தமிழகத்தில் TN SET தேர்விற்கான அறிவிப்பு ஒன்று வாட்ஸ்அப் மற்றும் இணையதளம் வாயிலாக தமிழகம் முழுவதும் பரவலாக ஷேர் செய்யப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் TN SET தேர்விற்கான முழுமையான விபரங்கள் வெளியிடப்படாமல் இருந்தமையால் அந்த அறிவிப்பு பொய்யானது என்று ஒரு சிலர் கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் தேர்விற்கான தேதி மற்றும் விண்ணப்பிக்க குறிப்பிட்டிருந்த வலைதளம் இன்னும் இயங்காமல் இருத்தல் போன்றவற்றைை ஆதாரங்களாகக் கொண்டு அந்த தகவல் பொய்யான தாக இருக்கலாம் என்று கூறினர் மேலும் விண்ணப்பிக்க வேண்டிய தேதி ஜூன் 1 முதல் என்று குறிப்பிட்டிருக்கும் பொழுது ஜூன் 1ஆம் தேதி இந்த தகவல் வெளியிடப்படாமல் ஏன் ஜூன் 6ஆம் தேதி வெளியிடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் அந்த அறிவிப்பு உண்மையானது என்றும் அந்த அறிவிப்பில் முழுமையான விபரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை என்பதைப் பற்றியும் கீழ்க்கண்ட காணொளியில் PROFESSOR ACADAMY YOUTUBE CHANNEL வாயிலாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த காணொளியில் தேர்வுகள் பற்றிய பல செய்திகள் வழங்கப்பட்டுள்ளது.
(காணொளி கீழே)