ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள 13 மளிகை பொருட்கள் என்னென்ன?

0
377

ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 மற்றும் 13 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கொரோனா நிவாரண நிதி ரூ.2000 முதல் தவணை மே மாதம் வழங்கப்பட்ட நிலையில், 2-வது தவணை ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நாள் இன்று கொண்டாடப்பட உள்ளதால் ரேஷன் கடைகளில் 13 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

அதன்படி 2.11 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கோதுமை மாவு- 1 கிலோ, உப்பு- 1 கிலோ, ரவை- 1 கிலோ, சர்க்கரை- 500 கிராம், உளுத்தம் பருப்பு- 500 கிராம், புளி- 250 கிராம், கடலை பருப்பு- 250 கிராம், கடுகு- 100 கிராம், சீரகம்- 100 கிராம், மஞ்சள் தூள்- 100 கிராம், மிளகாய் தூள்- 100 கிராம், குளியல் சோப்பு 25 கிராம் – 1, துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 ஆகியவை ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட உள்ளது.

மேலும் கொரோனா நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டமும், இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. வரும் 5ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான தேதி, நேரத்திற்கு பயனாளர்கள் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன்கள், கார்டுதாரர்களின் வீடுகளில், நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.