச்சரிப்பின் போது vowel sound-இல் வந்துள்ளதால் an பயன்படுத்த வேண்டும்.

Exception:விதிவிலக்கு

ஆனால் சில நேரங்களில் Vowels எழுத்துக்கள் வந்த போதிலும் அதன் உச்சரிப்பில் மாற்றம் இருப்பதால் அந்த வார்த்தைகளுக்கு முன்பு an பயன்படுத்தக் கூடாது அதற்கு பதிலாக a பயன்படுத்த வேண்டும்.

european(யூரோப்பியன்), one(வொன்), useful(யூஸ்புல்) , university (யுனிவர்சிட்டி), unique (யூனிக்) , union (யூனியன்)

2. A- எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும்

ஒருமையை குறிக்கும் ஒரு வார்த்தை, உயிரெழுத்துகளில் (vowels) தொடங்காமல் மெய் எழுத்துக்களில் (consonants) தொடங்கினால் அதற்கு முன்பாக நாம் பயன்படுத்த வேண்டும்.

a, e, I, o, u ஆகிய எழுத்துக்களை தவிர மற்ற எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்பொழுது a பயன்படுத்த வேண்டும்

car, bat, monkey, dog, song, lion, pig….

Exception:விதிவிலக்கு

ஆனால் சில நேரங்களில் consonants எழுத்துக்கள் வந்த போதிலும் அதன் உச்சரிப்பில் மாற்றம் இருப்பதால் அந்த வார்த்தைகளுக்கு முன்பு a பயன்படுத்தக் கூடாது அதற்கு பதிலாக an பயன்படுத்த வேண்டும்.

hour, honest, honour- இதுபோன்ற h- இல் தொடங்கும் சொற்களில் h – silent ஆக இருப்பதால் நாம் இவற்றை அவர், ஆனஸ்ட் , ஆனர் என்றே உச்சரிக்க வேண்டும். இதனால் சொல்லி முதலில் vowel sound வருவதால் நாம் இவற்றிற்கு an பயன்படுத்த வேண்டும்.

மேலும் abbreviation வார்த்தைகளில் மெய் எழுத்துக்களில் (consonants) வார்த்தை தொடங்கியிருந்தாலும், அதன் உச்சரிப்பில் vowel sound வந்தால் அவருக்கு முன்பாக an பயன்படுத்த வேண்டும்.

M. L. A ( எம் எல் ஏ), M. A (எம் ஏ) , HMT ( எச் எம் டி)

3. The- எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும்

Plurals-the mangoes

Directions-the north

Planets-the Earth, the Moon

Musical instruments-the violin, the guitar

Superlative form-the biggest, the lowest

Rivers name- the Cauvery, the Nile

Mountains name-the Himalaya

Numerical number-the second, the third

World famous-the Tajmahal

முக்கியமாக முதல் வாக்கியத்தில் a, an பயன்படுத்தப்படும் சொற்களுக்கு அடுத்த வாக்கியத்தில் the பயன்படுத்த வேண்டும்

4.No article-a,an,the- மூன்றையும் பயன்படுத்தக் கூடாது

language- I speak tamil

sports/games name-I play cricket

proper noun- I go to chennai

uncountable noun- I buy sugar (sand, rice, hair..)