PG TRB தேர்வு எப்பொழுது நடைபெறும்?

0
606

முதுகலை ஆசிரியர் பணி தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராகி வரும் அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் வணக்கம்..

நம்மில் பலருக்கும், தற்காலிக முதுகலை ஆசிரியர் பணி நியமன அரசாணை வெளியிடப்பட்டதில் இருந்து PG TRB தேர்வு இருக்குமா..? அல்லது மே மாதம் வரை தள்ளிப் போகுமா என்ற எண்ணம் எழுந்துள்ளது.இதை பற்றி விரிவாக கீழே காணலாம்.

ஏன் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம்?

முதுகலை பட்டதாரி ஆசிரிய காலியிடங்கள், PG TRB தேர்வு மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில், அதற்கு எப்படிப் பார்த்தாலும் குறைந்தபட்சம் ஆறு மாத காலங்கள் வரை தேவைப்படலாம்.. ஜனவரி மாதம் தேர்வு வைத்தாலும் கூட மார்ச் மாசம் ரிசல்ட் வெளியிடப்பட்டு மே மாதம் தான் காலியிடங்களை நிரப்ப முடியும் என்கிற சூழலில் பொதுத்தேர்வு எழுத உள்ள 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி இந்த தற்காலிக பணியிடங்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றன. அந்த அரசாணையிலும் கூட இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்படும் வரை மட்டுமே இந்த தற்காலிக பணி செயல்படுத்தப்படும். முந்தைய ஆண்டுகளிலும் இதே போல தற்காலிக நியமனங்கள் நியமிக்கப்பட்டு பின்னர் தேர்வு மூலம் நிரந்தர பணியிடங்கள் நியமிக்கப்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

தேர்வு இருக்குமா?

ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் மாதத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் தேர்வு தள்ளிப் போகலாமே தவிர நடைபெறாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் தற்போது உள்ள காலியிடங்களோடு அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாக பணியிடங்கள் காலியாக உள்ளதால், அரசு கட்டாயமாக பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் தேர்வு 100% கண்டிப்பாக நடைபெறும்.

தேர்வு எப்பொழுது இருக்கலாம்?

அநேகமாக இந்த டிசம்பர் மாதம் இறுதிக்குள் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதில் இருந்து 60 நாட்களுக்குள் தேர்வு நடைபெறலாம். அதாவது ஜனவரி கடைசியில் அல்லது பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் தேர்வு நடத்தப்படலாம். அதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மே மாதத்திற்குள் பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்பிருக்கிறது. ஆதலால் தேர்வு இருக்குமா என்ற சந்தேகத்தை தூக்கி குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு, மற்றவர்கள் சொல்வதை காதில் வாங்காமல் இனி இருக்கும் காலங்களை மிக சிறப்பாக பயன்படுத்தி தேர்வுக்கு தயாராகுங்கள். நன்றி..